கந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02

11. போர், போர்:
கந்த:போர் மூண்டது. சூரன் தம்பியாரோ, மகனோ சூரனுக்கு முருகனின் ஆற்றலை எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை.

இராம:போர் மூண்டது.  இராவணன் தம்பியாரோ, மகனோ இராவணனுக்கு இராமனின் ஆற்றலை எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை.

12. செஞ்சோற்றுக் கடன்:
கந்த:ஆயினும், அவனுக்காக போருக்குச் சென்று மாண்டார்கள்.
கடைசியில் சூரன் போருக்குச் சென்றான்.
இராம:ஆயினும், அவனுக்காக போருக்குச் சென்று மாண்டார்கள்.(ஒரு தம்பி காட்டிக் கொடுத்தான்). கடைசியில்  இராவணன் போருக்குச் சென்றான்.
13. என்ன தவம் செய்தேன்:
கந்த:அங்கு முருகனின் தெய்வீகத் தன்மையைக் கண்டு மனம் கலங்கினான். என்றாலும், முருகனால் இறப்பது பாக்கியம் என்று போர் புரிந்தான்.
இராம:அங்கு இராமனின் தெய்வீகத் தன்மையைக் கண்டு மனம் கலங்கினான்.
என்றாலும், அவனால் இறப்பது பாக்கியம் என்று போர் புரிந்தான்.
14. மாவீரன் அல்லவா:
கந்த:சூரன் பலவிதமான போர்த் தந்திரங்களையும் பாவித்து உக்கிரமாகப் போர்புரிந்தான்.
இராம:இராவணன் மாயாஸ்திரம் போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களினால் இராம சேனையைக் கதி கலங்க வைத்தான்.

15. இன்று போய்...
கந்த:நிராயுத பாணியாய்ப் போன சூரனைக் கொல்லாது இன்று போய் போருக்கு நாளை வா என்று முருகன் அனுப்பினார்.
இராம:நிராயுத பாணியாய்ப் போன இராவணனைக் கொல்லாது இன்று போய் போருக்கு நாளை வா என்று இராமன் அனுப்பினான்.

16. வதம்:
கந்த:கடைசியில் மாமர வேடத்தில் வந்த சூரனைக் முருகன் கொன்றார்.
இராம:கடைசியில் மாய வேடங்களிலும் வந்த இராவணனைக் இராமன் கொன்றான்.
17. அருளல்:
கந்த:சூரன் ஒரு சிறந்த சிவபக்தன் என்பதால் அவனைக் கொடியாகவும், வாகனமாகவும் முருகன் ஏற்றுக் கொண்டார்.
இராம:இராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்பதால் சகல மரியாதைகளுடனும் சிவபதம் அடைந்தான்.

18. கல்யாணப் பரிசு:
கந்த:போரில் அசுரரை வென்று தேவரைக் காப்பாற்றியதற்குப் பரிசாக, மறு பிறப்பு எடுத்திருக்கும் விஷ்ணுவின் இரண்டு புதல்விகளை முருகன் மணந்து கொண்டார். (இது கதை முடிவில்)
இராம:
யாகத்தில் அசுரரை வென்று ரிஷிகளைக் காப்பாற்றியதற்குப் பரிசாக,  மனிதப் பிறப்பு எடுத்திருக்கும் திருமகள் சீதையை இராமன் மணந்து கொண்டான். (இது கதை ஆரம்பத்தில்).

19. முற்றும்:
கந்த:கந்தபுராணம் முற்றுப்பெற்றது.
இராம:இராமாயணம் முற்றுப்பெற்றது.

இப்பொழுது என்ன சொல்கின்றீர்கள்? இந்த இரு கதைகளிலும் பெரிய ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவே இல்லை. ஆதலால். எனக்கு எழுவது மிகவும் சுலபமாக இருந்தது, ஏனென்றால் பலவற்றைப் பிரதி எடுத்து ஒட்டக்கூடியதாக இருந்தது என்பதால்!

ஆதலால், இவற்றை கந்தாயணம், இராமபுராணம், கந்தபுராணம், இராமாயணம் என்று எப்படியும் பெயரிட்டு அழைக்கலாம்!

செல்வத்துரை சந்திரகாசன்

1 comments: