மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா?

கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என்று அழைக்கப்படுகிறது. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது.

இதனை நன்றாகச் சமைக்கும்போது சிகப்பு நிறம் மாறி பழுப்பு நிறம் எய்துகிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. 

இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.

0 comments:

Post a Comment