திரையிலிருந்து சில துளிகள்


🪑🪑🪑🪑🪑சந்திரமுகி-2

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.  இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மேலும் சந்திரமுகி வேடத்துக்காக நாயகிகளை தேடி வருகின்றனர்.இதேவேளை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலேயே நடிக்க விரும்புவதாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

🪑🪑🪑🪑🪑'ராம்


மோகன்லால் -திரிஷா ஜோடியாக வைத்து 'ராம்' என்ற திரைப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுகிறது.  இப்படத்தில் இவர்களுடன் இந்திரஜித், சாய்குமார், சித்திக், சுமன் சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

🪑🪑🪑🪑🪑'அக்னி சிறகுகள்' 

அருண் விஜய், விஜய் ஆண்டனி இருவரும் கதாநாயகர்களாக இணைந்து நடிக்கும்  'அக்னி சிறகுகள்'  திரைப்படப் பிடிப்பில்  ரஷ்யாவில் -20 டிகிரி குளிரில்  நடித்த விஜய் ஆண்டனியுடன் அக்ஸரா ஹாசன் , ரைமாசேன்   ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

🪑🪑🪑🪑🪑'மேதாவி'

அர்ஜுன் ஜீவா ஆகிய இருவரும் 'மேதாவி' என்ற ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இதில்  விசாரணை அதிகாரியாக நடிக்கும்  அர்ஜுன் னுடன் ராதாரவி. ஓய்.ஜி. மகேந்திரன் அழகப்பெருமாள், ரோகினி ஆகிய 3 பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

🪑🪑🪑🪑🪑‘மோகினி’ 

திரிஷா நடித்து, மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘மோகினி’ படம் தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில், ரிலீஸ் ஆனது. அமெரிக்காவிலும், கனடாவிலும் தயாரான திகில் படம், அது. அந்த படத்தை யூ-டியூப்பில் 4 கோடி பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

🪑🪑🪑🪑🪑சண்டக்காரி’

டைரக்டர் மாதேஷ் இப்போது விமல்-ஸ்ரேயாவை வைத்து, ‘சண்டக்காரி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க லண்டனில் தயாரான இந்தப் படம் தமிழ், இந்தி என 2 மொழிகளில் வெளிவர இருக்கிறது.

🪑🪑🪑🪑🪑பேய் படம்

அந்தக்காலத்து கிராமப்புறங்களில், “முனி .”, “மோகினிப் பேய்  என்ற  திகிலூட்டும் கதைகளை கூறிய காலம் கடந்து  இப்போது உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனாவின் அராஜகமும் அப்படித்தான் ஆகிவிட்டது. இதையே கருவாக வைத்து ஒரு பேய் படம் தயாராகிறது. பேயை கொரோனாவுடன் ஒப்பிட்டு திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

🪑🪑🪑🪑🪑தயாரிப்பாளர் ரகுநாதன்

நடிகர் கமலை ‘பட்டாம் பூச்சி’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ரகுநாதன் காலமானார். இவர் தனது ஆர்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இவர் தயாரிப்பில் மரகதக்காடு படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் [21]இரவு உடல்நலக் குறைபாடு காரணமாக ரகுநாதன் காலமானார். அவருக்கு வயது 79. அவரது மகன் நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். சித்ரா என்ற மகளும் இருக்கிறார்.

🪑🪑🪑🪑🪑முந்தானை முடிச்சு-2

 பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு , தற்போது 37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தையும் பாக்யராஜ் தான் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க உள்ளார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு கொரோனா ஊரடங்குக்கு பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

0 comments:

Post a Comment