தெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]

வாணி போஜன் (Vani bhojan) ஒரு தமிழ் மாடல் மற்றும் நடிகை ஆவார். இவர் 150க்கு மேrற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஆஹா' [AAHAA] தொடரில் [2012] அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் 'மாயா' [MAYA] [2013], சன் தொலைக்காட்சியில் 'தெய்வமகள்' [THEYVA MAKAL][2013] ,சிதமிழ் தொலைக்காட்சியில் 'லட்சுமி வந்தாச்சு' [LADSUMI VANTHADSU] [2015]என நடித்து வருகிறார்.
'சத்தியா' என்ற பாத்திரத்தில் இவர் நடித்துக்கொண்டிருக்கும்  'தெய்வமகள்' சீரியல் இன்று மிக அதிகமாக பார்க்கப்பட்டு வருவதாக கணிப்பு ஒன்று கூறுகிறது.

ஆரம்ப வாழ்க்கை
ஊட்டியில் [1988/12/07]பிறந்தாலும்நீலகிரி மாவட்டம் குன்னூர்தான் வாணியின் சொந்த ஊர். அப்பா போஜன் ஒரு போட்டோகிறாவர், அம்மா பார்வதி ஒரு கிச்சின் எக்ஸ்பேட், வாணிக்கு ஒரு அண்ணனும் உள்ளார். ஊட்டியில் படிப்பு முடிந்ததும் கிங்ஃபிஷர் விமானத்தில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் இவர் பணிபுரிந்தார் அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நாயகியாகியுள்ளார்.

விளம்பரங்கள்
இவர் பச்சையப்பன் சில்க்ஸ், லைன் பேரீச்சை(Lion Dates), என். எஸ். (N.S) கூட்டுப்பெருங்காயம், போன்ற 150க்கு மேல் விளம்பரங்கள் படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள் 
சண் டிவி யினரின் சிறந்த நடிகைக்கான சண் குடும்ப விருதினை 2014 இல் பெற்றுக்கொண்டார். சிறந்த சின்னத்திரை நடிகர்களுக்கான விகடன் விருதினை 2017 இல் பெற்றுக்கொண்டார்.

யோகா
வாணி போஜன் யோகா கற்றுக் கொண்டுள்ளாராம். மலேசியாவில் உள்ள விண்மீன் டிவியில் யோகா நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார்.

 சினிமா 
சினிமாவில் நடிக்க சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அவற்றினை தவிர்த்து சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்தும் ஒரு நடிகை என்றால் அது வாணி போஜன் ஒருவராகவே இருக்கும். கலை  உலகில் அவர் மேலும்  வளர வாழ்த்துக்கள்.
 -தொகுப்பு: கயல்விழி,பரந்தாமன்.[S.L]


0 comments:

Post a Comment