"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''


னின் முதலாம் பிறந்த நாள்"


"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்
பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் 
பேசாமல் ஆடாமல் இருக்க முடியாது
பேரறிவுடன் இவன் என்றும் வாழட்டும்!"

"காலம் ஓடியதை நம்பவே முடியல  
காற்றாய் வேகமாய் அது பறந்திட்டு?
காளான் மாதிரி குட்டையாய் இருந்தாய்
கார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்!"   .

"உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து
உறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து 
உயர்ந்து நின்று பாதத்தால் நடந்து
உற்சாகம் கொண்டு வென்று விட்டாய்!"

"முழு ஆண்டு முடிந்து விட்டது
மும் முரமாக இனி கொண்டாடுவோம்  
முக்கனி சுவை முழுதாய் கொண்ட
முந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்!" 

"பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடுவோம்
பிரியத்துடன் அவனுக்காக வேண்டுவோம்
பிரமாண்டமான ஒரே ஒரு ஊதலில்
பிரகாச மெழுகு வர்த்தியை அணைப்போம்!"

"ஆரவாரத்துடன் இரண்டாம்ஆண்டு ஆரம்பிக்க   
ஆசையுடன் பலகாரங்கள் பல சுவைக்க 
ஆளுக்கு ஆள் வாழ்த்துக்கள் கூற
ஆடிப்பாடி சுட்டிப் பையனுடன் மகிழ்வோம்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments:

  1. பேரழகன், பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete