தந்தையர் தினம்பாராட்டுகள் எதிர்பாராதா பெருமை பேசாத
பாசாங்கு செய்யாத அமைதியான அண்ணல் !
பாசம் கொண்டு எம்மை உயிராய்நேசித்து
பார்த்து வளர்த்த பெருந்தகை இவன் !

அன்னாரின் கனவுகளை இன்று நிறைவேற்ற
அன்னாரின் விருப்பங்களை இன்று முழுமையாக்க
அன்னாரின் கவலைகளை இன்று நீக்கிட
அயராது நாம் என்றும்உறுதியாக இருக்கிறோம் !

எம் வாழ்வின் அனைத்து புயல்களிலும்
எம்மை கைபிடித்த துணிவுமிக்க வீரன் !
எம் மனஅழுத்தம் சச்சரவு காலங்களில்
எம்மை வழிநடத்தும் உண்மையான நண்பர் !

நல்ல கெட்ட  நேரங்கள் எல்லாம்
நட்புடன் ஆசீர்வதித்த தேற்றிய ஆசான் !
நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி
நறும்புகை ஏற்றி வழிபடும் தெய்வம் !

உலகம் அறியும் நாயகன் இவனல்ல
உண்மை பேசும் உத்தமன் இவன் !
உதாரணம் காட்டி தவறுகள் திருத்தி
உரிமையுடன் அதட்டி மனிதனாக்கிய ஹீரோ !

நடந்தது நடந்ததே என்று கூறி
நடப்பதை எதிர்கொள்ள பலம் தந்து
நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்று
நயமாக இயம்பிய தந்தை இவன் !

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment