காண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :

Theebam.com: காண்டம்-நாடி ஜோதிடம்:: காண்டம் வாசித்தல் என்ற நாடி ஜோதிடம் , ஒருவரின் பெருவிரல் இரேகைகளை வைத்தே அவரின் முழுப்பலனையும் காட்டவல்லது என்று கூறுகின்...

காண்டம்-நாடி ஜோதிடம்:
காண்டம் வாசித்தல் என்ற நாடி ஜோதிடம்ஒருவரின் பெருவிரல்இரேகைகளை வைத்தே அவரின் முழுப்பலனையும் காட்டவல்லது என்றுகூறுகின்றார்கள்  இவற்றைக் கேட்ட சிலர் முழுவதுமே சரியென்று திருப்திப்பட்டும் இருக்கின்றார்கள்பலரோ அது சுத்த அபத்தம் என்று புறம் தள்ளியும்இருக்கிறார்கள்இந்நவீன தொழில்நுட்பக் கலை ஓட்டத்தில்இவைஉணமைதான் என்று நிறுவப்படாத நிலையில்நிறுவல் வேண்டுவோர்இதைச் சரியென ஏற்றுக்கொள்ள மறுத்தே தீருவர்.
இக்கலைநம் பண்டைய சப்த ரிஷிகளால் வாய்மொழியப்பட்டுப் பின்னர்ஓலையில் பதிவேற்றப்பட்டதுஇவ்விடைக்காலத்தில் பல விடுத்தல்களும்,இடைச்செருகல்களும் நடைபெற்று இருக்கச் சாத்தியக்கூறுகள் இருப்பதால்,தற்போதைய பிரதி ரிஷிகளின் முழுமையான மூலப் பொருளைக்கொண்டிருக்க மாட்டாது என்பது வெள்ளிடை மலை.
எனினும்இப்படிச் சொல்லப்படும் வாக்கு உண்மையாகவே இருக்கும்பட்சத்தில்அது எந்த வகையில்என்ன காரணிகளால் சாத்தியமாகும் என்றுஒரு நாம் தற்சமயம் சரியென்று நம்பியிருக்கும் விஞ்ஞானரீதியானஅணுகுமுறையில் சற்று உற்று நோக்குவோம்.
முக்கியமாகஇதை இரண்டு விதமான அணுகுமுறையில் எடுத்துநோக்கலாம்:
1 . ஜோதிடரின் பிறர் உளமறிதல் வல்லமை.
2 . ரிஷிகளின் திரிகாலபல் பரிமாண ஞானம்.
1. பிறர் உளமறிதல்:
இவ்வெடுப்பில்ஏட்டில் அப்படி ஒன்றுமே எழுதப்படவில்லைசொல்பவர்கேட்பவரிடமிருந்தே தகவல்களை உணர்ந்துஅவருக்கே திருப்பிஒப்படைக்கிறார் என்று கொள்ளலாம்.
உலகில் தோன்றும் ஜீவராசிகள் எல்லாம் ஒரேவிதமானஅறிவுத்தன்மையைக் கொண்டு பிறப்பதில்லைமனிதரில்கோடியில்ஒருசிலர் அவர்களின் மூளைக் கலங்களில் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறானசில மாற்றங்களால்மற்றைய மனிதருக்கு இல்லாதஏதாவதுவித்தியாசமான ஆற்றல்களைக் கொண்டவராகப் பிறக்கலாம்இவர்களில்சிலர் மற்றயவர்களை உற்றுநோக்கியோஅவர்களுடன் பேசியோஅவர்களை அறிதுயிலாக்கி (hypnotism ), அவர்கள் கூறியோகூறாமலேயோஅவர்களின் மனதுள் இருக்கும் எண்ணங்கள்ஓட்டங்கள் எல்லாவற்றையும்கிரகிக்கக் கூடியவர்களாய் இருப்பர். (நினைவலைகளைப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளும் இவ்வாற்றல் mind reading , telepathy என்று வரும் காலத்தில்எல்லோருக்கும் இருக்கும்).  இப்படியானவர்கள் இவ்வல்லமையைப்பாவித்துபணம் சேர்க்கும் நோக்குடன் சாத்திரிமாராகவோசாமிமாராகவோமாறிவிடுவர்.
அத்தோடு இவர்கள் சொல்வது என்பது ஓலையில்எழுதப்பட்டிருக்கவில்லைஅவர்கள் கூறும் கவிதை வரிகள் அவர்களின்சொந்தப் படைப்பேஓலையில் (அது பழைய பிராமித் தமிழ் எழுத்துருவில்இருக்கின்றது என்று கூறப்படுவதால் அதில்இருப்பது எமக்கு விளங்காதுஎன்பர்அதன் ஒரு பிரதியைத் தந்தார்களேயானால் அதை நாம்மொழிபெயர்த்துப் பார்த்தால் வேறு விதமாக இருக்கும்.
மேலும்அவர்கள் கூற நினைப்பதை வெட்டு ஒன்றுதுண்டு இரண்டாகச்சொல்லாமல்மறைமுகமான சொற்தொடர்களைப் பாவித்துக் குழப்பிஅடித்து விடுவார்கள்அதில் நீங்கள் பலவிதமான அர்த்தங்கள் எடுத்து,உங்களுக்கு நடந்து முடிந்த சம்பவங்கள் பற்றி நியாயப்படுத்த முடியும்.உதாரணமாகஉங்கள் மரணம் பற்றிக் கேட்டால், ' அறுபதோடைந்து ஓடுடைஜந்தின் முடகு கால் விடுத்து வளமுடை விரல்களின் கூட்டும் குணமுடன்சேர கடுபுலன் முடிவில் சரண்தனில் மோசம்என்று கூறுவர்முடியுமானஅர்த்தத்தை எடுத்தக் கொள்ளுங்கள்பல இலக்கங்கள் உள்ளனகூட்டியோகழித்தோ விடையையும்எப்படி மரணிப்பீர்கள் என்பதையும்கண்டுகொள்ளுங்கள்.
ஒரு விடயத்தை நான் உங்களுக்கு இங்கு சொல்ல விரும்புகிறேன்பழம்காலத்தில் தமிழ் எழுதும்போது -கவிதையை மட்டுமே எழுதுவது வழக்கம்-சொற்களுக்கிடையில்வசனங்களுக்கிடையில்பந்திகளுக்கிடையில்இடைவெளி விடாது தொடர்ந்து எழுதுவர்எதுவித முற்றும்தரிப்பு,அரைப்புள்ளிகால்புள்ளிகேள்விவியப்புக் குறி எதுவுமே இருக்காது!எல்லாம் ஒரு 150 வருடத்தின் முன்புதான் ஆறுமுக நாவலாரல்ஆங்கிலத்தில் இருந்து இரவல் வாங்கப் பட்டதுயோசித்துப் பாருங்கள்,தொடர்ந்து இடைவெளியே விடாது எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களைக்கொண்டு எத்தனை விதமான வேறுபட்ட சொற்களை உருவாக்கிக் கருத்துச்சொல்லலாம் என்று.
இது ஒரு அணுகு முறை.
சரிஇல்லைஇல்லை .அது உண்மையாகவே ரிஷிகளால்  எழுதப்பட்டஉண்மையான கலைதான் என்று எடுத்துக்கொண்டால்அது எந்த வகையில்சாத்தியமாகும் என்று இரண்டாவது அணுகலில் பார்ப்போம்.
2 . ரிஷிகளின் பல்பரிமாணதிரிகால ஞானம்:
நமது மூளையானது மனிதனால் விளங்கிக் கொள்ளமுடியாத அளவுக்குநுட்பம் மிக்க நரம்புகள்கலங்களைக் கொண்டுள்ளதுஎமது நாளாந்தச்செயல்பாடுகளுக்கு மூளையின் 5% மான பகுதியினையே சாதாரணமாகப்பாவிக்கின்றோம்அறிவு ஞானிகள் 10 % க்குச் செல்லக்கூடும்சற்றேயோசித்துப் பாருங்கள்தற்சமயம் இந்தச் சின்ன அளவு மூளைப் பகுதியின்ஆற்றலுடனேயே இவ்வளவைச் சாதிக்கின்றோம் என்றால், 100% த்தையும்பாவித்தோமேயானால் நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அகாயசூரர்கள் ஆகிவிட மாட்டோமாஒரு 25  வருடங்களுக்கு முன்பு இருந்த 40MB hard drive with 1MB RAM கணணியோடுதற்போது வளர்ந்துகொண்டேஇருக்கும் கணனியின் ஆற்றலை ஒப்புட்டு நோக்குங்கள்.
நமது பண்டைய ரிஷிகளும் ஒருவிதமான அபூர்வ மூளைக் கலங்கள்கொண்டவர்களாகப் பிறந்துஒருங்கிணைந்த தியானம் மூலம் ஓர் உயரியஅறிவுடை நிலையைமூளை விருத்தியினாலேயோ அல்லது  நமக்கேஇன்னமும் தெரியாத ஒரு சக்தியினாலேயோ அடையப் பெற்றனர்இம்மாகாசக்தியானது அவர்களுக்கு அளப்பரிய பேராற்றலைக் கொடுத்தது.
சாதாரணமான மனிதர் புலன்களுக்கு நீளம்அகலம்உயரம்நேரம் என்றநான்கு பரிமாணங்கள் மட்டுமே புலப்படும்.ஆனால் நமக்குப் புலப்படாமல்,எமக்கு விளங்காமல் இன்னும் பல பரிமாணங்கள் உள்ளனஅவை எல்லாம்எங்களுக்குப் புலப்படவில்லை என்பதற்காக அவை இல்லை என்று ஆகிவிடாதுஆனால்,அந்த ரிஷிகள்  அதிகப்படியான பல பரிமாணங்களைகாணக் கூடிய ஆற்றலை அடைந்தனர்.  அவற்றை அவர்கள் உணர்ந்ததனால்,சிற்றறிவுடன் நாம் விளங்கி வைத்திருக்கும் நாலு பரிமாணங்களுக்கு உரியவரைவிலக்கணங்கள் எல்லாம் பொய் என்று கண்டனர்இந்த மேலதிகஉணர்வின்படி அளவுகள்நேரங்கள் எல்லாம் நாம் நினைக்கும் அளவுகளில்நிற்காதுஅவை முன்பக்கம் மட்டும் அல்ல பின் பக்கமாகவும் போகும்ஒருயுகம் ஒரு வினாடியில் கடக்கும்.  மூளையின் கிரகிப்புத் தன்மை பல மடங்குபெருகும்இவ்வழியில்அவர்கள் எல்லோரது முற்காலம்தற்காலம்,பிற்காலம் எல்லாம் இலகுவில்கணப்பொழுதில் போய்ப்போய் வந்தனர்.எல்லாவற்றையும் நினைவிலும் வைத்திருந்தனர். (சிறியதாய் ஒப்பிட்டுநோக்கவேண்டும் எனில்ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர்பாடியதாகக் அறியப்படும்தற்சமயம் கிடைத்துள்ள 4000 க்கும் அதிகமானதேவாரங்கள் எல்லாமே சங்கீத ராகங்கள் 27 க்கு அமையவும்ஒவ்வொரு 10 + 1 பாடல்களும் எதுகை மோனையுடன் மிகவும் கட்டுக்கோப்பான கவிஞயத்துடன் இருப்பது எவ்வாறுஅந்த மூன்று வயதுப் பாலகனுக்கு எப்படிஅந்த அறிவு வந்ததுஎன்னவோ ஏதோ நமக்கு இன்னமும் புரியாதஒன்றுதான் நடந்து இருக்கிறது).
அத்தோடுஅவர்கள் பலவேறு சமாந்தரப் பிரபஞ்சங்களுக்கும் (parallel  universe  - இது ஒரு கொள்கைதான்நினைத்தவுடன் சென்று வந்தனர்அங்குவாழ்ந்துகொண்டிருக்கும் என்உங்கள்மற்றும் அனைவரதும் முன்பின்சந்ததியினரை நேரில் கண்டு அவர்கள் சரித்திரங்களை எழுதி இங்கு வாழும்எங்களுக்கு அளித்தனர். (அதாவதுபல்வேறு பிரபஞ்சங்களில் ஒன்றில்இப்போதுதான் திருவள்ளுவர் பிறந்திருப்பார்இன்னொன்றில் நம் பூமியில்  9999 ம் ஆண்டில் பிறக்கப் போகும் திரு.ஞ்ல்ல்ம் பிறந்துவாழ்ந்துகொண்டிருப்பார்).
இப்படி அவர்கள் எழுதியதே நாடி ஜோசியம் ஆகிவிட்டது என்று கருதுவதுஇரண்டாவது அணுகுமுறை..
இறுதியாகநம்பவே முடியாத ஒன்றுஅது எப்படி உலகம் தொடங்கிய காலம்தொட்டு உயிர் வாழ்ந்தவாழ்ந்துகொண்டிருக்கும்இனி எக்காலமும்பிறக்கப்போகின்ற கோடானுகோடி மனிதர்களினதும் முழுமுழுச்சரித்திரத்தினையும் எழுத்து வடிவில் ஒரு சில பனம் ஓலைகளில்எப்படித்தான் அடக்கிக் கொண்டுஆளுக்காள் கையில் அதைவைத்துக்கொண்டு திரிகிறார்கள் என்று தான் தெரியவில்லைஇவ்வளவுதகவல்களையும் உண்மையில் சேர்த்து வைக்க வேண்டுமென்றால்இந்தப்பூமியளவுள்ள ஒரு பண்டசாலைக் கட்டிடம்தான் தேவைப்பட்டிருக்கும்;உலகில் உள்ள பனை மரங்களின் ஓலைகள் அத்தனையும் போதாமல்இருந்திருக்கும்அத்தோடுஓலையில் ஏற்கனவே எழுதப்பட்டபடிதான்எங்களுக்குக் கட்டாயம் நடக்கும் என்றால்ஏன்தான் பலவிதமானமுயற்சிகள் எடுத்துப் படிக்கவேண்டும்தொழில் தேட வேண்டும்தொழில்விருத்தி செய்யவேண்டும்அழகான பெண்ணைத் தேடவேண்டும்மணம்புரியவேண்டும்,  பிள்ளைகளுக்காக ஏங்கவேண்டும்படிக்கவைக்கவேண்டும்இறைவனைத் தொழுது அதைத் தாஇதைத் தா என்றுநச்சரிக்க வேண்டும்?
எனினும்பேராசை கொண்டு பணம் தேடி அலையும் மனிதரிடமிருந்துசிறிதளவு பணம் கறக்கஇந்தக் கலை மிகவும்மிகவும் உதவி புரிகிறதுஎன்பதுதான் உண்மை. எனவே அவர்கள் இவர்களை நாடலாம் .
ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்.

0 comments:

Post a Comment