மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி28)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட சிங்கள மொழிவிஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான்அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம்மகாவம்சம் கதையின் படிபுத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது. ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றானசிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்தஅதிகமாக மஹாயான பௌத்த காப்பியமானசாத்தனாரின் மணிமேகலையும்அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும்கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோஅல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] வரி  54 - 63 இல் :

 

"கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும்

இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி  55

எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார்

தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்

செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்

தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்

இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே   60

பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்

பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும்

தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."

 

அதாவதுநாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான்மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் தான்இங்கு புத்தரிற்குப் பதிலாகதுறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.

 

மணிமேகலையில்இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும்இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும்இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.

 

சிலப்பதிகாரத்திம்புகார் நகரை நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக

 

"அதனால்,

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு

போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்"

 

இதன் கருத்துஅதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்புஅரைவாசி மனித உயிரினம் என்கிறது.

 

::-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடியாழ்ப்பாணம்

பகுதி: 29 தொடரும்..

👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள… (பகுதி 29):

 👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:


 

 

0 comments:

Post a Comment