வாழ்வில் கண்டதும் கேட்டதும்: வரிகளாக

பெண்ணே!ஆறுமுகத்தாளே!

பெற்றவர்கள் மடியில் மழலை 
பேசும் முகம் ஒன்று
கற்கும்  கூடத்திலே கல்வியில் 
கனியும் முகம் ஒன்று,
பூப்பெய்தி உருவெய்தி உலகம் 
பார்க்கு முகம் ஒன்று,
காளையர் முன் காட்டாது 
காட்டும் முகம் ஒன்று,
மனைவியாக மனையினிலே 
மயக்கும் முகம் ஒன்று,
தாயாக சேயின் முன்
தாலாட்டு முகம் ஒன்று.
ஓ! தமிழே!


உடலுருகி உள்ளத்தின் 
உணர்வுகள் கூட
உன்னை உச்சரிக்க 
உடன்பாடில்லை!
எனவே 
சா வீட்டிலும்
சொல்லியழ 
நீ நாவில் 
தவழ்ந்ததில்லை.

பொறுமைசாலிகள்[இறந்தால்தான் பேசுவார்]

ஒலி வாங்கியில்
பேசத் தெரிந்தவர்கள்
அவன்புகழ்
இன்னும்
பேசவில்லை,
காத்திருக்கிறார்கள்
ஏனெனில்
அவன் இன்னும்
இறக்கவில்லை 
                          அன்புள்ள நண்பியே


திருமணத்தின் 
பின்
என் நட்பு
தொடர்வதும்
தொலைவதும்
நீ புகுந்தவீட்டில் 
புரளும் 
பணத்தினைப் 
பொறுத்ததே!
….
ஆக்கம்:செ.மனுவேந்தன்


1 comments:

  1. அருமையான வரிகள். மனைவியாக மனையினில் மயக்கும் முகம் ஒன்று. அருமை. மதிலுக்கு வந்த கதி தலைகுனிய வைக்கும் உண்மை நிலை.
    புகழ் பேச அவன் இன்னும் சாகவில்லை. நிதர்சன. நிதர்சனமாநிதர்சனமானமானனமான உண்மை மொழிகள் வாழ்த்துக்கள் நன்றி. 🌹.

    ReplyDelete