வடிவேலுடன் இணையும் விமல்?


சுராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விமல், வைகைப் புயல் வடிவேலுடன் இணைந்து போலீசாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர் வகையறா படத்தை அடுத்து விமல் சற்குணம் இயக்கத்தில் களவானி 2 படத்திலும், முத்துகுமரன் இயக்கத்தில் கன்னிராசி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்தில் நடிகர் வடிவேலுடன் இணைந்து விமல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, அர்ஜூனுடன் இணைந்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த மருதமலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


 தகவல்: அகிலா,பரந்தாமன்.

0 comments:

Post a Comment