"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific
perspective" [In Tamil & English] /
பகுதி: 44 C / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இந்தியா இலங்கை மரபுக்களுக்கிடையில் வேறுபாடு ஏன்?'
[தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]
அலகாபாத் தூணில் உள்ள ராணியின் ஆணை கருவாகியின் அறச் செயல்களைக் குறிக்கிறது.
"கடவுளின் பிரியமானவரின் ஆணைப்படி, எல்லா இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு, இரண்டாவது ராணியின் பரிசாக இருந்தாலும், ஒரு மாமரமாக இருந்தாலும், ஒரு மடமாக இருந்தாலும், தர்மம் செய்யும் நிறுவனமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நன்கொடையாக இருந்தாலும், அது அந்த ராணியின் ... இரண்டாவது ராணி, திவலாவின் தாயாரின் பெருமைக்கு கணக்கிடப்பட வேண்டும்." என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கை பாரம்பரியம் மகிந்த என்று அழைக்கப்படும் ஒரு மகனைக் குறிப்பிடுகிறது, அவர் இலங்கைக்கு ஒரு பௌத்த மதப் போதகராக அல்லது தூதராக அனுப்பப்பட்டார் என்று சொல்லுகிறது. ஆனால், இந்த மகன், அவன் தாய் தந்தை வாழ்ந்து, இறந்த வட இந்திய பாரம்பரியத்தில் எதிலும் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் சீன யாத்ரீகர் சுவான்சாங் (யுவான் சுவாங்) (ஆங்கிலம்: Xuanzang / Hsuan-tsang, sometimes
transcribed Xuan Tsang) மகிந்த உண்மையில் அசோகரின் இளைய சகோதரர் (விடஷோகா அல்லது விகடஷோகா) என்றும், அவர், அசோகனின் மகனாக இருக்க முடியாது என்றும் கூறுகிறார் [The Chinese pilgrim Xuanzang states
that Mahinda was Ashoka's younger brother (Vitashoka or Vigatashoka) rather
than his illegitimate son. Here Vitashoka was a prince of the Maurya Empire as
the only full-brother of Ashoka and the only brother left alive by Ashoka]. அவர் மேலும், பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மகிந்த தேரரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda
thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city
and states that most of its population was Buddhist].
பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana
mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராண கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although
the chronicles say he arrived through his supernatural powers, scholars are of
the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east
coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor
of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார்.
இலங்கை மகாவம்சத்தில் மட்டுமே அசோகனின் மகனாக மஹிந்த கூறப்பட்டுள்ளது. என்றாலும் அசோகன் பிறந்த வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் 'மகிந்த' கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அதே போல மகாவம்சத்தில் கூறப்படட சங்கமித்தையும் வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றாசிரியர்களின் ஒரு பகுதியினரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உதாரணமாக, இந்திய வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் (Romila Thapar) பின்வரும் காரணங்களின் அடிப்படையிலும் மற்றும் பல காரணங்களை சுட்டிக்காட்டி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
"சங்கமித்தா" என்ற பெயர், பௌத்த ஒழுங்கின் (சங்க) தோழி என்று பொருள்படும் [The name "Sanghamitta",
which literally means the friend of the Buddhist order (sangha)], இது வழக்கத்திற்கு மாறானது [Thapar, Romila (1961). Aśoka and
the Decline of the Mauryas. Oxford University Press, p. 23], ஏன் என்றால் அவள் பிறக்கும் பொழுது புத்த மதத்தில் இருக்கவில்லை. மேலும் இலங்கை ராணியை புத்த மதத்திற்கு நியமிக்க வேண்டும் என்பதற்காக அவள் இலங்கைக்குச் சென்ற கதை மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றுகிறது. அவள் அசோகரின் மருமகன் அக்னிபிரம்மாவை [Agnibrahma] மணந்தார் என்றும், தம்பதியருக்கு சுமனா [Sumana] என்ற மகன் இருந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. அன்று வழக்கத்தில் இருந்த, எக்ஸோகாமி [exogamy / ஒருவன் தனது இனத்துக்குப் புறம்பே தான் மணம் செய்து கொள்ள வேண்டு மென்று கட்டுப் படுத்தும் வழக்க மரபு] தொடர்பான சமகால சட்டங்கள் முதல் உறவினர்களுக்கு இடையே அத்தகைய திருமணத்தை தடை செய்திருக்கும் [Thapar, Romila (1961). Aśoka and
the Decline of the Mauryas. Oxford University Press. p. 24.]. மகாவம்சத்தின் படி, அவர் கன்னியாஸ்திரியாக நியமிக்கப்பட்டபோது அவளுக்கு 18 வயது. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், மேலும் அவரது கணவர் மற்றும் அவரது குழந்தை புனிதப்படுத்தப்பட்டதாக கதை கூறுகிறது. இவ்வளவு இளம் குழந்தையுடன் அவள் கன்னியாஸ்திரியாக அனுமதித்திருக்க வாய்ப்பில்லை [Thapar, Romila (1961). Aśoka and
the Decline of the Mauryas. Oxford University Press. p. 24.].
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
0 comments:
Post a Comment