சினிமா:


வைகாசி மாதத்தில் வெளிவந்த திரைப்படங்கள்.
2012-05-14 கலகலப்பு
நடிகர்கள்: - விமல், சிவா, சந்தானம், அஞ்சலி.
கதை: - இழந்த ஹோட்டலை மீட்டு,காதலை கெட்டியாக்கிய ஒரு நாயகனின் கதை. 
கருத்து: - நல்ல காமெடி படம்தான்.
புள்ளிகள்:-55
2012-05-06 வழக்கு எண் 18/9
நடிகர்கள்: - ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ்.
கதை: - வசதியானவர்களின் காம காதல் ஒன்றால், வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும், இன்னல்களும் படத்தின் கரு
கருத்து: - ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி
புள்ளிகள்:-60
2012-04-15 ஒரு கல் ஒரு கண்ணாடி
நடிகர்கள்: - உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா.
கதை: - அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை.
கருத்து: - குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை
புள்ளிகள்:-60


திரையுள்:-
விருது, பாராட்டு மழையில் ‘தூங்கா நகரம்’
நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் நேர்த்தியாக சொல்லிய படம் தூங்கா நகரம். இப்படத்தில் விமல், பரணி, நிஷாந்த், கௌரவ், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌரவ்-க்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படத்துக்கு நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்தது. மேலும் துபாயிலும் விருதுகள் வாங்கியுள்ளது. இதனால் இயக்குனர் கௌரவ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இப்படத்தை பார்த்த வெளிநாட்டினர் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தரமான படம் என பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இவர் அடுத்துசிகரம் தொடுஎன்ற புதிய படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். தந்தை-மகன் உறவு குறித்து ஆழமாக சொல்லக்கூடிய ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகிறது. சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.
கடல் ஷூட்டிங்கில் குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்
மணிரத்னத்தின் கடல் பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவை கலங்கடித்துவிட்டாராம்.
மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாகிறார் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம். படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
படத்தில் நாயகன் அனாதை ஆனாலும் ஊர் மக்களின் உள்ளங்களில் வாழ்பவன். நாயகனை எடுத்து வளர்த்த பொன்வண்ணன் ஒரு நாள் அவர் அனாதை என்ற உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்ட நாயகன் குமுறி, குமுறி அழ வேண்டும். காட்சியை நாயகனிடம் மணிரத்னம் விவரிக்க கௌதம் இயக்குனர் எதிர்பார்த்த மாதிரியே அழுது உருகிவிட்டாராம். இதைப் பார்த்த படக்குழுவும் கலங்கிவிட்டதாம்.
புதுமுகமாக இருந்தாலும் அவர் நடிப்பை பார்த்து அசந்த படக்குழுவினர் நாயகனை மனதாரப் பாராட்டினார்களாம். நவரச நாயகனின் மகன் அதுவும் மணிரத்னத்தின் இயக்கத்தில் என்றால் கௌதம் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.
இந்த படத்தில் தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சாமி இந்த படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி ஹாங்காங் பயணம்
ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அங்கு அரங்குகள் அமைத்து ரஜினி நடித்தார். முக்கிய காட்சிகளை படமாக்கினர். ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. ரஜினி, தீபிகா படுகோனே, ஆதி நடித்த காட்சிகளை அங்கு படமாக்கினர். ஒரு பாடலுக்கு ரஜினியும், தீபிகா படுகோனேவும் பரத நாட்டியம் ஆடும் காட்சியையும் அங்கு எடுத்தனர்.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரஜினி இன்று காலை விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். இதுபோல் தீபிகா படுகோனேயும் ஹாங்காங் செல்கிறார்.
ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் படப்பிடிப்பு நடக்கிறது. கோச்சடையான் படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
தமிழ் நடிகர்களின் முதல் திரைப்படம்
நடிகா்………………………..திரைப்படம்
 பரத் ……………………….போய்ஸ்
 விஷால்……………..செல்லமே
 சிபிராஜ்……………….ஸ்டுடண்ட் நம்பர் 1
 ஸ்ரீகாந்த்………………ரோஜாகூட்டம்
எஸ்.ஜே.சூர்யா………..நியூ
ஜீவன்……………………..யுனிவர்சிட்டி
பிரித்விராஜ்………..கனா கண்டேன்
ஜெய்…………………………..பகவதி
சசிகுமார்……………சுப்ரமணியபுரம்
பிரகாஷ் ராஜ்……….டூயட்
ராஜ்கிரண்………..என் ராசாவின் மனசிலே
கார்த்தி………………….பருத்திவீரன்
எம்.ஜி.ஆர்………….சதிலீலாவதி
சிவாஜி…………………பராசக்தி
ஜெமினிகணேசன்………ஒளவையார்
எஸ்.எஸ்.ஆர்………பராசக்தி
முத்துராமன்……….அரசிளங்குமரி
ஏவி.எம்.ராஜன்…….நானும் ஒரு பெண்
சிவகுமார்………..காக்கும் கரங்கள்
ஜெய்சங்கர்………..இரவும் பகலும்
ரவிச்சந்திரன்………….காதலிக்க நேரமில்லை
விஜயகுமார்……………..ஸ்ரீ வள்ளி
ரஜினிகாந்த்……….அபூர்வ ராகங்கள்
கமலஹாசன்……..களத்தூர் கண்ணம்மா
விஜயகாந்த்…….இனிக்கும் இளமை
சத்யராஜ்……………சட்டம் என் கையில்
பாக்யராஜ்…………………16 வயதினிலே
கார்த்திக்………….அலைகள் ஒய்வதில்லை
பிரபு……………………….சங்கிலி
முரளி………………பூவிலங்கு (தமிழில்)
ராம்கி…………..சின்னப்பூவே மெல்லப்பேசு
பார்த்திபன்………..தாவணிக்கனவுகள்
அர்ஜூன்………………நன்றி
சரத்குமார்……கண் சிமிட்டும் நேரம்
விக்ரம்………..தந்துவிட்டேன் என்னை
பிரசாந்த்……….வைகாசி பொறந்தாச்சி
அஜீத்…………அமராவதி
விஜய்………..நாளைய தீர்ப்பு
பிரபுதேவா……..இதயம்
அரவிந்தசாமி……..தளபதி
அருண்குமார்…..பிரியம்
அப்பாஸ்………காதல் தேசம்
குணால்………காதலர் தினம்
சூர்யா…………நேருக்கு நேர்
ஷாம்……………12பி
மாதவன்……….அலைபாயுதே
தனுஷ்……….துள்ளவதோ இளமை
சிலம்பரசன்…காதல் அழிவதில்லை
பாலா………………அன்பு
ரவி………………..ஜெயம்
நரேஷ்…………….குறும்பு
ஆரியன் ராஜேஸ்…………….ஆல்பம்
வினித்………………ஆவாரம்பூ
விக்னேஷ்………….சின்னத்தாயி
வடிவேலு……………என் ராசாவின் மனசிலே
தங்கவேலு………..சதி லீலாவதி
சுரேஷ்……………………பன்னீர் புஷ்பங்கள்
மோகன்……………நெஞ்சத்தை கிள்ளாதே
ராமாராஜன்……….நம்ம ஊரு நல்ல ஊரு
ராதாரவி…….தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
காத்தாடி ராமுர்த்தி….பெண்ணே நீ வாழ்க
கரண்……………..அண்ணாமலை
வையாபுரி……………மாணிக்கம்
ஆனந்த பாபு……….உயிருள்ளவரை உஷா
ரஞ்சித்……………………சிந்துநதிப் பூ
நெப்போலியன்………….புது நெல்லு புது நாத்து

கணிணிஉலகம்:


ஐபோன், ஐபேட் வரிசையில் அடுத்து வரும் ஆப்பிள் டிவி

ஆப்பிள் ஒரு டிவியை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் வதந்தீ காட்டுத் தீப்போல பரவி வந்தது. அந்த வந்தி தற்போது உண்மையாகப் போகிறது. ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை வடிவமைத்த பாக்ஸ்கான் இப்போது ஆப்பிள் ஐடிவியை தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. சைனா டெய்லி என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாக்ஸ்கானின் தலைவர் டெரி கோ தமது நிறுவனம் ஆப்பிளின் புதிய டிவியை தற்போது தயாரித்து வருவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதன் மூலம் பல காலமாக நிலவி வந்த வதந்தி இப்போது நிஜமாகப் போகிறது என்று கூறுகிறார். இந்த டிவி பேஸ் டைம் மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகளுடன் வர இறுக்கிறது. இந்த புதிய டிவி தயாரிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, இந்த டிவி இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வருவது சாத்தியமில்லை என்று சைனா நாளிதழ் கூறுகிறது.
பாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் சிறந்த வர்த்தக நண்பர்கள் என்ற முறையில் டெரி ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த முக்கியத் தகவலைக் கசியவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் பாக்ஸ்கான் இந்த புதிய ஆப்பிள் டிவியைத் தயாரிக்க ஷார்ப் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்ற சைனா டெய்லி கூறுகிறது. சைனா டெயிலியின் இந்த புதிய தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐசிஎஸ் அப்டேட் பெறும் ஐபெரி டேப்லெட்!

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டைத் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் (ஐசிஎஸ்) இயங்கு தளத்தை மிக வேகமாக அப்டேட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐபெரி நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு டேப்லெட்டான ஐபெரி பிடி07ஐக்கு ஐசிஎஸ் அப்டேட்டை வழங்கி வருகிறது. அதன் மூலம் இந்த ஐபெரி டேப்லெட் மேலும் புதுப் பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த அப்க்ரேட் மூலம் இந்த டேப்லெட்டின் கேமரா அப்ளிகேசன் மற்றும் பேட்டரி பேக்கப் ஆகியவை மேம்பாடு அடையும். அதோடு கேலரி அப்ளிகேசன் மற்றும் பன்முக செயல்பாடு போன்றவற்றில் இந்த டேப்லெட் இன்னும் சிறப்பாக செயல்படும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே இந்த டேப்லெட் 800×480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம், 1 ஜிஹெர்ட்ஸ் எஎம் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர், 4ஜிபி சேமிப்பு, சூப்பரான முகப்பு கேமரா, வைபை மற்றும் 3ஜி டோங்குள்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
இந்த அப்டேட் மூலம் இந்த மலிவு விலை டேப்லெட்டின் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபெரி டேப்லெட்டை வைத்திருப்போது நேரடியாக அப்க்ரேட் செய்யலாம். அதாவது இந்த அப்க்ரேட் பைலை எஸ்டி கார்டு மூலம் இந்த டேப்லெட்டில் இணைக்க வேண்டு. பின் ஐபெரியின் வெப்சைட்டுக்குள் சென்று அப்டேட் லிங்கை க்ளிக் செய்தால் போதும். டேப்லெட் மிக எளிதாக இந்த அப்டேட்டைப் பெற்றுவிடும்.

வேகத்தில் பின்னும் புதிய லெனோவா கம்ப்யூட்டர்!

லெனோவா ஒரு புதிய சிறிய மேசைக் கணினியைக் களமிறக்க இருக்கிறது. இந்த கணினிக்கு திங்க்சென்டர் எம்92பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மேசைக் கணினியின் சிறப்பு என்னவென்றால் இந்த கணினி ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த கணினி மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த வேகம் மிகத் தாறுமாறாக இருக்கும். மேலும் இது முழுக்க முழுக்க ஒரு வர்த்தக கணினியாகும். இந்த கணினி டைனி என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது. இந்த லெனோவா மேசைக் கணினி இன்டல் கோர் சிப் கொண்டிருப்பதால் இதன் உறுதிக்கு உத்திரவாதம் வழங்க முடியும். மேலும் இந்த கணினி விப்ரோ வசதி கொண்டிருப்பதால் இது ஐடி கண்ட்ரோல் வசதிகளையும் வழங்குகிறது.
இந்த கணினியில் ஸ்பின்னிங் அல்லது சாலிட் ஸ்டேட் ஹார்ட் ட்ரைவ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கணினி வைபை மற்றும் க்ராபிக்ஸ் வசதி ஆகியவை கொண்டு வருவதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக அருமையாக செய்ய முடியும்.இந்த லெனோவா கணினி டிஸ்ப்ளேபோர் டோங்குள்களையும் கொண்டு வருகிறது. அதனால் விருப்பமான டிஸ்பளேயை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறிய கணினி வோல்பி மற்றும் வீடியோ உரையாடலையும் சப்போர்ட் செய்கிறது. இந்த சிறிய மேசைக் கணினி மற்ற பெரிய மேசைக் கணினிகளைவிட மிக உறுதியாக இயங்கக் கூடியது. மேலும் இதன் பூட்டிங் மிக விரைவாக இருக்கும்.

சாம்சங் அறிமுகம் செய்யும் புதிய நோட்புக்

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய வரிசை 5 550பி நோட்புக்குளை இங்கிலாந்தில் களமிறக்க இருக்கிறது சாம்சங். இந்த அல்ட்ராபுக்குகள் மற்ற லேப்டாப்புகளைப் போல தோன்றுகின்றன. இந்த 5 550பி வரிசையில் இரண்டு நோட்புக் மாடல்களை சாம்சங் களமிறக்க இருக்கிறது. அதாவது 15 இன்ச் மற்றும் 17 இன்ச் என இரண்டு மாடல்கள் வருகின்றன. 15 இன்ச் நோட்புக்கின் டிஸ்ப்ளே 1366 X 768 பிக்சல் ரிசலூசனையும் அதே நேரத்தில் 17 இன்ச் நோட்புக் 1600 X 900 பிக்சல் ரிசலூசனையும் கொண்டுள்ளன. இந்த நோட்புக்குகள் க்வாட் கோர் ஐவி பிரிட்ஜ் கோர் ஐ7 சிப்களையும், 8ஜிபி ரேமையும் கொண்டுள்ளன. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக 2ஜிபி ஜிஇபோர்ஸ் ஜிடி 650எம் வசதியும் உள்ளது. அதுபோல் இந்த நோட்புக்குகளில் ப்ளூ ரே ஆப்டிக்கல் ட்ரைவ் ப்ளஸ் வசதியும் உண்டு. மேலும் இதன் சேமிப்பு வசதி 2டிபி ஆகும். எனவே ஏராளமான தகவல்களை இந்த நோட்புக்குகளில் சேமித்து வைக்க முடியும். ஒலி அமைப்பிற்காக இந்த நோட்புக்குகள் ஜேபிஎஸ் ஸ்பீக்கர்களையும், மேக்ஸ் பாஸ் பூஸ்ட் துணை ஊபரையும் கொண்டுள்ளன. அதனால் இதன் ஒலி அமைப்பு மிக பக்காவாக இருக்கும்.

ஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் புதிய நோட்புக்!

மவுஸ் கம்யூட்டர் நிறுவனம் நோட்புக் ரசிகர்களுக்கு ஒரு புதிய நற்செய்தியை வழங்க இருக்கிறது. இந்த மவுஸ் கம்யூட்டர் எல்பி-டி710பி என்ற ஒரு புதிய 17.3 இன்ச் நோட்புக்கை களமிறக்க இருக்கிறது. கருப்பு நிறத்தில் களையாக வரும் இந்த நோட்புக் அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது. தொடு வசதி இல்லாத இதன் திரை 1920 × 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. விண்டோஸ் 64பிட் 7 ஹோம் இயங்கு தளத்தில் இயங்கு இந்த நோட்புக் இன்டல் கோர் ஐ5-2450எம் ப்ராசஸர், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் மற்றும் இன்டல் எச்எம்76 சிப்செட் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இந்த நோட்புக் மிக வேகமாக இயங்கும் திறன் கொண்டது. அதுபோல் இந்த நோட்புக் மிக உறுதியாகவும் இருக்கும். முகப்பு வெப்காம் மட்டும் கொண்டுவரும் இந்த நோட்புக் வீடியோ வசதியையும் கொண்டுள்ளது. இதில் இமெயில் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகளும் உண்டு. 4ஜிபி டிடிஆர்3 ரேமைக் கொண்டிருக்கும் இந்த நோட்புக்கின் சேமிப்பை மல்டி கார்டு ரீடர் மூலம் விரிவுபடுத்தவும் முடியும்.
இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்எல் ப்ரவ்சர் வசதிகளை இந்த நோட்புக் கொண்டுள்ளதால் இதில் தடையின்றி தகவல்களை மிக விரைவாக பரிமாற்றம் செய்யலாம். இந்த நோட்புக் சூப்பாரன பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. அதற்காக இந்த நோட்புக் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர், வீடியோ கேம்கள், அசத்தலான ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது. சூப்பரான லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த நோட்புக் 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த நோட்புக்கின் விலை ரூ.50000 ஆகும். இந்த நோட்புக் தற்போது ஜப்பானில் விற்பனையாகி வருகிறது.

புதிய ஐஓஎஸ் இயங்கு தளத்தை அப்டேட் செய்யும் ஆப்பிள்

நவீனம், புதுமை மற்றும் தரம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக எப்போதுமே ஆப்பிள் நிறுவனம் இருந்து வருகிறது. அதனால் தான் வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் மீது மோகம் கொண்டு இருக்கின்றனர். இந்த ஆப்பிள் தனது ஐஒஎஸ் இயங்கு தளத்தில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. அதன் மூலம் இந்த ஐஒஎஸ் இயங்கு தளம் மேலும் மெருகு பெறும் என்று நம்பலாம். ஆப்பிளின் ஐஒஎஸ் 5.1.1. அப்டேட் பல வசதிகளுடன் வருகிறது. அதாவது ஏர் ப்ளே வீடியோ ப்ளே பேக்கிற்கான பக் பிக்சஸ் வசதி இந்த அப்டேட்டில் உள்ளது. அதனால் புதிய ஐபேடை 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 3ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. மேலும் அன் ஏபிள் டூ பர்சேஸ் என்ற தவறான செய்தியும் புதிய ஐபேடில் வராது.
இந்த ஐஒஎஸ் 5.1 கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆப்பிளால் அறிமுகம் செய்யப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் இப்போது இந்த இயங்கு தளத்தில் 5.1.1 அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேட் பேட்டரிக்கும் நீடித்த ஆயுளை வழங்கும். இந்த புதிய ஐஒஎஸ் 5.1.1.ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக ஐஒஎஸ் இயங்கு தளம் வைத்திருக்கும் ஐபேட் வாடிக்கையாளர்கள் தமது ஜெனரல் சாப்ட்வேர் அப்டேட்டுக்குள் சென்று இந்த புதிய அப்டேட்டை செய்யலாம்.





ஒளிர்வு-(17) சித்திரை த்திங்கள்-2012


Loading...
எம்மவர் இணையத்தளங்களுக்கும்,
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் எமது
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தளத்தில்:சிந்தனை ஒளி,கனடாவிலிருந்து....., , ,பிராத்தனையா?,அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு, ஒரு கடிதம் ஆராய்ச்சியாளரின் செய்திகள்,தொழில்நுட்பம்,உணவின்புதினம்கணிணிஉலகம்,பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வைசிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!சினிமா.
சிந்தனை ஒளி:
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
 ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
 துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
சிந்திக்காதவன் முட்டாள்.சிந்திக்கத் துணியாதவன் கோழை
 சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
 முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
என்றும் நினைவில் கொள்.
 மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

கனடாவில்........


ஈழத்தமிழ்த் திரைப்படத் துறையில் கனடியத் தமிழ்க் கலைஞர்களின் பங்களிப்பில்...

ஸ்ரார் 67
 Water sound picture இன் தயாரிப்பில்  30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று  கனடாவில் scarborough இல் உள்ள Cineplex தியேட்டரில் வெளியிடப்பட்டது ஸ்ரார் 67

     புலம்பெயர்ந்த எம்மவரிடையே பொதுவான பிரச்சனைகளில் ஒன்றே இலக்கமற்ற தொலைபேசி அழைப்புக்கள். இவ்விலக்கமற்ற தொலைபேசி அழைப்புககளினால் அல்லல்ப்படும் ஒரு குடும்பத்தின் கதையே ஸ்ரார் 67. முற்றுமுழுதாக கனடாவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் அனைத்துலகத் திற்கும் பொதுவான பிரச்சனையை ஆழஊடுருவி நிற்பது மெச்சத்தக்கது. இதன்மூலம் எங்கள் சமூகத்தின் சர்வதேசப் பிரச்சனையை கையிலேடுத்து தீர்வுகண்டிருக்கும் கதி.செல்வக்குமார் மற்றும் றைடன் பாலசிங்கத்தின் சமூகபொறுப்புணர்வும் சமூகத்தின்மேல் கவிந்திருக்கும் அவர்களின் பரிந்துணர்வும்  வெளிப்படும் திரைப்படமே ஸ்ரார் 67

     கனடாவில் ஏறக்குறைய நாற்பது திரைப்படங்கள் எம்மவர்களினால் தயாரிக்கப்பட்டிருந்த போதும் ஒரு முழுமையான திரைப்படத்திற்குரிய அம்சங்களை தாங்கிவந்தவை ஒருசிலவே. எனினும் அவைகளாலும் மக்களின் கவனத்தை கவரமுடியவில்லை. ஏனையவை குறுந் திரைப்படங்களாகவும் பரீட்சார்த்த முயற்ச்சிகளாகவுமே வெளி வந்திருந்தன. இந்நிலையில் ஒரு முழுமையான திரைப்படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் தாங்கி இன்றைய ஹொலிவூட்டின் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது ஸ்ரார் 67

    கனடாவில் எம்மவரின் திரைப்படவரலாறு குழந்தைப்பருவத்தைக் கடந்து டீன்ஏஜ் பருவத்தில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப இத்திரைப்படமும் இளமையின் கனவுகளுடனும் அதற்குரிய வேகத்துடனும் நகர்ந்து செல்கிறது. புலம்பெயர்ந்து புதியஇடத்தில் பதியம் வைக்கப்பட்ட எமது இளைஞர்கள் எப்படியாவது சாதித்து விடத்துடிப்பதை அப்பட்டமான கதைவசனங்களுடன் காட்சிப்படுத்தி இருக்கும் ஸ்ரார் 67 எம்மவர்  சிலரின் ஒருபக்க வாழ்க்கையை அப்படியே எங்களின் கண்முன்னே தருகின்றது.

இத்திரைப்படம் சமூகத்திற்கான படிப்பினையல்ல சமூகத்தின் மீதான ஒரு பார்வையே. தொடர்ந்தும் திரைப்படம் ஊடாக சாதிக்கத்துடிக்கும் கதி.செல்வக்குமாரின் தயாரிப்பில் வெளிவருகின்றது ஸ்ரார் 67

     கதி.செல்வக்குமார் இந்திய திரைப்படப்பாடலுக்கு அபிநயம் புரிந்த எம்மவரின் கனவுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியவர். 1997இல் வெளிவந்த இவருடையமனோரஞ்சிதம்எனும் பாடல்களின் ஒளித்தொகுப்பு முழுக்கமுழுக்க இவரின் சொல்லாட்சியில் உருவான பாடல்களுடன் வெளிவந்திருந்தது. முற்றுமுழுதாக இந்தியதிரைப்பட பாடல்களை பிரதி செய்வதை தவிர்த்து பாடல் நடிப்பு ஒப்பனை ஒளிப்பதிவு இயக்கம் என்பவற்றுடன் இந்திய இசையை மட்டுமே இணைத்து அவ்விசையை ஆழம் பார்த்த அளவுகோலாகவேமனோரஞ்சிதம்பாடல்தொகுப்பு அன்று வெளிவந்திருந்தது. இந்தியஇசையின் உயரத்தை அளந்துகொண்டமனேரஞ்சிதம்பாடல்தொகுப்பின் பின் அதற்கும் சற்றும் குறையாததரத்துடன் வெளிவந்தது இவருடைய இரண்டாவது பாடல் தொகுப்பானமுதல்நாள்பாடல்கள் வெளியீடாகும். பாடல்கள் நடிப்பு ஒப்பனை இயக்கம் இவைகளுடன் எம்மவர்களின் இசையினையும் இணைத்து முழுமையான ஒருதொகுப்பாக வெளிவந்திருந்ததுமுதல்நாள்

     கோடம்பாக்கத்தின் உயரத்தைத் தொட்ட இவ்விசைத் தொகுப்புகள் தந்த அனுபவத்துடன் இவரும் தனது அடுத்தபயணத்தினை ஆரம்பித்தார். குறுந்திரைப்படங்களில் காலடிவைத்த இவர் உபசாந்தி நிறங்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் என பதினாறு குறுந்திரைப் படங்களினை இவ்விடைக் காலத்தில் எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இவ்வாறு பதினாறும் பெற்று பெருமையுடன் வாழ்ந்த இவரின் நீண்டநாள் கனவின் வெளிப்பாடாக தயாராகி வெளிவருவதுதான் ஸ்ரார் 67.

    தொட்டுவிட்ட சிகரங்களை தூரத்தில் விட்டுவிட்டு புதியபுதிய சிகரங்களை தேடும் இவரின் திரைப்படகனவுகளிற்கு வானமும் எல்லையில்லை. அதற்கு அப்பாலும் பிரபஞ்சத்தை கடந்தும்......ஏதோ ஒன்று? இந்த நிலையிலேயே ஹொலிவூட் சினிமாவின் தொழில்நுட்பங்களுடன் இவரின் பரந்துவிரிந்த கனவினையும் எம்கண்களின் முன்னால் கொண்டுவருகின்றது ஸ்ரார்67.

    இத்திரைப்படத்தின் திரைக்கதை இயக்கம் என்பவற்றை கதி.செல்வக்குமாருடன் இணைந்து உருவாக்கியவர்றைடன்வி. பாலசிங்கம் ஆவார். இலங்கையில் MTV எனப்படும் மகாராஜா தொலைக்காட்சி மற்றும் NEWS1 என்பவற்றில் எடிட்டராக கடமையாற்றிய இவரே ஸ்ரார்67 திரைப்படத்தின் படத்தொகுப்பபு மற்றும் E.S.P எனும் சலனப்பொறியியலி னையும் முழுமையாக கையாண்டுள்ளார். இவரிடம் கைவரப்பெற்ற புதியபுதிய தொழில்நுட்பங்கள் இத்திரைப்படத்தினை முழுமையாக்குவதில் பெரும்பங்கை வகிக்கின்றன. கதி.செல்வக்குமாரும் இவரும் இணைந்தது புலம்பெயர் சினிமாக்களிற்கு மட்டுமன்றி தமிழகசினிமாக்களிற்கும் சவாலாகியுள்ளதை   உலகம் உணர்ந்துகொள்ள வெளிவரும் திரைப்படமே ஸ்ரார் 67.

      புதினெட்டு நடிகநடிகையர் குறிப்பாக இமான் கண்ணன் ஹமில்ட்டன்சத்தப்பணகாய்ரமேஸ், கணபதி, இரவீந்திரன், மலர்விழி, யசோதா என கனடாவின் புகழ்பெற்ற திரைமுகங்கள் போட்டிபோட்டு நடித்திருக்கும் அற்புதமான திரைப்படம் ஸ்ரார் 67.

     இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் பார்ப்பவரின் மனங்களில் பதியுமாறு ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளராக கடமையாற்றி உள்ள திரு.குகேந்திரன். கனடாவில் பாடகராக அறிமுகமாகி எல்லோரின் நெஞ்சங்களையும் தொட்டஉணர்ச்சிப்பாடகர்செந்தூரன் அழகையா இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கும் களமாக காட்சிதர வருகின்றது ஸ்ரார் 67.

    கதி.செல்வக்குமாரின் முந்தைய படைப்புக்கள் அனைத்தும்அன்னபூரணாஸ்தயாரிப்புகளாகவே வெளிவந்திருந்தன. எங்களின் பிறந்தகமானவல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் குளேஸ்ரெர் வரைவந்தஅன்னபூரணிஅம்மாள்என்ற பாய்க்கப்பலின் பெயரினைத்தழுவி உருவாக்கப்பட்டதுதான்அன்னபூரணாஸ்தயாரிப்பு நிறுவனம் ஆகும். காற்றின் உதவியுடன் கடல்நீரைக்கிழித்து அமெரிக்காவிற்குள் அன்று நுழைந்தது அன்னபூரணி. அன்று அன்னபூரணியுடன் இணைந்து வந்த தண்ணீர்ச்சத்தம் போல AnnaPuranas உடன் இணைந்து வருவதுதான் Water Sound Picture ஆகும். இதன் முதலாவதுவெளியீடே ஸ்ரார் 67.

ஆம் உங்களின் பார்வைக்கானது எங்களின் ஸ்ரார் 67
  தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்