நினைவு தெரிந்த நாள்முதலாய்....தவிக்கிறேன்

Image result for என் அம்மா உனைப் போல

இதயம் வலி கொள்வதும் வாழ்விலே 
வாடிக்கையாகி போனதேன்?

வாழ்க்கையிலே
உண்மையாய் நேசித்து 
உண்மையாக வாழும் போது
 பொய்யாக நேசம் கொண்டு
 வெறுப்பை தந்து நிற்பவர்கள் 
அதிகமாக வந்து போவதால் 
 நினைவு தெரிந்த நாள் முதலாய்
 சந்தோசம்நிலைக்க வில்லையே!

வறுமையில் விழுந்த போதும்
நிராகரிக்கப்பட்டேன் 
எழுந்த போதும் 
நிராகரிக்கப்படுகிறேன் 
இது ஏன் என்று புரியாமல் 
நினைவு தெரிந்த நாள் முதலாய் 
தவிக்கிறேன்!

நினைவு தெரிந்த நாள் முதல் 
நெருக்கமானவர்களை 
அதிகம் நேசித்தாலும்
 என் அம்மா உனைப் போல 
  என்னை    யாரும் நேசிக்கவில்லையே!!

........................................................காலையடி அகிலன்

0 comments:

Post a Comment