சிரிக்க ... சில நிமிடம்

நகைச்சுவை- ஜோக்ஸ் 



-01-

னைவி: ஏங்க, ஒரு பொண்ணு என்னைப் பார்த்ததும் 'நீங்க ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கீங்க'னு சொன்னா.

கணவன்: அடப்பாவமே... கண்ணு தெரியாதவ கிட்ட போய் எதுக்கு பேசிட்டு இருந்த?


-02-

மனைவி: கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துலயே நீங்க "கண்ணே, மணியே"னு கூப்பிடுறதை நிறுத்திட்டீங்களே!

கணவன்: அதான் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சே, அப்புறம் எதுக்கு நான் இன்னும் நடிச்சுக்கிட்டு இருக்கணும்?


-03-

கணவன்: சாப்பாட்டுல ஏன் இவ்வளவு உப்பு?

மனைவி: சமையல் பண்ணும்போது சீரியல்ல மாமியார் மருமகளைப் போட்டு அடிச்சாங்க, அதான் எனக்கும் கோபம் வந்து கொட்டிட்டேன்!


-04-

மனைவி: ஏங்க, நேத்து உங்க கனவுல நான் வந்தேனா?

கணவன்: இல்லையே.

மனைவி: ஏன் வரல?

கணவன்: இண்டைக்காவது  நிம்மதியான தூக்கம் கிடைக்க வேணும் எண்டு கடவுளை வேண்டிக்கொண்டு படுத்தேன்.! அதுவாயிருக்கும்.!


-05-

கணவன்: சாப்பாட்டுல ஏன் கல்லு இருக்கு?

மனைவி: கல்லானாலும் புருஷன், புல்லானாலும் புருஷன் என்று உங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்களே! அதுதான்!

கணவன்: அப்போ பச்சைக்  கறியாய் இருக்கிறது இது என்ன புல்லுக் கறியா?


-06-

காதலி: நேத்து கனவுல நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்க காசு  கொடுத்தீங்க.

காதலன்: அப்படியா? அப்படின்னா அந்த மோதிரத்தை கனவுலயே போய் வாங்கிக்கொள் !


-07-

காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க எனக்கு சமையல் செஞ்சு தருவீங்களா?

காதலன்: நிச்சயமா... ஆனா அதுக்கு முன்னாடி நீ உனக்கு ஒரு லைஃப் இன்சூரன்ஸ் எடுத்துக்கோ!


-08-

காதலி: நான் செத்தா நீங்க என்ன பண்ணுவீங்க?

காதலன்: நானும் செத்துடுவேன்.

காதலி: ஏன்?"

காதலன்: அவ்வளவு சந்தோஷத்தைத் தாங்குற சக்தி எனக்குக் கிடையாது எண்டு டொக்டர் சொல்லியிருக்கார்!


-09-

காதலி: நேத்து ஏன் என் போனை எடுக்கல?காதலன்: ரிங்டோன் நல்லா பாடலாக இருந்தது, அதான் கேட்டுட்டே இருந்தேன்.


-10-

காதலி: நம்ம காதலைப் பற்றி ஒரு கவிதை சொல்லுங்க.

காதலன்: காதல் ஒரு கடல், நான் ஒரு மீன்... ஆனா நீ தான் தூண்டில் போட்டு என்னைத் தூக்கிட்ட!


-11-

காதலி: ஏங்க, ரோஜாப்பூக்கள்  ஏன் சிவப்பா இருக்கு?

காதலன்: உன்னைப்போல பெண்கள் போடும் மேக்கப் பாக்ஸைப் பார்த்து அது பயந்து ரத்தக் கண்ணீர் வடிச்சு   சிவப்பாயிடுச்சு!


-12-

காதலி: உங்களை நான்  விட்டுட்டு போனா என்ன பண்ணுவீங்க?

காதலன்: பஸ் ஸ்டாண்டுக்கு போய் அடுத்த பஸ்க்கு வெயிட் பண்ணுவேன்!


-13-

மருமகள்: அத்தை, உங்க பையனுக்கு என்னைத் தவிர வேற எதையுமே பிடிக்காது.

மாமியார்: ஆமாம்மா... அவனுக்கு சின்ன வயசுல இருந்தே தரமான பொருட்களை பிடிக்காது.


-14-

மருமகள்: அத்தை, நான் அம்மா வீட்டுக்கு ஒரு வாரம் போயிட்டு வர்றேன்.

மாமியார்: சரிம்மா, போயிட்டு வா... அங்கேயே கனநாள் இருன்னு நான் சொல்ல மாட்டேன், ஏன்னா உன் அம்மா பாவம் இல்லையா!


-15-

இலங்கை போலீஸ்: குடிச்சிருக்கீங்களா? கண்ணு ஏன் சிவப்பா இருக்கு?

நபர்: நீங்க மட்டும் என்ன... லஞ்சம் வாங்குறீங்களா? கை ஏன் நடுக்கமா இருக்கு?


-16-

போலீஸ்: "ஏன் ஹெல்மெட் போடல?"

நபர்: "தலை எழுத்துப்படிதான் நடக்கும்னு எங்க பாட்டி சொன்னாங்க சார்!


-17-

போலீஸ்: உங்க லைசென்ஸ் காட்டுங்க.

நபர்: என்கிட்ட இருந்தா ஏன் சார் உங்ககிட்ட வந்து மாட்டிக்க போறேன்?


-18-

போலீஸ்: திருடும்போது உனக்கு மனசாட்சி இல்லையா?

திருடன்: இருந்தது சார், ஆனா திருடும்போது அதுக்கு 'சைலண்ட் மோடு' போட்டுட்டேன்!


-19-

போலீஸ்: வீட்டுக்குள்ள எப்படி நுழைஞ்ச?

திருடன்: கதவை திறப்பது எப்படின்னு AI யில  பார்த்தேன் சார்!


-20-

போலீஸ்: ஏன் ஓடுறீங்க?

நபர்: நீங்க துரத்துறீங்கன்னு தான் சார் ஓடுறேன்!


-21-

போலீஸ்: உங்க கிட்ட ஆர்.சி (RC) புக் இருக்கா?

நபர்: இல்ல சார், நான் வெறும் பேஸ்புக் தான் வச்சிருக்கேன்!


-22-

போலீஸ்: ஏன் சார் சிக்னலை மதிக்காம போறீங்க?

நபர்: சிவப்பு கலர்தான்  எனக்குப் பிடிக்காத கலர்  சார், அதான் பார்த்தவுடனே கிளம்பிட்டேன்!


-23-

போலீஸ்: "ஜெயில்ல உனக்கு என்ன வேணும்?"

கைதி: "வைஃபை பாஸ்வேர்டு மட்டும் கொடுங்க சார், மத்தபடி நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்!"


-24-

போலீஸ்: நீ திருடுன நகையை எங்கே வச்சிருக்க?

திருடன்: "எங்க பொண்டாட்டி கிட்ட கொடுத்திருக்கேன் சார், முடிஞ்சா நீங்களே போய் வாங்கிட்டு வந்துடுங்க!


-25-

போலீஸ்: "குடிச்சிட்டு வண்டி ஓட்டுறது தப்புன்னு தெரியாதா?"

நபர்:தெரியும் சார், அதான் குடிக்காத என் ஃப்ரெண்ட்டை வண்டிக்கு முன்னாடி ஓட விட்டுருக்கேன்.

😁😁😁😁😁😁தீபம் நகைச்சுவை 


0 comments:

Post a Comment