நடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன?
நடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய், அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும், வேறு யாருக்கும் வாய்க்காத மிக பிரபலமான இயக்குனர்களின் (பாலு மஹிந்திரா, மணிரத்னம், செல்வமணி, ஹரி) படங்களில் நடித்தும் ஜொலிக்காமல் போனதற்கு காரணம் என்ன?

"டாப் ஸ்டார்" பிரசாந்த்

(1)ஒரு நாயகனாக நடிப்பவருக்கு என்னென்ன தகுதிகள் தேவையோ அதை அனைத்தும் வளர்த்து கொண்டு திரைத்துறைக்குள் நுழைந்தவர்.

(2)1990-ஆம் ஆண்டு வெளிவந்த "வைகாசி பொறந்தாச்சு" படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர்.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நாயகனுக்கான பிலிம்பேர் விருதும் பெற்றார்.

(3)முதல் படத்தில் நடிப்பதற்கு ஒரு நுழைவு சீட்டு போல தான் "நடிகர் தியாகராஜனின் மகன்" என்ற அடையாளம் இவருக்கு தேவைப்பட்டது.

(4)அதன் பின் இவரது சிறந்த நடிப்பினாலும் பல சிறந்த இயக்குனர்களின் படங்களில் பணிபுரிந்தமையும் இவர் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக உயர்ந்தார்.அது மட்டுமின்றி 90-களில் தமிழ் நாட்டின் "சாக்லேட் பாய்" -ஆக பெண்கள் மனதில் இடம் பிடித்தவர்.

(5)வைகாசி பொறந்தாச்சு(1990) முதல் வின்னர்(2003) திரைப்படம் வரை இவரது சொந்த வாழ்க்கை மற்றும் திரைத்துறை பயணம் அனைத்தும் நல்ல படியாக தான் சென்று கொண்டிருந்தது.

(6)01-செப்டம்பர்-2005 இவருக்கு திருமணம் நடைபெற்றது.ஆனால் இவரின் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமையவில்லை. போலீஸ்,கோர்ட்,விவாகரத்து என்று இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் இவரின் திரைத்துறை ஈடுபாட்டையும் இவரது நடிப்பு திறனையும் பாதித்தது.வெற்றி மேல் வெற்றி பெற்ற இவர் அதன் பின் சறுக்கலை சந்தித்தார்.

(7)2004 முதல் 2011 வரை அவர் நடிக்க வேண்டிய பல படங்கள் கைவிட பட்டது.எப்படியாவது வெற்றி பாதைக்கு திருப்ப வேண்டும் என்று எண்ணி மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து நடித்தார்.மக்களை அது எதுவும் ஈர்க்கவில்லை.

(8) தன் தந்தையின் "மம்பட்டியான்" படத்தை கூட மறுஆக்கம் செய்தும் நடித்து பார்த்தார்.ஆனால் நேரங்காலம் இவருக்கு எதிராகவே செயல்பட்டது.

(9)இதெல்லாம் விட என்னை மன வேதனைக்கு உட்படுத்திய விஷயம் என்னவென்றால் 2019-ல் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளிவந்த "வினய விதேய ராமா" படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர் நடித்தது தான்.அந்த படத்தை பார்க்கும் போது மனதில் தோன்றியது இது தான்"எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே " என்று தோன்றியது.

(10)பாலு மகேந்திரா,மணிரத்னம், செல்வமணி, ஹரி,ஷங்கர்,சுந்தர் சி,சுசி கணேசன்,வசந்த் ஆகிய தரமான இயக்குநர்களோடு பணியாற்றி நல்ல படங்களை கொடுத்த ஒரு வெற்றி நாயகன்.

இன்று சரியான கதைகள் அமையாததாலும் இன்றைய முன்னணி இயக்குனர்கள் இவரை வைத்து படம் இயக்க முற்படாததாலும் இன்னும் பள்ளத்திலேயே வீழ்ந்து கிடக்கிறார்.

(11)இதுவரை தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் பிரசாந்த் மீண்டும் தனது வெற்றி பயணத்தை தொடங்க அவருக்கு தேவை சாதாரண வெற்றியல்ல ஒரு பிரம்மாண்டமான வெற்றி படம்.அதை பெற்று தரக்கூடிய இயக்குனர் இவருக்கு அமைய வேண்டும்.

(12)விக்ரமுக்கு(சேது) ஒரு பாலாவை போல் அரவிந்த்சாமிக்கு (தனிஒருவன்) ஒரு மோகன் ராஜா போல் இவருக்கும் ஒரு நல்ல இயக்குனர் அமைய வேண்டும்.

"நகைச்சுவை,காதல்,அதிரடி,திகில் என அனைத்து விதமான படங்களிலும் நடித்து வெற்றி பெற்ற ஒரு நடிகர்,
திரைத்துறையை பற்றி நன்கு அறிந்த ஒரு நடிகர்,

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கதைக்களத்தை தேர்வு செய்து முன்னணி இயக்குனரின் படைப்பிலோ
அல்லது

கொஞ்சம் ரிஸ்க் எடுத்து திறமையான புது இயக்குனர்களிடம் நிறைய கதை கேட்டு அதில் சிறப்பானதை தேர்ந்தெடுத்தோ, மீண்டும்  பயணத்தை தொடங்கினால் 

கண்டிப்பாக வெற்றி பாதைக்கு மீண்டு வருவார்.

-வீரக்குமார் முத்து/Quora Tamil

3 comments:

 1. Pathmanathan VinySunday, July 05, 2020

  திறமை மட்டுமே சில நேரங்களில் போதாது.
  அதிஷ்டமும் தேவை .

  ReplyDelete
 2. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிSunday, July 05, 2020


  இவரது வரிசையில் பல நடிக நடிகர்களின் கதைகள் ஒரே மாதிரியாக இருக்கிறது. காரணம்...

  ReplyDelete
 3. MANUVENTHAN SELLATHURAISunday, July 05, 2020

  சினிமாக்காரர் சிலரை பிடித்து நல்லாய் பயன்படுத்துவர்,ஒன்று என்றதும் பொசுக்கென்று கைவிட்டுவிடுவார். மொடடை இராஜேந்திரனை அந்த மனுஷனில் என்ன இருக்கென்றோ தெரியவில்லை எல்லாப் படக்காரரும் இழுத்துக்கொண்டு திரிந்தனர்,இப்போ பொசுக்கென்று கைவிட்டுவிட்டனர். நகைச்சுவைக்கு சூரி எந்தக்குறையும் இல்லை,ஆனால் ஆளை திரையில் இன்று காணவே இல்லை.நடிப்பு ஒன்றுமே இல்லாத யோகிபாபுவை நடிகை தமன்னா ஒரு படத்திற்கு கேட்டதால் எதோ எல்லா படக்காரரும் யோகி பாபுவை சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.இது தான் சினிமாவில் காலம் செய்யும் கோலம்

  ReplyDelete