"அறிவியல் நோக்கில்....''பகுதி-41-"பெளத்தம் ஒரு அலசல்

 "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 41 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'அசோகர் தனது தொண்ணூற்றொன்பது சகோதரர்களைக் கொன்றாரா?'



அத்தியாயம் 6 பெரும்பாலும் அசோகா மன்னன், அவனது இரண்டு குழந்தைகள் மற்றும் புத்த மதத்தைப் பற்றி கூறுகிறது. புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகர் அரசனாக புனிதப்படுத்தப்பட்டார் என்று இதில் கூறப்பட்டுள்ளது. அசோகரின் முடிசூட்டு விழா இந்திய மற்றும் பிற வெளிப்புற வரலாற்று தரவுகளின் அடிப்படையில் தோராயமாக நிறுவப்பட்டது. இருநூற்று பதினெட்டு வருட இடைவெளியின் அடிப்படையில் புத்தர் இறந்த ஆண்டை நாம்  மதிப்பிடலாம். மகிந்த தேரர் மற்றும் தேரி சங்கமித்தா [பாளி] /  சங்கமித்ரா [சம்ஸ்கிருதம்] அசோகருக்கு அவர் உஜ்ஜெனியில் [Ujjeni] துணை அரசராக இருந்தபோது பிறந்தனர் எனக் 6-16 முதல் 17 வரைக்  கூறுகிறது [16. There the daughter of a Seṭṭhi, known by the name of Devī, having cohabited with him, gave birth to a most noble son. 17. Mahinda and Saṅghamittā chose to receive the Pabbajjā ordination; having obtained Pabbajjā, they both destroyed the fetter of (individual) existence.]. இங்கு 17 , கவனத்தில் எடுத்தால், அங்கு கூறப்பட்டுள்ள பப்பாஜ்ஜா என்பது பாளி மொழியில் "வெளியே செல்வது" என்று பொருள்படும். இது புத்த துறவியாக அல்லது துறவறத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் செயலைக் குறிக்கிறது.  அசோகர் தனது நூறு சகோதரர்களை தனது முடிசூட்டுக்கு முன்னதாகக் கொன்றார் என 6-22 கூறுகிறது. [22. தனது நூறு சகோதரர்களைக் கொன்றுவிட்டு, தனியாக தனது வம்சத்தை தொடர, மகிந்தவின் பதினான்காம் ஆண்டில் அசோகன் அரசனாகப் பதவியேற்றார். / 22. Having killed his hundred brothers, alone continuing his race, Asoka was anointed king in Mahinda’s fourteenth year.] புத்த துறவி சமூகம்,  இந்த சகோதரக் கொலை பற்றி எந்தக் கோபத்தையோ, வருத்தத்தையோ, இரக்கத்தையோ வெளிப்படுத்தவில்லை என்பது ஆச்சரியமே! அதுமட்டும் அல்ல, அவர்கள் அதை ஆமோதித்ததாகத் தோன்றுகிறது! அசோகர் உண்மையில் தனது தொண்ணூற்றொன்பது அல்லது நூறு சகோதரர்களைக் கொன்றாரா என்று அறிஞர் சமூகம் தீவிரமாக சந்தேகிக்கின்றது; ஒருவேளை ஒரு சில சகோதரர்களைக் கொன்று இருக்கலாம்?. எனினும், இந்த அத்தியாயம் இந்தியாவில் பல்வேறு இடங்களில், பல கல்வெட்டுகளின் ஆசிரியரை அடையாளம் காண துப்பு வழங்கியிருக்கிறது. அந்த கல்வெட்டுகள் அனைத்தும் ஆசிரியரின் உண்மையான பெயர் இல்லாமல் அநாமதேயமாக [பெயரும் நாடும் (ஊரும்) அறியப்படாத ஒரு நபர்] முதலில் இருந்தன. உதாரணமாக, ஜேம்ஸ் பிரின்செப் [James Prinsep] கல்வெட்டுகளை மொழிபெயர்த்தாலும், அவரால் கல்வெட்டுகளின் ஆசிரியரை அடையாளம் காண முடியவில்லை. [இங்கு குறிப்பிட்ட கல்வெட்டுகள், பெயர் தெரியாமல் முன்பு இருந்த அசோகனின் கல்வெட்டுகள் ஆகும்]   

மேற்கூறிய கல்வெட்டுகளில், ‘பியதாசனா’ [தேவநம்பிய மற்றும் பியதாசி அல்லது பியதாசனா, இவை அசோகரின் பெயரின் மாறுபாடுகள் / Devanampiya and Piyadasi or Piyadassana] என்ற பெயர் இடம் பெற்றுள்ளன. அதேவேளை, [Dīpavaṁsa / VI. [Asoka’s Conversion] இல்] 6 ஆம் அத்தியாயம் - 18 ஆம் 24 ஆம் பாடலில், அசோகா மற்றும் பியதாசனா என்ற பெயர் கூறப்பட்டுள்ளதைக் காண்க. [18. அசோகர் பாட்டலிபுத்தாவில் ஆட்சி செய்தார், நகரங்களில் சிறந்தது; அவரது முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புத்தரின் நம்பிக்கைக்கு மாற்றப்பட்டார். / 24. இந்தியாவின் பேரரசர் அசோகரின் மற்றொரு பெயரான பியதாசி மன்னனைப் பற்றி பேசுகிறது. அசோகர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு  (?) அதிகாரப்பூர்வமாக மன்னராக முடிசூட்டப்பட்டார் என்றும் மன்னரான பிறகு, அவர் பௌத்தம் அல்லாத மத குழுக்களுக்கும் மரியாதை செலுத்தி மூன்று ஆண்டுகள் கழித்தார் எனவும் கூறுகிறது (பாசண்டா என்பது மதவெறியர்கள் அல்லது காஃபிர்களைக் குறிக்கிறது, அதாவது பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள்). / 18. Asoka ruled in Pāṭaliputta, best of towns; three years after his coronation he was converted to Buddha’s faith. 24. They crowned Piyadassi after full twenty years (?); he passed three years doing honour to Pāsaṇḍa infidels.] குறிப்பாக இந்த இரண்டு வசனங்களும் தான், கி பி 1837 இல் ஜேம்ஸ் பிரின்செப் [James Prinsep] என்பவரால் இந்தியாவின் தொலைந்து போன புத்த சக்கரவர்த்தி அசோகாவை, அடையாளம் காண உதவியது. என்றாலும், அதன் பின், கி பி 1915  இல் மஸ்கியில் [Maski] கண்டு பிடிக்கப்பட்ட சிறிய பாறைக் கல்வெட்டு தான், 'அசோகா' என்ற உண்மையான பெயருடன் பட்டப் பெயரான 'பியதாசனா' வையும் ஒன்றாகக் கொண்டு இருந்தன. இந்த கல்வெட்டுகள் அசோகர் கல்வெட்டுக்கள் அல்லது அசோகரின் கட்டளைகள் [ Asoka’s Edicts, Asoka’s Command.] என்று இன்று அழைக்கப்படுகின்றன.

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

 

 

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

 

Part: 41 / Appendix – Dipavamsa / 'Is Asoka slaughtered his ninety nine brothers?'

 


Chapter 6 is mostly about the King Asoka, his two children and Buddhism. It was given in this that Asoka was consecrated two hundred and eighteen years after Buddha’s death. Asoka’s coronation could be approximately established based on the Indian and other external historical data. Then the year of the Buddha’s death could be evaluated based on the gap of two hundred and eighteen years. Mahinda Thera and Theri sanghamitta  were born to Asoka when he was in Ujjeni as sub-king, 6-16 to 17. Asoka killed his one hundred brothers prior to his coronation, 6-22. [22. Having killed his hundred brothers, alone continuing his race, Asoka was anointed king in Mahinda’s fourteenth year.] The monkish community never expressed any indignation, remorse or compunction in this parricide. They seemed to have approved of it! The scholarly community seriously doubts whether Asoka really slaughtered his ninety nine brothers; perhaps a few.

 

This chapter must have provided the clue to identify the author of the many inscriptions in India on various locations, far and wide. All those inscriptions were anonymous without the real name of the author. James Prinsep was able to translate the inscriptions, but unable to identify the author of the inscriptions.  The word ‘Piyadassana‘ [the names Devanampiya and Piyadasi or ‘Piyadassana , which are variations of Ashoka's name] occurred in the inscriptions. The name Asoka and Piyadasana occurred in this chapter [18. Asoka ruled in Pāṭaliputta, best of towns; three years after his coronation he was converted to Buddha’s faith. / 24. They crowned Piyadassi after full twenty years (?); he passed three years doing honour to Pāsaṇḍa infidels.] which enabled to identify the lost Buddhist emperor of India, Asoka, by James Prinsep around 1837 A. D. The minor rock inscriptions found at Maski in 1915 A. D. has the real name Asoka with the appellation Piyadassana, which ultimately confirmed the author of the inscriptions as the King Asoka. These inscriptions are known as Asoka’s Edicts, Asoka’s Command.

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 42 தொடரும் / Will follow

0 comments:

Post a Comment