ஒரு சுமை தாங்கி ஏன் இன்று.... [குட்டிக்கதை ஆக்கம் அகிலன் தமிழன் ]


கோடை காலம் . இரவுப்  பொழுதும் மெல்ல மெல்ல மறைந்து  கதிரவனும் உதயமாகிக் காட்சி கொடுத்துக் கொண்டு   இருக்கபோர்வைக்குள்    உறங்கிக்   கொண்டு இருந்த ரகுவும் 
 விழித்துக்  கொண்டான்.விழித்துக்  கொண்டாலும் அவன் மனம் சஞ்சலப்பட்டு மனம் கனக்க முணுமுணுத்தபடி,
 "அம்மா ஒரு முறை வந்துவிட்டு  போங்கோ"
பதில் எதுவும் வரதாதல்      பல முறை கூப்பிட்டான்சந்தேகம் அடைந்த 
ரகு தாய் தூங்கும்   அறையில் சென்று பார்த்தான். அங்கு யாரும்
இருக்கவில்லை.
  
அப்பொழுது அவனுடைய பிள்ளை
"என்ன அப்பா தேடிக் கொண்டு இருக்கிறீங்கள் , அப்பம்மா வேலைக்கு போய்விட்டா ..."
என்று கூற அதிர்ச்சி அடைந்த ரகு
 "ஒன்றும் இல்லை செல்லம் சும்மா தான்..."
என்று சமாளித்து கொண்டு தன் அறையை நோக்கி சென்றான். அங்கு சென்ற அவனுக்கு நேற்று நடந்து முடிந்த சம்பவங்கள் மீண்டும் ஞாபகத்திற்கு வர நிம்மதி தொலைந்து  அழுகையும் வரத் தொடங்க, மனதையும் சாந்தப்படுத்த முயன்றும் முடியாமல், நேற்று நடந்த சம்பவங்களை அசை போடத் தொடங்கினான்...
.........................................................................
‘’அம்மா எனக்கும் நேரம் இல்லை, வேலைக்கு போக வேணும் , மனைவியும் இன்றைக்கு பிந்தி தான் வருவாள் ,அதனாலை பின்னேரம் ஒருக்கா மகன் வகுப்பு முடிந்தவுடன் அவனை போய் கூட்டிக்கொண்டு வாங்கோ’’
என்று சொல்லவும் ,
அம்மாவோ,
‘’நான் இன்றைக்குகோயிலுக்குப் போக வேணும், என்னை கோயிலுக்குக் கொண்டு போய் விடு . நீ உன் மனைவிக்கு சொல்லி கூட்டி கொண்டு வரச் சொல்லு’’ என்று சொல்ல நானும் என்ர பங்குக்கு
‘’என்ன அம்மா நீங்கள் வர வர என் பிள்ளையையும் கவனிக்கிறது இல்லை, உங்களுக்கு மட்டும் நான் சேவை செய்து கொண்டு இருக்க வேணுமா ?’’என்று கேட்க
‘’என்னை நீ கதைக்கிறாய் ? மனைவி சொன்னவளோ இப்படி எல்லாம் கேள்..என்று ?
‘’ஏன் அம்மா அவளை இழுக்குறீங்கள் , ஊரில் இருக்கும் போது நீங்கள் என்ர பிள்ளையை விழுந்து விழுந்து கவனிச்சீங்கள், ஆனால் இப்ப கவனிக்கிறேல்லை , ... பிள்ளை பாடசாலைக்கு போயிட்டு வந்தால் எப்பவாவது சாப்பாடு கொடுத்து இருப்பியளா ? அல்லது அவனோடு அன்பாய் 2 வார்த்தை பேசியிருப்பியளா? எந்த நேரமும் டிவியும் நாடகமும் ....உனக்கு அலுப்பாக இருந்தால் கோயிலுக்குக் கொண்டு வந்து விட வேணும் .நான் என்ன மனிசனா ,மிருகமா ?என்ர வேலையைப் பார்த்து கொண்டு, உங்களுக்கும் சேவை செய்து கொண்டு இருக்க!எனக்கு துணையாக இருப்பீங்கள் என்று தான் இவ்வளவு கஸ்ரப்பட்டு ஸ்பொன்சர் செய்து உங்களை கூப்பிட்டேன் ...’’
 ‘’அப்ப உன்ர வீட்டு வேலையளையும் செ ய்து கொண்டு ,உன்ர பிள்ளைகளையும் பாராமரிக்கும் ஒரு வேலைக்காரி தேவை எண்டோ என்னை இஞ்சை இருக்க வா எண்டு கூப்பிட்டாய்’’
 ‘’இல்லை அம்மா நான் சும்மா ஒரு கதைக்கு சொன்னேன்.’’
  ‘’இல்லை யடா ,உன்ர மனதில் உந்த எண்ணம் தான் ஓடுது.’’
‘’அப்படி இல்லை அம்மா ,போன மாதம் தானே உங்களை பிரான்சுக்கு டிக்கெட் போட்டு அனுப்பிவிட்டனான் , மகளை பார்த்திட்டு வா என்று....’’

‘’என்னை நீ பெரிய உதவி செய்த விட்டாய்மற்றப் பிள்ளையள் தன் தாய் தந்தைக்கு உதவி செய்யிற அளவுக்கு நீ என்ன பெரிசா செய்து போட்டாய்?’’
 
அம்மா என்னைப் பார்த்து கேட்ட வார்த்தைகள் மனதுக்குள் ஒரு ஓரமாய் வலித்தன . இன்றைக்கு ஒரு முடிவு எடுக்க வேணும் என்று அம்மா  சொல்லிப்போட்டுப் போன  ஞாபகம்.

 வெளிநாட்டுக்கு போக விருப்பம் இன்றி இருந்த என்னை  யுத்தத்துக்குப்  பயந்து  வலுக்கட்டாயமாக  (வெளிநாடு )இங்கு  அனுப்பி    மொழி தெரியாத தேசத்தில் வந்து குளிருடன் போராடி மொழி கற்றுக்கொண்டு  நித்திரை கொள்ள நேரம் இன்றி ,உழைத்து சகோதரங்களுக்கு உதவி செய்து அவர்களை கரை சேர்த்து ,ஓடாய் தேய்ந்ததுக்கு   தண்டனையோ என்ற நினைவலைகளோடு வேலைக்கு    வெளியேறினேன் .
                                                                                                  

உண்மையில் யாரேனும் சபித்தால் அது பலிக்குமா?[சத்குரு]

           முன்காலத்தில் ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் கோபம் வந்தால் அவர்கள் சாபம் கொடுப்பதும், அது அப்படியே பலிப்பதும் நாம் கதைகளாக கேட்டு வளர்ந்திருக்கிறோம். இருந்தாலும், இந்த 21ம் நூற்றாண்டில், இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று தான் நமக்குத் தோன்றுகிறது. இது உண்மைதானா? உண்மையில் யாரேனும் சபித்தால் அது பலிக்குமா?


சத்குரு: சில நேரங்களில் ஆமாம் என்றே சொல்ல வேண்டும். பல நேரங்களில், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள், இல்லையா? எண்ணம் என்பது உங்கள் மூளையில் ஏற்படும் ஒரு வகையான சப்தம். ஆனால் அதற்கு நீங்கள் அர்த்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டால் வெவ்வேறு வகைகளில் அர்த்தங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். ஒரு எண்ணத்தை பலமாக உருவாக்கி அதற்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டே போகும்போது அந்த எண்ணம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. இதுபோன்று ஒரு சக்தியான எண்ணத்தை உருவாக்கி மற்றவர்களுக்கு பயன்களையும் விளைவிக்க முடியும், கேடுகளையும் உண்டாக்க முடியும். உண்மையிலேயே ஒருவர்மீது மிகவும் கோபமாக இருந்தால், உங்கள் முழு சக்தியும் ஒரு திசையில் இருக்கும். தீவிரமான ஆசை கொண்ட மனது எப்படி தீவிரத்துடன் செயல்பட முடியுமோ, தியானத்தன்மையில் உள்ளவர் ஒரே நோக்கத்துடன் எப்படி செயல்பட முடியுமோ, அதேபோல் வெறுப்பான மனமும் அதே தீவிரத்துடன் செயல்பட முடியும். அப்படி ஒரு எண்ணம், ஒரே முகமாக அதிதீவிரத்தில் செயல்படும்போது, பலிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பெண்னே உன் அன்பு இன்றி...[ஆக்கம் :அகிலன் தமிழன்]


பெண்னே உன் அன்பு  இன்றி
என் இளமை அழகு  பெறுமா?
கடல் அலையும் பொங்காவிடின்
கடலும் அழகு பெறுமா?

உன் அன்பினால் நானும்
உன் அன்பு  கடலில்  மூழ்கி
முத்தை எடுத்து கொள்ளலாம் என
உன்  நிஜத்தில் நானும்
என்னை மெய் மறக்கிறேன்

உன் ஓசை ஒலி கேட்கும்
ஓவ்வொரு நிமிடமும்
இதயத்திலும் சந்தோஷ
மலர் பூக்கிறது

இதனால் என் மனமும்
பூரிப்பு அடைந்து
உன் பற்றிய கனவு சுமந்து
உன் முகத்தை தேடி
வானத்தில் பறக்கிறேன்

அங்கே  நிலாவுடன்
உன்னை பற்றி
ஆயிரம்  கதை சொல்லி
என் உணர்வை பகிர்ந்து

மகிழ்வு கொள்கிறேன்.
                                           

எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் செங்கல்பட்டு போலாகுமா?

(ஆங்கிலம்:Chengalpattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்
செங்கழுநீர்ப் பூ
அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் செங்கல்பட்டு வட்டத்தின் தலைமையகமான ஒரு நகராட்சி ஆகும். செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். இது சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.

பெயர் மூலம்  
முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப்
பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே, செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று.

வரலாறு
விஜயநகரப் பேரரசு மன்னர்கள் அவர்களின் தலைநகராக செங்கல்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விஜயநகர மன்னர்கள் கட்டிய செங்கல்பட்டு கோட்டையும் செங்கல்பட்டில் இருக்கிறது. காலனி ஆட்சிகால வரலாற்றை இது பொக்கிஷமாக வைத்து இருக்கிறது.

புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.7°N 79.98°E ஆகும்கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்இவர்களில் 30,982 ஆண்கள், 31,597 பெண்கள். செங்கல்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். செங்கல்பட்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி
இந்நகரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்கள் உள்ளன.

போக்குவரத்து
தமிழ்நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் செங்கல்பட்டின் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு ஒரு தொடருந்து சந்திப்பாகும். முக்கிய அகலப் பாதையைக் கொண்டுள்ள இவ்வூரில் தமிழ்நாட்டின் தெற்கு நோக்கிச் செல்லும் தொடருந்துகள் நின்றுசெல்லும்.
                                                       

பொறாமையே ............! [ஆக்கம்:அகிலன் தமிழன் ]


ஆக்கம்:அகிலன் தமிழன் 

கலியுகத்தில் மாந்தர்கள்  தீ ப்பொறி போல அலை பாய்ந்து கொண்டு இருக்கும்  பொறமையே நீ 
மனிதனின் இறப்புக்கு காரணம்மாக வருவது  ஏன்?காற்று கொள்ள துணையாக இருக்க வேண்டிய நீயே 
மனிதனை விழுங்க துணை புரிவது   நியாயமா...?மனங்களில்  பாவ செயல்களை தூண்ட வைக்கும்உன் தீ  காயத்தால்த்தனை மாந்தர்கள வாழ்வு  இருளில் முழ்கி  போய் இருக்கிறது உனக்கு புரியுமா ?காரணம் இன்றி வரும்  தீங்கு செய்யாது ஒதுங்கி கொள்.நீ குறுக்க வருவதால் உடைவது மனமே பொறமை சிந்தனை கொள்ளாதுதெளிவான சிந்தனை கொண்டால் வளமான வாழ்வு வாழலாம்.