நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
கணவன்: "எனக்கு என் பொண்டாட்டியோட பேசுறது ரொம்ப பிடிக்கும், ஏன்னென்னா சண்டையே வர்றதில்லை...."
நண்பன்: "அப்படியா! என்ன பேசுவீங்க?"
கணவன்: "அவ பேசுவா, நான் 'சரிமா... சரிமா...'னு அமைதியா கேட்பேன்!"
-02-
கணவன்: "கடைக்கு போனா 10 நிமிஷத்துல வந்துடுவேன்னு சொன்னியே?"
மனைவி: "ஆமாங்க, நான் அப்படிதான் சொன்னேன். ஆனா நீங்க ஏன் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி தொந்தரவு பண்றீங்க?"
-03-
கணவன்: "நம்ம நாய் என்னைப் பார்த்தா ஏன் எப்போதும் குரைக்குது?"
மனைவி: "அதுக்கு தங்கட இனத்தைக் கண்டால் பிடிக்காதே!"
-04-
அப்பா: "நான் உன் வயசுல இருக்கும்போது பொய் சொன்னதே இல்லை!"
மகன்: "சரிப்பா... அப்போ எந்த வயசுல இருந்து பொய் சொல்ல ஆரம்பிச்சீங்க?"
-04-
மனைவி: "ஏங்க, சமையல்ல ஏதோ குறை இருக்கா?"
கணவன்: "ஒன்னும் இல்லைமா... உப்பு, காரம், சுவை... இது மூணும் தான் இல்லை!"
-05-
மனைவி: "உங்க போன் பாஸ்வேர்ட் என்ன?"
கணவன்: "நம்ம கல்யாண நாள் தேதிதான்."
மனைவி (கோபமாக): "அதான் என்ன தேதி சொல்லுங்க?!"
-06-
அப்பா: "கணிதத்துல 100-க்கு 10 மார்க்கா வாங்கியிருக்க?"
மகன்: "மீதி 90 மார்க் என் திறமைக்கு கிடைக்க வேண்டியதுப்பா... ஆனா ஆசிரியர் தராமல் ஏமாத்திட்டாரு!"
-07-
மனைவி: "உங்களுக்கு காலையில தோசை வேணுமா, பூரி வேணுமா?"
கணவன்: "தோசை குடு."
மனைவி: "தோசை மாவு இல்லைங்க, பூரிதான் சுட முடியும்!"
கணவன்: (மனதுக்குள்: "அப்புறம் எதுக்குடி ஆப்ஷன் கேட்ட?!")
-08-
ஆசிரியர்: "ரேங்க் கார்டுல உங்க அப்பா கையெழுத்து எங்கடா?"
மாணவன்: "சார், அப்பா கையெழுத்து போட்டா ரேங்க் கார்டு அசிங்கமாயிடும்னு நானே போட்டுட்டேன் சார்!"
-09-
ஆசிரியர்: "‘பயமின்மை’ (Fearless) என்றால் என்ன?"
மாணவன்: "பரீட்சைக்குப் படிச்சிட்டு வராம, தைரியமா முதல் பெஞ்ச்ல உட்கார்றதுதான் சார்!"
-10-
குண்டான ஆசிரியர்: "நான் போர்டுல வரைஞ்சிருக்க யானை படம் எப்படி இருக்கு?"
மாணவன்: "சார், நீங்க வரைஞ்சது யானையா? நான் இன்னும் அது சுண்டெலின்னு நினைச்சுட்டு இருக்கேன்!"
-12-
ஆசிரியர்: "கிராவிட்டி (ஈர்ப்பு விசை)-யைக் கண்டுபிடிச்சது யாரு?"
மாணவன்: "சர் ஐசக் நியூட்டன் சார். அவர் ஆப்பிள் மரத்தடிக்கு பதிலா தென்னமரத்தடியில உட்கார்ந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!" (தலையில விழ)
-13-
மாணவன்: "சார், பரீட்சை வினாத்தாள் ரொம்ப சுலபமா இருந்துச்சு சார்!"
ஆசிரியர்: "அப்படியா! நல்ல மதிப்பெண் வருமா?"
மாணவன்: "கேள்வி சுலபம்தான் சார்... ஆனா பதில்தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு!"
-14-
ஆசிரியர்: "ராமு... நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரலை?"
மாணவன்: "நேத்து மழை வந்துச்சு சார்."
ஆசிரியர்: "இன்னைக்கும் மழை வருதே, அப்புறம் எப்படி வந்தே?"
மாணவன்: "இன்னைக்கு உங்க திட்டுக்கு பயந்து குடை பிடிச்சுட்டே வந்துட்டேன் சார்!"
-15-
போலீஸ்: "ஏண்டா, ராத்திரி 2 மணிக்கு அந்தப் பூட்டிய வீட்டுக்குள்ள எதுக்கு நுழைஞ்சே?"
திருடன்: "சார், 'இரவில் தூக்கம் வரவில்லையா? 'வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்' னு அந்த அம்மாவின்ர முகநூலில
எழுதியிருந்துச்சு... அதான் புத்தகம் எடுக்கப் போனேன்!"
-16-
நீதிபதி: "உன்னை இதுக்கு முன்னாடி நான் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?"
திருடன்: "ஆமாங்க அய்யா! 5 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு 5 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்ததே நீங்கதானே!"
-17-
போலீஸ்: "ஏண்டா, நகைக்கடையில திருடிட்டுப் போகும்போது ஏன் அந்த டைமண்ட் நெக்லஸை மட்டும் விட்டுட்டுப் போனீங்க?"
திருடன்: "சார்... தயவுசெஞ்சு அதைமட்டும்
ஞாபகப்படுத்தாதீங்கோ , அதை நினைச்சு ஏற்கனவே என் பொண்டாட்டி, வீட்ல என்னை போட்டு அடி அடியனு அடிக்கிறா!"
-18-
நண்பன் 1: "பூங்காவுக்கு வந்து 1 மணி நேரம் ஆச்சுடா... உடற்பயிற்சி எதுவும் பண்ணலையா?"
நண்பன் 2: "பண்ணிட்டேனேடா! 50 செல்ஃபி எடுத்து, அதுல 5 போட்டோவை ஃபில்டர் போட்டு இன்ஸ்டாகிராம்ல அப்லோட் பண்ணிட்டேன்... கை விரலுக்கு நல்ல எக்சர்சைஸ்!"
-19-
ஐஸ்கிரீம்காரர்: "சார், பூங்காவுல வந்தனீங்க உங்க பொண்டாட்டிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொள்ளுங்க!"
கணவன்: "அவளுக்கு
ஐஸ்கிரீம் குடிச்சா ஜலதோஷம் பிடிக்கும் தம்பி."
ஐஸ்கிரீம்காரர்: "பரவாயில்லை சார்... ஒரு ஐஸ்கிரீம் வாங்கித் தந்தா ரெண்டு நாள் வீட்ல அமைதி நிலவுமே!"
கணவன்:''அமைதியா! அப்புறம் நானல்லவா சமைக்கவேணும்!
-20-
நபர் 1: "காலை 5 மணிக்கே பூங்காவுல இவ்வளவு பெரிய கூட்டமா இருக்கே... எல்லாரும் உடம்பைக் குறைக்க வந்திருக்காங்களா?"
நபர் 2: "இல்லை சார்... வீட்ல டீ போடச் சொல்லி மனைவிகிட்ட திட்டு வாங்க பயந்து ஓடி வந்தவங்க!"
-21-
வாடிக்கையாளர்: "அண்ணே, 5 ரூபாய் லேஸ் பாக்கெட்டுக்கு 500 ரூபாய் நோட்டு தர்றேன்னு கோபப்படாதீங்க... என்கிட்ட சில்லறை இல்லை."
கடைக்காரர்: "பரவாயில்லை தம்பி... மீதி 495 ரூபாய்க்கு சாக்லேட் எடுத்துக்கோ!"
-22-
தயாரிப்பாளர்: "மேடம், இந்தப் படத்துல நடிக்க உங்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் தர்றேன்."
நடிகை: "1 கோடியா?! என் நாய்க்குட்டி வாங்குற பிஸ்கட் செலவுக்கே இது பத்தாதே சார்!"
தயாரிப்பாளர்: "அப்போ ஒன்னு பண்ணுங்க மேடம்... உங்க நாய்க்குட்டியையே கதாநாயகியா நடிக்க வச்சிடுறேன்!"
-23-
இயக்குநர்: "மேடம், இந்த சீன்ல நீங்க கதாநாயகனுக்கு சமையல் செஞ்சு கொடுக்கணும்."
நடிகை: "ஐயோ சார்! எனக்கு சமையலே பண்ணத் தெரியாதே... நிஜமாவே சமைக்கணுமா?"
இயக்குநர்: "பயப்படாதீங்க மேடம்... கதையில கதாநாயகன் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு மயங்கி விழுற மாதிரிதான் சீன்!"
-24-
நிருபர்: "மேடம், சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு... ஆனா இன்னமும் உங்களுக்கு 21 வயசுதான் ஆகுதுன்னு சொல்றீங்களே, எப்படி?"
நடிகை: "நான் சொன்ன வார்த்தையை காப்பாத்துற பொண்ணுங்க... என்னைக்குமே மாத்தி பேச மாட்டேன்!"
-25-
ரசிகர்: "மேடம்! நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன்... உங்களுடைய எல்லாப் படத்தையும் தியேட்டர்ல போய் பார்த்திருக்கேன்!"
நடிகை: "அப்படியா! ரொம்ப சந்தோஷம்... அப்போ அந்த தியேட்டர்ல இருந்த ஒரே ஆள் நீங்கதானா?!"
தீபம் நகைச்சுவை
0 comments:
Post a Comment