இராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:


உலகத்தமிழ்  மக்கள்குறிப்பாக  ஈழத் தமிழ் மக்கள்இலங்கையின் பூர்வீகக் குடிகள்யாரென்ற  ஆராய்வில்மகாவம்சம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் அதுஅப்பட்டமான கட்டுக்கதை  என்று தூக்கி வீசி விடுவார்கள்அது கிபி. 500 இல்வாழ்ந்த மகாதேர மகாநாமர் என்ற புத்த பிக்குவினால்அவர் காலத்திற்கு 1000வருடங்களுக்கு முன்பிருந்து அன்றுவரை இருந்த அரசியல் மாற்றங்கள் பற்றி ஒருஇடைவெளியும் இல்லாதுசங்கிலிக் கோர்வையாக விபரித்துக் கூறியுள்ளார்.தொழில்நுட்பம்  வளர்ந்துள்ள இக்காலத்தில்கூட அரசியலில் என்னநடைபெறுகின்றது என்பதை அறிய முடியாமல் இருக்கும்போதுஎப்படி இத்துறவிஅக்காலத்தில் இத்தகைய சக்திமிகு கணணியாக  இருந்திருக்க  முடியும்?  அத்தோடு,அப்போது வாழ்ந்த தமிழர்ஒரு மண் திடலினால் இணைக்கப்பட்டிருந்தஇலங்கையைக் கண்டு பிடிக்க முடியாமல் என்ன மாங்காயா பிடுங்கித் தின்றுகொண்டிருந்தார்கள்எங்கிருந்தோ இருந்து அடிபட்டுக் கரை சேர்ந்தவர்கள் மட்டும்,உள்நாட்டுத் தலைவியை மணந்தது போதாமல்மதுரை என்ற ஒரு ஊரை முதல்தரமாகவா கண்டுபிடித்துபாண்டிய இளவரசியை மீள்மனம் செய்துகொண்டனர்?  இலங்கை பௌத்த-சிங்களவர்களுக்கு  மட்டும்தான் என்பதை ஊன்றி நிலைநாட்டிப் பிக்கு எழுதினதை  அப்படியே இலங்கையில் பிஞ்சு வயதினிலே பிள்ளைகளுக்குஊட்டுவதனால்அவர்களுக்கு தமிழர் விரோத எண்ணம்  தானாகவே வளர்கின்றது.
இவற்றை எல்லாம் உணர்ச்சிகரமாக உரைத்துக் கொடி பிடிக்கும் நம்மவர்,இராமாயணக் கதையையும் அது நடந்த காலத்தையும் அறிந்தும்ஏன்தான்அதைமட்டும் உண்மையானது என்று பயபக்தியுடன் கேட்கிறார்கள்?
முதலில்கதைதான் யாவரும் அறிந்ததேதங்களைத் தேவர்கள் என்றுபிரகடனப்படுத்திய ஆரிய வைணவர்தென்னாட்டுத் திராவிட சைவர்களைக் கருங்குரங்குகள் என்று அழைத்துஅவர்களை  அடிமைகள் ஆக்கிவஞ்சனையால்அண்ணனைக் கொன்றுமரபு மீறித் தம்பியை அரனேற்றிஅவர்களை பலி கொடுத்து,இலங்கையின்  அப்போதைய எட்டப்பத்  தம்பியின் துணையுடன்இலங்கை  வாழ்சைவ மனிதர்களை - அவர்கள் அசுரர்களாம் - கொன்று எரித்தார்கள்சிலதத்துவங்களைப் போதிப்பதற்கு எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கின்றது அப்பா!ஏன்தான் மனிதனை மிருகங்கள் என்றும்அசுரர்கள் என்றும் மிதிக்க  வேண்டும்?வதைக்க வேண்டும்?
அடுத்ததாகஇராமாயண காலம்இராமன் வாழ்ந்த காலம்பின்னரைத் திரேதா யுகம்என்று கூறப்படுகிறதுஅதாவதுஇன்றிலிருந்து 1000 000 வருடங்களுக்கு முன்னர்.இன்னும் விளக்கமாகச் சொன்னால்நாம் இப்போது 4 வது யுகமாகிய கலியுகம் 5113வருடத்தில் இருக்கிறோம்வால்மீகி முனிவர் இராமாயணத்தை கி.மு. 500 - 400 இல்எழுதினார்கம்பர் கி.பி. 1100 - 1200 இல் மொழி பெயர்த்தார்.
நான்கு யுகங்கள் உள:
கிருத யுகம்         4 x 432 000 வருடங்கள்
திரேதா  யுகம்       3 x 432 000 வருடங்கள் *
துவாபர யுகம்      2 x 432 000 வருடங்கள்
கலி யுகம்              1 x 432 000 வருடங்கள்
சரி, 1000 000 வருடங்களுக்கு முன்பு நடந்தது என்று ஒரு இனமத விரோதி,  2500வருடங்களுக்கு முன்பு எழுதியிருப்பதை ஒரு தெய்வ நூலென்று எண்ணி,எங்களைக் கேவலப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் சம்பவங்களை நாங்களே பஜனைபோட்டுப் பாடிக்கொண்டிருப்பது அசிங்கமாகத் தெரியவில்லை?
ஒரு முழுமையான மனித உருவம் தோன்றியதே 200 000 வருடங்களின் முன்புதான்.முறையான உறுப்பியல்புகள் உருவாகியது  50 000 வருடங்களின் முன்னர்உந்த 1000 000 வருடம்,  இராமன்சீதை என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்!
இவற்றை எல்லாம் உணர்ந்த மனிதர்களாக அன்றாடம் செயல்படுபவர்கள்   திருப்தியும் சந்தோசமும் அடைகிறார்கள்.அந்த சந்தோசம்  கிடைக்காதோர் எல்லாம்இராமனை  வணங்கி முத்தியின்பம்  பெறுவாராக!
                 -- செ.சந்திரகாசன்

5 comments:

 1. vinothiny pathmanathanMonday, May 07, 2018

  dkTuesday, October 18, 2011
  திரு சந்திரகாசன் அவர்களுக்கு எனது வணக்கம் .
  மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற இதிகாசங்கள் உண்மையிலேயே நிஜமோ கற்பனையோ அந்த விவாதத்தினை விட்டு தனிமனித ஒழுக்கத்துனை மேம்படுத்துவதற்காகவே இது போன்ற கதைகள் முன்னோர்களால் எழுதப்பட்டுள்ளன.சாதாரண மனிதர்களை தீய வழியிலிருந்து நல்ல வழிக்கு இட்டுச் செல்லவே இதுபோன்ற இதிகாசங்களோ நீதிக்கதைகளோ தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.அதே போலத் தான் ஆலய வழிபாடுகளும் .இறைவழிபாடு நிச்சயம் தனிமனித ஒழுக்கத்தினை மேம்படுத்தியுள்ளது .அப்படிப்பார்த்தால் நல்ல விடயங்களை நாம் எடுத்துகொள்வதில் தவறேதும் இல்லையே. அத்துடன் கண்ணால் காணாத கடவுளை எவ்வளவு தூரம் நம்பி விட்டிருக்கிறோம். அதற்குத் துணையாக மூடப் பழக்கங்களும் .இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள் .

  ReplyDelete
 2. Tuesday, October 18, 2011
  ராமாயணம் என்ன நல்லதினை சொல்லித் தொலைத்ததென்று இதுவரை நான் புரிந்ததில்லை.
  சீதை என்ற பாத்திரத்தினை பார்த்தாலே அப்பெண்ணுக்கு இராமனால் நடந்த அநியாயங்கள் கொஞ்ச நெஞ்சமில்லை.
  இதிலை என்ன நல்லொழுக்கம் இருக்கிறது.

  ReplyDelete
 3. pathmanathan dkWednesday, October 19, 2011
  இராமாயணத்தில் என்ன நல்லொழுக்கம் இருக்கு என்ற உங்களின் கேள்விக்கு ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள்.

  ஒரு தடவை அரிச்சந்திர மாயான கண்டம் என்ற மேடைநாடகம் பல மேடைகளில் வெற்றிகரமாக மேடை ஏறிக்கொண்டிருந்தது .அந்த நாடகத்தினை பார்க்க மகாத்மாகாந்தியும் அவரது நண்பரும் ஒருநாள் போயிருந்தார்கள். நாடகத்தை பார்த்து விட்டு வெளியே வந்த மகாத்மாகாந்தி தன் நண்பரைப் பார்த்து இன்றைய இந்த நாடகத்தைப்பார்த்து உனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டார் .அவரோ அவசரத்துக்கு மனைவிய அடகு வைக்கலாம் அதுல தப்பொன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன் என்றார் .அதே நண்பர் காந்தியை பார்த்து நீங்களும் இந்த நாடகத்தை பார்த்தீர்களே உங்களுக்கு என்ன தோன்றியது என்று கேட்டார். இன்றிலிருந்து என்ன இக்கட்டான நிலை வந்தபோதும் பொய்யே பேசப்போவதில்லை என்பதை கற்றுக்கொண்டேன் என்றார் .
  பார்த்தீர்களா இருவரும் ஒரே நாடகத்தினை தான் பார்த்திருந்தனர் .ஆனால் அவர்கள் அதிலிருந்து என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை .அதே போல தான் இராமாயணம் .சீதாதேவி இராமனால் தீக்குளிக்க வைக்கப்பட்டாள் என்றால் இராமனுக்கு சீதாதேவி களங்கமற்றவள் என்பதை இந்த ஈரேழு லோகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணம் தான் .சரி சீதாதேவி அந்த மாயமான் வந்த போது அந்த மானைப் பார்த்து ஆசை கொள்ளாமல் இருந்திருந்தாலோ அல்லது இலக்குமணன் தன் அண்ணியிடம் இது அசுரர்களின் சித்துவேலை நான் உங்களை விட்டு போக மாட்டேன் என்று இலக்குமணன் கூறிய ஆலோசனைப்படியோ நடக்கவில்லையே .தன் மைத்துனன் இட்டு சென்ற கோடையும் தாண்டி சென்று விட்டாரே .
  இவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லையா ?

  ReplyDelete
 4. ஆரியர்கள் எம்மேல அன்பு செலுத்த வந்தவர்கள் அல்ல . இந்தியாவினை ஆக்கிரமிக்கமுன் இந்தியாவுக்கு அனுப்பிய ஒற்றர்கள் கொடுத்த செய்தி இந்தியா ஆன்மிகத்தில் மூழ்கியுள்ளது என்பதே. எனவே அவர்கள் தங்களைக் கடவுள்களாகவும் , திராவிடத் தலைவர்களை அசுரர்களாகவும் கதை கட்டிக்கொண்டு இந்தியாவில் நுழைந்தனர்.எப்படி புலிகளை அழித்த இலங்கை அரசு போதை பொருட்களையும் ,நீ லப் படங்களையும் தமிழர் பகுதியில் உலவவிட்டு அவர்களை கெடுத்ததோ அதேபோல் ஆரியருக்கு சமயம் கொச்சை த்தனமானதும் சீரழிக்கக்கூடியதுமான கட்டுக் கதைகள் மூலம் சமுதாயத்தினை திசை திருப்பி அனைத்தினையும் அனுபவித்து ஆண்டார்கள்.இன்று அவர்க ள் ஆளாவிடடாலும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் நம்மை ஆண்டுகொண்டு இருப்பது தான் கேவலம்.

  ReplyDelete
 5. கோபாலன்Tuesday, July 17, 2018

  இராமனும்தான் தனிமையில் இருந்தானே!அவ்வளவு காலமும் அவனும் ஒழுக்க சீலனாய் இருந்தான் என்று உலகத்திற்கு காட்டிட ஏன்தான் அவனும் அந்தத் தீயில் விழுந்து நிரூபிக்கவில்லை?

  சரி, வினோதினி! உங்களை உங்கள் கணவனோ - தகப்பனோ - கற்பை நிறுவத் தீக்குளிக்கச் சொன்னால் உங்கள் மனம் என்ன பாடு படும்!

  நல்ல விடயங்களைக் கற்பிக்க இராமனை அயோக்கியன் என்றும், கையால் ஆகாதவன் என்றும் பல இடங்களில் சித்தரித்து விட்டு, அவனை எதோ தெய்வம் என்று போற்றுவதுதான் ஏன் என்று புரியவில்லை!

  அவனோடு பார்க்கையில் இராவணன் மிகவும் நீதி உள்ளவன். நேர்மை உள்ளவன். அவன் போரில் எல்லோரையும் இழந்த கோபத்தில் சில தடியன்களைக் கொண்டு சீதையைச் சின்னா பின்னம் ஆக்கியிருக்கலாம்; அப்படி அவன் செய்யவில்லையே!

  ReplyDelete