புதுக் கவித் துளிகள்


01.....காதல்...
அழைத்து கொள்ளவில்லை எனில்
என் பார்வையில் இருந்து  நீங்கிவிடு 
உன்  நினைவிலிருந்து
கண்கள் கொஞ்சம் ஓய்வாக இருக்கட்டும்

02....தொலைக்காதே....
தோல்வியை கண்டு மகிழ்ச்சியை தொலைக்காதே 
 கண்ணீரை கண்டு கனவை தொலைக்காதே 
காதலை கண்டு   உணர்வை தொலைக்காதே 
வாழ்ந்து பார்க்காமல் வாழ்வை தொலைக்காதே

03...அழைப்பு...
அழைப்பு அன்பனால் ஆனந்தம்
 அழைப்பு அதிகாரமானால் வெறுப்பு
 அழைப்பு மௌனமானால் வருத்தம்
 அழைப்பு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி

04....தென்றல்...
காலை தென்றல் வந்து
 மொட்டுகளை முத்தம் இடுகையில்
தென்றலின் புணர்ச்சியில்
விரித்துவிடுமே சிரிப்பு மலர்களை 

05....விடியல்....
காகிதத்தின் மடலில்
இன்ப கனவு மலர்கிறது
 ஈரம் இல்லா தனிமையிலே
துன்பம் தொடராய் வளர்கிறது.

                                                                         காலையடி அகிலன்

0 comments:

Post a Comment