சிரிக்க... சில நிமிடம்...

 

நகைச்சுவை=ஜோக்ஸ்


-01-

70 வயது தாத்தா தன்னோட பாட்டியை இன்னமும் செல்லமாக "டார்லிங்", "செல்லம்" என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்.

பேரன்: "தாத்தா, எப்படி இந்த வயசுலேயும் பாட்டியை இவ்வளவு பாசமா கூப்பிடுறீங்க?"

தாத்தா: "தம்பி, அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு! அவகிட்ட பேரைக் கேட்டு, வாங்கிக்  கட்டிக்க முடியுமா?"

  😁

-02-

மனைவி: "என்னை பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க காபியைத் தொடவே இல்லையே, ஏன்?"

கணவன்: "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குனுதான்!"

  😁

-03-

கணவன்: "இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு நாள் நான் மிருகமா மாறிடுவேன் ஜாக்கிரதை!"

மனைவி: "அட போங்க, பூனையைப்  பார்த்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!"

  😁

-04-

போனில் மிரட்டல்: "நாங்க உங்ககணவரை கடத்தி வைச்சுருக்கோம். 5 லட்ச ரூபாய் கொடுத்தா விட்டுடறோம்.

"மனைவி: "ஐந்து என்ன, பத்து லட்ச ரூபாயே தர்றேன். ஆனா, திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க!"

  😁

-05-

வாணி: "உன் செல்போனில் 'பேய்' கால்னு வருதேடி?"

ராணி: "அது என் மாமியார்."

வாணி: "இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?"

ராணி: "என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வெச்சிருக்கேன்!"

  😁

-06-

குரு: "என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?"

கிரி: "என் பொண்டாட்டி என் மேல ஏதாவது பாத்திரத்தைத் தூக்கி வீசுவா, அது என் மேல பட்டா, , நான் விழுந்தால்,  அவ சிரிப்பா!"

  😁

-07-

மனைவி: "நாம ரெண்டு பேரும் 'ஹோம் வொர்க்' பண்ணுவோமா?"

கணவன்: "சூப்பர்! இன்னைக்கு என்ன சப்ஜெக்ட்?"

மனைவி: "வீட்டு வாடகை, கரண்ட் பில் ரெண்டையும் கட்டுறது!"

  😁

-08-

டாக்டர்: "உங்க கணவருக்கு எந்த கவலையும் இருக்கக் கூடாது. மனசு அமைதியா இருக்கணும். முக்கியமா அவரோட சண்டையே போடாதீங்க."

மனைவி: "அப்படியா டாக்டர்? அப்போ அவருக்குப் பதிலா நான் அவருடைய அம்மா கூடவாவது சண்டை போடலாமா?"

  😁

-09-

அப்பா: "டேய், உன் வயசுல காந்தி எப்படி இருந்தார் தெரியுமா?"

மகன்: "தெரியும்ப்பா... உங்க வயசுல அவர் இந்தியாவின் பிரதமராகவே ஆகிட்டார், நீங்க இன்னும் கிளெர்க்கா தான் இருக்கீங்க!"

  😁

-10-

நண்பன்: "உன் வீட்டுல எப்பவுமே சண்டையே வராதா? எப்படி?"

கணவன்: "ரொம்ப சிம்பிள்... சின்ன சின்ன முடிவுகளை என் மனைவி எடுப்பாள், பெரிய முடிவுகளை நான் எடுப்பேன்."

நண்பன்: "பெரிய முடிவுகள்னா?"

கணவன்: "அமெரிக்கா அதிபர் யார் ஆகணும், உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கணும்ங்கிறது!"

  😁

-11-

மனைவி: "கல்யாணத்துக்கு முன்னாடி என் பின்னாடியே சுத்துனீங்களே, இப்போ ஏன் அப்படி சுத்துறது இல்லை?"

கணவன்: "பஸ்ஸைப் பிடிக்கிற வரைக்கும்தான் ஓடணும், பஸ்ஸுல ஏறின அப்புறமும் ஓடுவாங்களா?"

  😁

-12-

ஹோட்டலில் சாப்பிட்டு முடித்த பின்...மனைவி: "சாப்பாடு எப்படிங்க இருந்தது?"

கணவன்: "ரொம்ப சூப்பரா இருந்ததுடி."

மனைவி: "அப்போ வீட்டுக்கு வந்ததும் இதே மாதிரி எனக்கு சமைக்கக் கத்துக் கொடுங்க!"

  😁

-13-

நள்ளிரவில் திருடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

மனைவி: "ஏங்க, யாரோ திருடன் வர்ற சத்தம் கேக்குது, எழுந்திருங்க!"

கணவன்: "நீ போய் பேசுடி, அவன் பயந்து ஓடிடுவான்!"

  😁

-14-

ஊழியர்: "சார், எனக்கு சம்பள உயர்வு வேணும். ஏன்னா, என் பின்னாடி நாலு பெரிய கம்பெனிங்க சுத்திக்கிட்டு இருக்கு!"

மேனேஜர்: "அப்படியா! அது என்னென்ன கம்பெனிங்க?"

ஊழியர்: "எலக்ட்ரிக் போர்டு, டெலிபோன் கம்பெனி, ஹவுசிங் லோன் கம்பெனி, அப்புறம் கிரெடிட் கார்டு கம்பெனி சார்!"

  😁

-15-

ஊழியர் எழுதிய லீவு கடிதம்: "சார், நாளைக்கு என் மனைவியோட தம்பிக்கு கல்யாணம். நான் போகலனா என் வாழ்க்கையில 'போர்' வெடிச்சிடும். அதனால தயவுசெய்து லீவு கொடுங்க!"

  😁

-16-

ஊழியர்: "சார், நான் லீவு கேட்டா மட்டும் ஏன் உடனே தர்றீங்க?"

மேனேஜர்: "நீ ஆபீஸ்ல இருக்குறதை விட, லீவுல இருக்கும்போதுதான் வேலைங்க சீக்கிரம் முடியுது, அதான்!"

  😁

-17-

ஊழியர்: "சார், கம்பெனியோட வளர்ச்சிக்கு நான் என்ன செய்யணும்?"

மேனேஜர்: "முதல்ல நீ சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்து தூங்குறதை நிறுத்தணும்!"

  😁

-18-

மேனேஜர்: "ஆபீஸ் போன்ல யார்கூட 1 மணி நேரமா பேசிட்டு இருக்க?"

ஊழியர்: ''நான் பேசவில்லை சார்!’’

"மேனேஜர்: "பொய் சொல்லுறியா?"

ஊழியர்: "ஆமா சார், அவங்கதான் பேசினாங்க, நான் பேசலை. நான் 'ம்... ம்...' மட்டும்தான் சொல்லிட்டு இருந்தேன்!"

  😁

-19-

ஒரு ஊழியர் கம்பெனியை விட்டு விலகும்போது...

மேனேஜர்: "நீங்க இந்த கம்பெனியை விட்டுப் போறது எங்களுக்கு பெரிய இழப்பு."

ஊழியர் (மனதிற்குள்): "நீங்க சம்பளம் கம்மியா கொடுத்ததுதான் சார் எனக்கு பெரிய இழப்பு!"

  😁

-20-

கல்லூரி மாணவன் தன் தோழியிடம்: "நான் உனக்குக் கொடுத்த காதல் கடிதத்துக்கு ஏன் இன்னும் பதில் சொல்லல?"

மாணவி: "என் அப்பா அதை படிச்சுட்டு... 'இவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக் (Spelling Mistake) இருக்கு, இவன்கூட பேசாதே'ன்னு சொல்லிட்டார்!"

  😁

-21-

மகன்: "அப்பா, இந்த வருஷம் பரீட்சையில நான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனா எனக்கு என்ன வாங்கித் தருவீங்க?"

அப்பா: "புது பைக் வாங்கித் தர்றேன்டா."

மகன்: "நல்லவேளை தப்பிச்சேன், உங்க காசு மிச்சம்! நான் ஃபெயில் ஆகிட்டேன்ப்பா!"

  😁

-22-

ஆசிரியர்: "பூமி ஏன் சுழல்கிறது?"

மாணவன்: "நேத்து ராத்திரி  நீங்க குடிச்ச தண்ணி இன்னும் தலைக்கேறி இருக்குமோ என்னவோ சார், அதுதான் உங்களு  பூமி சுத்துற மாதிரிதான் இருக்கு!"

  😁

-23-

ஆசிரியர்: "உன்கிட்ட 10 ஆப்பிள் இருக்கு. அதுல 4 ஆப்பிளை உன் தம்பிக்கும், 3 ஆப்பிளை உன் தங்கைக்கும் கொடுத்தா, மீதி என்ன இருக்கும்?"

மாணவன்: "பெரிய சண்டையே நடக்கும் சார்!"

  😁

-24-

விடுதி மாணவன் 1: "டேய், இன்னைக்கு சாம்பார்ல ஏதோ மிதக்குதுடா!"

விடுதி மாணவன் 2: "பேசாம சாப்பிடுடா, இல்லைன்னா அதுக்கும் தனியா 'நான்-வெஜ்' (Non-Veg) கட்டணம் போட்டுடுவாங்க!"

 😁

-25-

மாணவன் 1: "மச்சான், அந்தப் பொண்ணு என்னைப் பார்த்தே சிரிக்குதுடா!"

மாணவன் 2: "டேய்... நீ சட்டையைத் தலைகீழா போட்டுட்டு வந்திருக்க, அதான் அவ சிரிக்கிறா!"

 

 

 

தொகுப்பு : செ .மனுவேந்தன்/ theebam.com / ttamil.com / dheebam / theebam web

0 comments:

Post a Comment