மூளைக்குப் பயிற்சி

எமது உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் பயிற்சி தேவைப்படுகிறது. எனவேதான் அதற்கென ஒரு பகுதியினை உருவாக்கியுள்ளோம். அத்துடன் விடை சம்பந்தமாக பிள்ளைகளுடன்  பேசும்போது அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பமும் அதிகரிக்கிறது.முயற்சி செய்யுங்கள்.

இதற்கு பதிலளித்த அனைவருக்கும் நன்றி. இக்கணிப்பீடு மிக இலகுவாகவும், சிறிய இலக்கங்களுடன் தரப்பட்டமைக்கு காரணம் உண்டு.
ஒரு தரவில் , -கூட்டல் ,கழித்தல்,பெருக்கல்,பிரித்தல்,வர்க்கம்,அடைப்புக் குறி என்பன  வந்தால் எப்படி அக்கணிதத்தினை தீர்ப்பது என்பது ஆரம்ப பாடசாலையில் எல்லோரும் படித்தவர்களே. ஆனால்  பலரும் இப்போட்டியில் தவறினை விட்டது, நாம் கடந்து வந்த பாதையில் யுத்தம்,இழப்பு, துயரம்,ஏமாற்றம், நெருக்கடி புதிய சூழலில் சந்தித்த சுமைகள் எனப்பல வேதனைகள் விளைவினால் வந்த மறதி என்றே கருத வேண்டும். இத் தவறினை  முகநூலில் பலமுறை கவனித்தமையினாலே இவற்றினை மீண்டும் உங்கள் ஞாபகத்தில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.

விளக்கம்:கணிதத்தில் நாம் படித்த வகைகள் -கூட்டல் ,கழித்தல்,பெருக்கல்,பிரித்தல்,வர்க்கம் அனைத்தும் நீங்கள் அறிந்ததே.அவை ஒரு தரவில் வரும்போது அதற்கென்று விதிமுறைகள்  இருக்கிறது.இதை ஆங்கிலத்தில் BEDMAS என சுருக்கமாக கூறுவர்.
1.Brackets -[(2+3)] -அடைப்புக்குறி- முதலில்First Priority
2.Exponents-[㎡]- வர்க்கம்-இரண்டாவதுSecond Priority
3.Division-[3➗2]-பிரித்தல்-மூன்றாவதுThird Priority 
4.Multiplication-[3X2]-பெருக்கல்-மூன்றாவதுThird Priority
5.Addition-[3➕2]-கூட்டல்-நாலாவதுFourth Priority
6.Subtraction-[3➖2]-கழித்தல் நாலாவது  Fourth Priority
உதாரணமாக:-
[A]
8 + 4 × 3 ÷ 2 = 8 + 12 ÷ 2
= 8 + 6
= 14
[B]அடைப்புக் குறியுடன் 
15 − (6 + 1) + 30 ÷ (3 × 2) = 15 − 7 + 30 ÷ (3 × 2)
= 15 − 7 + 30 ÷ 6
= 15 − 7 + 5
= 8 + 5
= 13
[C]அடைப்புக் குறி இல்லையெனில் 
15 − 6 + 1 + 30 ÷ 3 × 2 = 15 − 6 + 1 + 10 × 2
= 15 − 6 + 1 + 20
= 9 + 1 + 20
= 10 + 20

= 30
மேலுள்ள உதாரணங்களின் படி மேற்படி 'கண்டுபிடியுங்கள்' பகுதிக்கு சரியான விடை '6' என்பதேயாகும். எப்படி எனில் -

வினாவின் அடிப்படையில்
5+31×4÷2=5+31×4÷2
                   =5+31×2
                   =5+3−2
                   =5+1
                        =6 என விடை கிடைத்தது.
குறிப்பு:எல்லோரும் எல்லாமே தெரிந்திருக்கவேண்டும்,அதிலும் நாம் கற்றது கைம்மண்ணளவு அதையும் மறக்கலாமா?.
⇛⇛⇛⇛⇛⇚⇚⇚⇚⇚
                                                  03.06.2020- 
தவறுப்படட இலக்கம் என்ன?

                                                       03.06.2020



➽30.05.2020



➽25.05.2020


0 comments:

Post a Comment