குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

செய்வன திருந்தச் செய் சேரிடம் அறிந்து சேர் 
என்று மூதாட்டி ஔவையார் ஆத்தி சூடியில் கூறியுள்ளஅறிவுரைகளை மனதில் கொண்டு நாம் எந்நாளும் நமதுகடமைகளை முறையாகநேர்மையான வழியில்முழுமையாகச் செய்தல் வேண்டும்நல்லவர்களுடன்மட்டுமே சேர்ந்து பழக வேண்டும்அவ்வாறு நடந்தால்வாழ்வில் நமக்கு இடையூறுகள் வாரா
தற்கால உலகில் நல்லவர்களைக் காண்பது மிக அரிதாகஉள்ளதுகாரணம் பொருள் ஒன்றையே பெரிதாகக் கருதி,அப்பொருளையும் அதனால் கிடைத்திடும் சுகவாழ்வுக்கும்ஆசை மிகக்கொண்டு தன்மானத்தையும் நற்கொள்கைகளையும் இழக்கவும் தயங்காத கேடுகெட்ட சுபாவம் மனிதனைத் தொற்றிக் கொண்டதேயாகும்

செலவுகளைக் குறைத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் துர்நோக்கத்துடன் ஆற்று நீர்அனைத்திலும் ஆலைக் கழிவுகளைக் கலந்து வெளியேற்றும் பல தொழிற்சாலைகள் லஞ்சலாவண்யத்தின் மூலம் அரசின் அனுமதியுடன் தொடர்ந்து நடத்தப்படுவதால் ஆற்றுநீருடன் நிலத்தடி நீரும் விஷமாகிறது

இதன் காரணமாக ஏற்பட்ட சீரழிவு ஏதெனில்மக்களுக்குக் குடி நீர் கிடைக்காமல் இன்றுதிருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் பங்குபெறுவோர் முதல் தினசரி ஒவ்வொருவீட்டிலும் குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்கும் முரண்பாடான நிலை நிலவுகிறது.இத்தகைய நிலை தொடர்ந்தால் உலகில் மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிரினங்கள்எவையும் வாழ இயலாத கேடு விரைவில் ஏற்படும்அப்பொழுது இது போல் குறுக்குவழியில் பணத்தைத் தேடியவர்களும் இந்த அவல நிலைக்குட்பட்டு மடிவது உறுதி

நேர்மையற்ற வழியில் பணத்தைத் தேடுவோர் இன்றைய சமுதாயத்துக்கு விளைவிக்கும்கேடுகள் எண்ணற்றவை. "குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்ததாம்என்றகூற்றுப்படி இவர்கள் பிறரை அழிவுப்பாதையில் தள்ளுவதுடன் தானும் அவர்களுடன்சேர்ந்து மடிய நேரும் என்பதை அறியாது தவறு செய்கின்றனர்அத்தகையசுயநலவாதிகளை நீக்கிநாட்டை நல்லோர் பொறுப்பேற்று நடத்த வழி காண்பது மிகவும்அவசியம்
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா 
படம்மஹாதேவி
இயற்றியவர்பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசைஎம்.எஸ்விஸ்வநாதன்டி.கேராமமூர்த்தி
பாடியவர்டி.எம்சௌந்தரராஜன்
ஆண்டு: 1957
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்
... .. ..
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்
வெந்திடும் தோட்டக் காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் 
திருந்த மருந்து சொல்லடா

-தகவல்:கயல்விழி,பரந்தாமன் .

0 comments:

Post a Comment