எங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்?


இன்று ஆன்மீகம் என்ற பெரும் கடலுக்கு வழிகாட்டியான வழிபாடு  சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தைப் பலரும் மறந்து விட்டதாகவேதோன்றுகிறதுஆன்மீகம் அதற்காக   என்ற  பெயரில் அக்கிரமங்களும்கேலிக்கூத்துகளும் தினம் தினம்அரங்கேறிய வண்ணம் இருக்கின்றனமேஜிக் வித்தை காண்பிப்பவர்கள் சக்தி வாய்ந்த சாமியார்களாகவணங்கப்படுகிறார்கள்நான் தான் கடவுள் என்று யார் யாரோ பிரகடனம் செய்து கொள்கிறார்கள்அவர்களை ஓடிச் சென்று வணங்க மக்கள் கூட்டம் தயாராகவே இருக்கிறது.

இந்த தேசம் உண்மையான ஆன்மீகத்தின் பிரசவ பூமிஎத்தனையோ மதங்கள் இங்குஜனித்திருக்கின்றனஎத்தனையோ உண்மையான மகான்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்ஆன்மீகத்தேடல்களுடன் இங்கு வந்த எத்தனையோ மேலைநாட்டார் கூட தங்கள் தேடல்களுக்கு இங்கு விடைகண்டு இந்த தேசத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்அப்படிப்பட்ட இந்ததேசத்தில் இன்று நடக்கும் கூத்துகள் மனம் நோகவே வைக்கின்றன.

தெய்வானுபவத்தை உணர்ந்த துறவிகளுக்கு இந்த உலகத்தின் பொன்னும்பொருளும்புகழும் வெறும்தூசியேஎல்லையில்லாத பரம்பொருளைக் கண்டவர்களை எல்லைகளை உடையஅழிய முடிந்தஇந்த விஷயங்கள் என்றுமே ஈர்ப்பதில்லை. (பொக்கிஷமே கிடைக்கப்பெற்றவன் கிளிஞ்சல்களையும்கூழாங்கற்களையும் சேகரிக்க முற்படுவானா?) இதுவே உண்மையான துறவிகள்மகான்களுடையஅளவுகோல்இந்த அளவுகோலுக்கு உயர முடியாதவர்கள் சாதாரணமானவர்களே.

ஆன்மீகவாதிகளேஇன்றைய பெரும்பாலான சாமியார்கள்கடவுள்களாக பிரகடனப்படுத்திக்கொள்பவர்களை எல்லாம் இந்த அளவுகோலால் அளந்து தெளியுங்கள்சென்று வணங்குபவர்களிடம்வசூல் செய்பவர்கள்விளம்பரம் தேடுபவர்கள் எல்லாம் இன்னும் பொருளாசையும்புகழாசையும்துறக்க முடியாதவர்கள் தானேநம்மைப் போலவே பலவீனங்கள் உள்ளவர்களைப் பக்தியுடன் வணங்கஎன்ன இருக்கிறது?

இன்றைய சில சாமியார்கள் மேஜிக் செய்வதில் வல்லுனர்களாக இருக்கிறார்கள்மாயமாகஎன்னென்னவோ வரவழைத்துக் கொடுக்கிறார்கள்அவர்கள் எப்படி வரவழைக்கிறார்கள் என்பதுஆச்சரியமாக இருந்தால் கைதட்டி வாழ்த்தலாம்இதை எத்தனையோ மேஜிக் நிபுணர்களும் கூடசெய்கிறார்களேஅவர்களை எல்லாம் வணங்கி பக்தகோடிகளாக மாறுகிறீர்களாஇல்லையேஇதையே கடவுள் பெயரைச் சொல்லி ஒருவர் செய்து காட்டும் போது புளங்காகிதம் அடைந்து அவர்கள்பக்தர்களாக மாறுவது எதற்காகஅவர் கொடுக்கிற பொருள் தான் உங்களைக் கவர்ந்தது என்றால்அதை மந்திரத்திலிருந்து வரவழைத்தால் என்னபக்கத்து கடையிலிருந்து உங்களுக்கு வாங்கிக்கொடுத்தால் என்னஉண்மையான ஆன்மீகத்திற்கு சித்து வித்தைகள் தேவையில்லை.

சிலர் மதநூல்களைக் கரைத்துக் குடித்திருப்பார்கள்அதை சரளமாக மேற்கோள் காட்டுவார்கள்அதுவும் பாராட்டுக்குரியதேஆனால் அவர்களையும் வணங்கி வழிபடுவதற்கு முன் அவர்கள்காட்டுகிற மேற்கோள்கள் படி வாழ்கிறார்களா என்று கவனியுங்கள்மனப்பாடம் செய்வதெல்லாம்பெரிய விஷயமல்லஇன்றைய பள்ளிக் குழந்தைகள் கூட அதில் அதிசமர்த்தர்கள்கஷ்டமான பகுதிவாழ்ந்து காட்டுவது தான்நீங்கள் சாமியார்களாக வணங்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றுமுதலில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்பின் வணங்க முற்படுங்கள்.

உண்மையான ஆன்மீகம் என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள்படிப்படியாக ஆசைகளைஅறுத்தல்சுயநலமொழித்தல்அன்பே வடிவமாதல்விருப்பு வெறுப்பில்லாத சமநோக்குடன் இருத்தல்எளிமையாகவும் பணிவாகவும் இருத்தல் இவையெல்லாம் தான் உண்மையான ஆன்மீகத்தின்அடையாளங்கள்இவைகள் உள்ளனவா என்று தெரியாமல் ஒருவரை மகானாகவும்கடவுளாகவும்ஆக்கி விடாதீர்கள்ஆராய்ந்து தெளியாத நம்பிக்கை ஆபத்தானதுஎனவே ஆன்மீகம் என்ற பெயரில்ஏமாந்த சோணகிரியாக இருக்காதீர்கள்அப்படி இருந்தால் உங்களுக்கு ஆறறிவைத் தந்த ஆண்டவன்அதைப் பயன்படுத்தாத உங்களை மன்னிக்க மாட்டார்.
நன்றி:-என்.கணேசன்

0 comments:

Post a Comment