"அறிவியல் நோக்கில்....பகுதி-27A -"பெளத்தம் ஒரு அலசல்

 அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 27 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்து வருவதற்காக கஜபா மன்னன் ஒரே ஒரு இராட்சதனுடன் சோழ நாட்டிற்குச் சென்றாரா?'

 


தீபவம்சம் கஜபாகுவின் ஆட்சியை 22 – 13 முதல் 14 வரையிலான இரண்டு வசனங்களில் விவரிக்கிறது. மகாவம்சம் அவரது ஆட்சியை சுமார் 35 – 115 முதல் 122 வரையிலான எட்டு வசனங்களில் விவரிக்கிறது. இருப்பினும், இராசவலிய கஜபாகுவைப் பற்றிய நம்பமுடியாத கதையைக் கூறுகிறது. பைபிள் கதை ஒன்று, பல தலைமுறைகளாக எகிப்தியர்களிடம் அடிமைகளாக இஸ்ரவேல் மக்கள் இருந்தனர் என்றும், ஒரு முறை, அவர்களை ஆறுதல்படுத்திய மோசே, உடனே வானை நோக்கி இறைஞ்சினார். அப்போது கடவுள் மோசேயை நோக்கி, “ இன்னும் நீ என்னிடம் ஏன் அழுகிறாய்? செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் இரண்டாய்ப் பிளக்கும். பிளந்த இடத்தில் உலர்ந்த தரையைக் காண்பீர்கள். அப்போது உலர்ந்த தரை வழியே நடந்து கடலைக் கடந்து செல்லுங்கள் என்கிறார். இராசவலிய கதை, பைபிள் கதையின் நகலாகத் தோன்றுகிறது. தமிழ் நாடுகள் அன்றைய காலத்தில் வலிமைமிக்க சேர மன்னனின் கீழ் இருந்தன, பன்னிரண்டாயிரம் கைதிகளுடன் கூடுதலாக பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்து வர கஜபாகு ஒரு பூதத்துடன் சோழ நாட்டிற்குச் சென்றான் என்று இராசவலிய கதை கூறுவது முற்றிலும் விசித்திரமாக உள்ளது. அதுமட்டும் அல்ல,  அந்த பூதத்துடன் சோழநாட்டிற்கு நடந்து போவதற்கு கடல் பிரிந்து, பைபிள் கதை போல், வழி கொடுத்தது. இந்த புனைகதை தென்னிந்தியாவில் உள்ள தமிழ் அரசுகளுக்கும் இலங்கையில் உள்ள அரசுக்கும்  இடையே நிலவிய நல்லுறவை தவறாக சித்தரிக்கும் துறவியின் முயற்சியாக இருக்கலாம்.? இதற்கு நேர்மாறாக தமிழ் ஆதாரங்களில் கஜபாகு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக, சிலப்பதிகாரம் 151 - 163:

 


"பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் தேவந் திகையைச் செய்கென் றருளி வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர்"

 என்று அவரை 'கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்' என்று பெருமையுடன் கூறுகிறது.

 


கஜபாகு மன்னன் பத்தினி தேவியின் கொலுசுகளையும், நான்கு தேவாலய முத்திரைகளையும், வலகம்பாவின் (மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் வட்டகாமினி) காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புத்தரின் பிச்சைக் கிண்ணத்தையும் [இது புத்த மதத்தில் ஒரு புனித நினைவுச்சின்னம்] மீட்டு தன்னுடன் கொண்டு வந்ததாக இராசவலிய வெற்றியுடன் கூறுகிறது. என்றாலும் கஜபாகுகாமினியின் காலத்தில் பத்தினி வழிபாடு இலங்கைக்கு வந்ததாக மறைமுகமாக ஒப்புக்கொண்டு, தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில், (சிலம்பு. 30 : 160, உரைபெறு கட்டுரை 3) கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

 


செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துக் குடமுழுக்குச் செய்தபோது அந்த விழாவுக்குத் தான் இவன் வந்திருந்தான். பிற்காலத்து நூலாகிய இராசவலிய, சோழ அரசன் ஒருவன் இலங்கைக்குச் சென்று போர் செய்து சிங்களவரைச் சிறைப்பிடித்து வந்து காவிரியாற்றுக் கரை கட்டுவித்தான் என்றும், பிறகு கஜபாகு அரசன் சோழ நாட்டுக்குப் போய்ச் சிங்களவரைச் சிறைமீட்டுக் கொண்டு வந்தான் என்றும் கூறுகிறது. இச்செய்தியை மகாவம்சம் கூறவில்லை. பழைய தமிழ் இலக்கியங்களும் கூறவில்லை. எனவே, இச்செய்தி நம்பத்தக்கதன்று.?

 

👉

 *அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

 

 ↔↔↔↔↔↔↔↔↔↔

 

Part: 27 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is King Gajaba went to the Chola country with one giant to bring back twelve thousand prisoners?'

 


The Dipavamsa describes his [king Gajabahu] rule in two verses 22 – 13 to 14. The Mahavamsa describes his [king Gajabahu] rule in about eight verses 35 – 115 to 122. However, the Rajavaliya spins an unbelievable story about him. The story is a part copy of the Biblical story of the Saint Moses bringing back the Israelites out of Egypt through the Red Sea. Tamil countries were under the powerful Chera king at that time, and the Rajavaliya’s narration that Gajaba went to the Chola country with one giant to bring back twelve thousand prisoners along with additional twelve thousand is a flight of fancy of the author of the Rajavaliya. The sea parted and gave way to him to walk to the Chola country with that giant. This fiction is perhaps the monkish effort to misrepresent the cordial relationship that prevailed between Tamil kingdoms in South India and the kingdom in Lanka. This may not reflect the better cordial relationship that existed at the time of Gajaba between the Tamil kingdoms in South India and Lanka. The Rajavaliya triumphantly states that the king Gajaba brought with him the jewelled anklets of the goddess Pattini and the insignia of the four devala, and the bowl-relic, which had been carried off during the time of Valagamba (Vattagamni in the other two chronicles). There is an indirect admission that Pattini cult came to Lanka during the time of Gajabahukagamani, confirming the statement in the Tamil Epic Sillappathikaram.

 

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 27 B தொடரும் / Will follow

0 comments:

Post a Comment