சிரிக்க....சில நிமிடம்

 சர்தார்ஜி ஜோக்ஸ்/sarthaji jokes


🚆ரயிலில் தூங்கிய சர்தார்

ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த சர்தார்க்கு தூக்கம் தூக்கமாக வந்தது. தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சர்தார்க்குத்  திடீரென்று ஒரு யோசனை வந்தது.

 அருகில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் படியும் அதற்கு 20 ரூபாய் தருவதாகவும் சொன்னார். அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு பணத்தையும் வாங்கிக் கொண்டார்.

  சர்தார் நன்கு தூங்க தொடங்கினார். சர்தார்  எழுப்பி விடுவதாக சொன்ன அந்த நண்பருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்கு இருபது ரூபாய் வாங்கியது  அவர் மனசுக்கு கஸ்டமாக இருந்தது. தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது சர்தார்க்கு செய்ய வேண்டும் என்று நினைத்தார்.  அவர் முடி திருத்துபவர் என்பதால்,  சர்தார்  தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு சேவ் செய்து தாடியையும்  எடுத்துவிட்டார்.

 இறங்க வேண்டிய இடம் வந்ததும் சர்தாரை  எழுப்பியும் விட்டார். இதை அறியாத சர்தார்ஜி நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.

 தன் மனைவியை அழைத்துச் சர்தார் சொன்னார், ''ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்குப் பதிலாக வேறு யாரையோ எழுப்பி விட்டு விட்டான்'' என்றார்.

 😁😁😁😁😁

🛤தூக்கி தூக்கி போடுது

 ஒரு சர்தார் ஒரு நாளேடு ஆசிரியராக வேலை செஞ்சுகிட்டு இருந்தார். ஒருமுறை ரயில்வே துறையில் என்னென்ன மேம்பாடுகள் செய்யலாம் என்கிற தலைப்பில் ஆலோசனைகள் சொல்றதுக்காக, நாளேடு சார்பாக  ரயிலில்  டெல்லி  போயிருந்தார். அவர் போகும் பொழுது அவருடைய பெட்டி, ரயில் வண்டியின் கடைசி பெட்டி என்பதனால் ஆட்டம் ரொம்ப அதிகமாக இருந்தது. அதோட தூக்கி, தூக்கி குலுக்கியது.

 ரொம்ப கடுப்பாகி போன , சர்தார்  டில்லி  போனதும்,  ரயில்வே துறையினருக்கு கொடுத்த ஒரே ஒரு ஆலோசனை, ''எந்த ஒரு ரயில் வண்டியிலையும் கடைசிப்பெட்டி இருக்கவே கூடாது'' என்பதுதான்.

 😁😁😁😁😁

🏦எனது பாஸ்வேர்ட்

 சர்தார் ஒருவர் ஏடிஎம் இல் பணம் எடுத்துக்கொண்டிருந்தார். வரிசையில் பின்னால் நின்று கொண்டிருந்தவர் சர்தாரிடம், 'நான் உங்களது பாஸ்வேர்ட்டைப் பார்த்து விட்டேன். அது ****என்றார்.

 சர்தார்  உடனே அது தப்பு 1375 தான் எனது பாஸ்போர்ட் என்றாரே பார்க்கலாம்.

 

🚍அடி வாங்கிய சர்தார்கள்

 இரண்டு சர்தார்கள் வைத்திய சாலையில்  பக்கத்து கட்டில்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம அடி கிடைத்தது என்பதை பற்றி விவரித்தனர்.

'' நானும் என் மகனும் ஒருநாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்து கொண்டு இருந்தோம் பஸ்ஸில் நாங்கள் நின்று கொண்டு பயணம் செய்தோம். அப்போது என் மகனின் கையில் இருந்த போட்டோ ஒன்று தவறிக்  கீழே விழுந்துவிட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்று கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்துவிட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால் அதனை எடுப்பதற்காக அந்த பெண் அருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன். அவ்வளவுதான் அந்த பஸ்ஸில்  என்னை அடிக்காத ஆட்களே இல்லை. பின்னி விட்டார்கள்.

‘’ ''அப்படி என்னதான் அந்தப் பெண்ணிடம் நீங்கள் கேட்டீர்கள்'' என்று கேட்டார் மற்ற  சர்தார்.

 

''என்ன  புடவையை கொஞ்சம் தூக்கிக்குங்க,  போட்டோ எடுக்கனுங்க,என்றுதான் சொன்னேன்.....அவ்வளவுதான்’’ என்றார்.

 

இரண்டாவது சர்தார் தன் கதையைச் சொன்னார்.

 ஒருநாள் வேலை விஷயமாக என் ஊரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டி இருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்துவிட்டு அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அன்று வேலை முடியவில்லை அன்று இரவு அங்கு தங்க வேண்டி வந்தது. எல்லா ஹோட்டல்களிலும் அறை  காலி இல்லை. வேறு வழியில்லாமல் அருகில் ஒரு வீட்டில் போய், என்னுடைய நிலைமை சொல்லி அன்று இரவு தாங்கிப் கொள்ளவா, என்று கேட்டேன் அதற்கு அவர்கள், எங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள். அதனால் நீங்கள் இங்கு தாங்க முடியாது, என்று சொல்லிவிட்டார்கள்.

 அதற்காக அடுத்த வீட்டிற்கு போனேன் அங்கேயும் வயசுக்கு வந்த பெண்கள் இருந்தால் இடம் தர மறுத்துவிட்டார்கள்.

 இரண்டு வீட்டிலும் மறுத்துவிட்டார்களே என்றுநினைத்துவிட்டு, சரி,  கேட்கும் போதே மாற்றிக் கேட்போம் என்று, மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன். அவ்வளவுதான், அஎன்னை அடித்து  நொறுக்கிவிட்டார்கள்.

 

'' அப்படி என்ன கேட்டீர்கள்'' என்று கேட்டார் மற்ற சர்தார்.

 

 ''வேறு என்ன! உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு இரவுக்குத்  இங்க தங்க அறை கிடைக்குமா? என்று தான் கேட்டேன், அவ்வளவுதான்...!''

தொகுப்பு:செ.மனுவேந்தன்/ manuventhan sellaththurai

0 comments:

Post a Comment