நாளை அழகு பெறும்உதிர்ந்த பூக்களை எண்ணி வருந்திவிடாது
அதனையே உரமாக்கி
நாளை அழகு பெறும் நம்பிக்கையில்
நிமிந்து நிக்கும் தனி மரம் போல__ தமிழா!

நீயும் ஆயிரம்  இழப்புகளை
சந்தித்து இருந்தாலும்
ஆயிரம் சோதனைகள்
கடந்து வந்தாலும்
உன் உறுதியை
சூழ்நிலையுனைக்   கெடுத்தாலும்
உன் தன்மையை இழந்து
உன் நிலையை   வெளிப்படுத்தாதே!

மரத்தை பார்த்து பாடத்தை கற்று
உன் கண்ணீரை கொண்டு
மன சங்கடங்களை வெளியேற்றி
உன்னை சாந்தப்படுத்தி
உன்னில் உரம் சேர்
மரத்தின் பூக்கள் போல
உன்னுடத்தில் நாளை மலரும்
விடிவெள்ளி மலர்!

காலையடி அகிலன்

0 comments:

Post a Comment