வெள்ளை மனம்....[காலையடி, அகிலன் ]

வெள்ளை மனம் கொண்டோர்
 அன்பும் அழகானது-அது
காசு பணம் நோக்காது
 அன்பை  மட்டும் புரிந்து கொள்ளும்
வெள்ளை மனம் கொண்டோருடன்
நிலைத்து நிற்கும் பாசம்
அல்லாதோருடன் மாயை போன்று
வந்து மறையும்

போலி மனம் கொண்டோர்
பொய்களில் விருப்பம் கொள்வதால்
சந்தோசம்    மலர்வதில்லையே!
வெள்ளை மனம்     கொண்டோர்
உண்மைகளை விருப்புவதால்
மலர்ந்த வண்ணம் இருக்குமே!

நல்ல எண்ணம் கொள்ளும்
வெள்ளை மனம் முடையோர்
மனம்  கலக்கம் இல்லாதது
இதனால் மின்னல்  மீது
மயக்கம் கொள்வதில்லையே!
 கள்ள உள்ளம் கொண்டு
உயர்ந்து இருப்பதாக
கற்பனை வாழ்வு அது
பெருமை அல்ல
வெள்ளை மனம் கொண்டு
உயர்ந்து இருப்பதே பெருமை!
 :அகிலன்,தமிழன்:

0 comments:

Post a Comment