"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்"

[ஆசை திருப்தியடையாது]

"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்

ஆபரணம் ஆக்கி தன்னை அலங்கரிக்கிறான்

ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும்

ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் ! "

 

"நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து 

நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான்

நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து

நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !"

 

"விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை

விஞ்ஞான உண்மைகளை புரிந்து கொள்

விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே

விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !"

 

"மகிழ்ச்சி என்பது மனிதனின் கட்டமைப்பு

மலர்ந்து மடியும் ஒரு எண்ணக்கரு

மந்தக்காற்றில் பறக்கும் பட்டம் போல்

மடிந்து விடும் ஒரு நேரத்தில் !"

 

"மகிமையான வாழ்வை பெருமையாக அனுபவி

மகிழ்வுடன் துன்பமும் கலந்தவன் மனிதன்

மந்திரம் தந்திரம் மகிழ்வை தரா

மழலையின் முகத்தில் உண்மையை அறி !"

 

"செல்வம் கவர்ச்சி நிலை அற்றது

செவியில் அதை ஏற்று மனிதா

செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும்

செத்துவிடும் ஒருநாள் நினைவில் கொள்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
1] நேரார் - பகைவர்
2] செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் - ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும் தேரும் வண்டியும் 

0 comments:

Post a Comment