‘’இன்னா நாற்பது’’ -/04/-உலகத்தில் கூடாதவை என்னென்ன...


‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல் ‘கபிலர்’ என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.

‘’இன்னா நாற்பது’’தொடர்கிறது...


வெண்பா:16

உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;

நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;

கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,

எண் இலான் செய்யும் கணக்கு.        

விளக்கம்: உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். உளம் பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன் இயற்றும் கணக்கு துன்பமாம்.

 

வெண்பா:17

ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;

மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;

நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,

ஈன்றாளை ஓம்பா விடல்.        

விளக்கம்: கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.

 

வெண்பா:18

உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;

மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;

சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,

மன வறியாளர் தொடர்பு.       

விளக்கம்: நல்ல அறிவுடையவர்கள் மனம் ஒடிந்து இருத்தல் துன்பமாம். வீரமுள்ள ஆட்களை உடையவன் முன்பு மார்பு தட்டுதல் (வீரம் பேசுதல்) துன்பமாம். அடர்ந்த காட்டில் செல்லுதல் துன்பமாகும். மன வறுமையுடையாரது சேர்க்கை துன்பமாகும்.

 

வெண்பா:19

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;

நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;

நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,

கலத்தல் குலம் இல் வழி.         

விளக்கம்: நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும். பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும். அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.

 

வெண்பா:20

மாரி நாள் கூவும் குயலின் குரல் இன்னா;

வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;

மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னா

மூரி எருத்தால் உழவு.    

விளக்கம்: மழைக்காலத்தில் குயிலினது குரலோசை துன்பமாகும். அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாகும். மழை பெய்யவில்லை என்றால் ஊருக்கும் துன்பம். அவ்வாறே எருமையால் உழவுத் தொழில் செய்தால் துன்பமாகும்.

 

‘’இன்னா நாற்பது’’ தொடரும்.... ››››››

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாகும், துன்பமாம், அவ்வாறே, ஆங்கு, இலக்கியங்கள், பதினெண், செல்லுதல், கீழ்க்கணக்கு, நாற்பது, உடையான், இருத்தல், இட்ட, மாரி, வீரம், மனம், நல்ல, மார்பு, கணக்கு, கல்வி, சங்க, உண்ணாது, வைக்கும், பொருள், பெரும், சேர்க்கை

"குமிழி"-(கவிதை)

 "குமிழி"

 


"குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து

கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு

குடை பிடித்து பதவி உயர்ந்து

குபேரன் வாழ்வை கனவு கண்டான்!"

 

"நீர்க்கோல வாழ்வை நச்சி அவன்

நீதியற்ற வழியில் நித்தம் சென்று

நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து

நீங்காத வாழ்வென பொய் சொன்னான்!"

 

"பிறந்தவர் சாதல் நிச்சயம் என்றாலும்

பிணம் என்றே இறுதியில் அழைத்தாலும்

பித்தனாக உலக நீதிகளை மதிக்காமல்

பிதற்றி திரிகிறான் அதட்டி வாழ்கிறான்!"

 

"கருப்பையில் பிறந்து மண்ணோடு சேர்பவன்

கடுகு அளவும் இரக்கம் இன்றி

கண்ணியமான வாழ்வு வாழ மறுத்து

கற்ற கல்வியை வியாபாரம் செய்கிறான்!"

 

"நுட்பம் பல நிறைந்த மனிதன்

நுணுக்கம் ஆக வாழ்வை அலசாமல்

நுரைகள் பொங்கி வெடிக்கும் வரை

நுகர்ந்து அறியாமல், துள்ளி குதிக்கிறான்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

கடைசியாக வந்த திரைப்படங்கள் எப்படி?

ஒரு சுருக்கமான பார்வை

''சினம்'' விமர்சனம்  (Cinema Tamil Movie 'Sinam' Review)

 ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க, ஆர் விஜய்குமார் தயாரிக்கஷபீர் இசையமைத்துள்ளார். அதிரடி & திரில்லர் கதையில் இப்படத்திற்கு எஸ் கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய,ராஜா முகமத் எடிட்டிங் செய்துள்ளார்.

 

இவருடைய மனைவியாக வரும் பாலக் லால்வானிக்கு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தை அருண் விஜய் மீது இருக்கும் வெறுப்பால் மிகக் கொடூரமாக கேவலமாக சித்தரிக்கிறார் காவல் ஆய்வாளர். அருண் விஜயின் மனைவிக்கு என்ன நடந்தது? காவல் ஆய்வாளர் சொன்ன சித்தரிப்பை அருண் விஜய் பொய்யாக்கினாரா? குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா?அருண் விஜயின் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை.

 

மொத்தத்தில் சினம் – சீறிப் பாயவில்லை.[2.5/5]

 😌😌😌

வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்)விமர்சனம்  (Cinema Tamil Movie 'Vendhu Thanindhathu Kaadu' Review)

 

 இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

  சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் என பலர் நடித்துள்ளனர்.

 

கிராமத்து இளைஞனாக சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்கிறார். அவருக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை.

 

அதனால் தனது அம்மா மற்றும் தங்கையை காப்பாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதற்காக மும்பைக்கு வேலை செய்கிறார். அப்போது அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகிறது. அதனை எப்படி சமாளித்து தன்னை ஒரு ஹீரோவாக காட்டுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை

 

 வெந்து தணிந்தது காடு - பற்ற வைத்த நெருப்பொன்று…3/5]

👍👍👍

-தொகுப்பு:செ.மனுவேந்தன்

 

விரைவில் சுத்தமாகும் வாயு மண்டலம்!

 அறிவியல் 


19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தொழிற்புரட்சி  காரணமாக பெரும், பெரும் தொழிற்சாலைகள் உலகெங்கும் தோன்றியதால் அளவுக்கு அதிகமான கரிவாயுப் புகைகளை காற்றுமண்டலத்தினுள் தொடர்ந்து தள்ளிக்கொண்டே வருகின்றோம். இந்த வேகத்தில் தொடர்ந்து செய்வோமேயானால் இன்னும் 50 வருடங்களுக்குள் சுவாசிக்கும் காற்றில் உள்ள நச்சுவாயுக்கள் காரணமாக மனித இனம் படிப்படியாக அழிந்து போகும் என்ற பயம் எல்லோருக்கும் உண்டு.

 

இந்த அச்சத்தினால், சக்தி உருவாக்கத்திற்காக கொடிய நச்சுப் புகை கக்கும் எண்ணெய், நிலக்கரி முதலிய பாரம்பரிய மூலப்பொருட்களை ஒதுக்கிவிட்டு, புகை அற்ற மாற்று வழி சக்தி உருவாக்கும் வழிமுறைகள் பலவும் பயன்பாட்டுக்கு வந்துகொண்டு இருக்கின்றன.

 

ஆனால், ஏற்கனவே மாசுபட்ட, மாசு பட்டுக் கொண்டிருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் நச்சுக் கரி வாயுக்களை என்ன செய்வது?

 

கவலையே வேண்டாம்! உலகெங்கிலும் பல நாடுகள் கார்பன் பிடிப்பு பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS - Carbon Capture, Utilisation and Storage) என்னும் தொழில்நுட்பம் மூலம் எரிசக்தி துறையில் இருந்து நச்சு வாயு வெளியேற்றத்தை குறைக்க முயற்சிக்கின்றன.

 

இதன் மூலம் ஆலைகளில் இருந்து வெளிவரும் கரி வாயுவைப் பிரித்து எடுத்து சேமிக்கலாம். அத்தோடு வளி மண்டலத்திலிருந்தும்  நேரடியாகப் பிடித்து எடுத்தும் சேமிக்கலாம்.

 

சேமிக்கப்பட்டவைகளை,  குழாய்கள், வண்டிகள் மூலமாக ஒரு சேமிப்பு மையத்துக்கு அனுப்பப்படுகின்றன. இங்கு, இது மீண்டும் தரையில் செலுத்தப்பட்டு நுண்ணிய பாறை வடிவங்களாக மாற்றப்படுகின்றது.

 

இந்தக் கரிப் பாறைகள் எங்கே கழித்து சேமிக்கப்படுகின்றது தெரியுமா? எங்கு இருந்து வந்தார்களோ அங்குதான்! எண்ணெய் எடுக்கப்பட்டு வெறுமனே இருக்கும் நிலத்தடிக் குழிகள், நிலக்கரி எடுக்கப்பட்டு இருக்கும் சுரங்க வெற்றிடங்கள் முதலிய ஆழ் பூமியில் புதைத்து விடுகிறார்கள். கோடிக்கணக்கான வருடங்களின் பின் இவைகள் எண்ணெய்யாகவும், நிலக்கரியாகவும் மாறும்.

 

கரி வாயுவில் உள்ள கார்பன, ஐதரசன் வாயுவை ஒரு செயற்கை ஹைட்ரோகார்பன் எரிபொருளாக மாற்றவும் அல்லது பாலிமர்களாக மாற்றவும் பயன்படுகிறது. இது பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கும் பசைகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை உருவாக்க பயன்படுத்தலாம்.

 

இந்தத் தொழில் நுட்பமானது ஏற்கனவே அமெரிக்கா , ஐரோப்பா, சீனா முதலி இடங்களில் அரச இணைவுடன் பல தொழில் துறைகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது.

 

வெகு விரைவில் நாம் மாசற்ற காற்றினை சுவாசிப்போம் என்பதில் ஐயமே இல்லை எனலாம்.

- செ.சந்திரகாசன்


நம்மை நோக்கி வரும் புதுமைகள்

அறிவியல் 

 நிலாவில் அணு மின்சாரம்?


அமெரிக்கா மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகிறது. அதுமட்டுமல்ல, சந்திரனில் ஆய்வு மையங்களை கட்டவும் திட்டமிட்டுள்ளது. அதற்கு சூரிய மின்சாரம் மட்டும் போதாது. எனவே, நிலாவில் அணு மின் நிலையத்தை அமைக்கஉள்ளது.

அண்மையில் அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' மூன்று அணு உலை மாதிரிகளைத் தயாரிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. வரும் 2030ல் இந்த அணு உலை மாதிரிகளில் ஒன்றை, நிலாவில் நிறுவி நாசா சோதிக்கும்.நிலாவில் நிரந்தர மனித முகாம்களை அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும் நிறைய மின்சாரம் தேவை. அதற்கு, குறைந்த எரிபொருளில், அதிக அளவு மின்சாரத்தை தயாரிக்க அணு உலை மட்டுமே தோதாக இருக்கும் என நாசா கருதுகிறது. மேலும், 40 கி.வா., மின்சாரம் தயாரிக்கும் ஒரு அணு உலை, சிறியதாகவும், எடை கம்மியாகவும் இருக்கும். இதனால், பூமியிலிருந்து நிலாவுக்கு எளிதாக அனுப்பலாம். தவிர, அணு உலைகள் 10 ஆண்டுகள் வரை இயங்கும்.எனவே தான், நிலாவுக்கும், செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்ப அணு மின்சாரத்தை நாடுகிறது நாசா.

↭↭↭

சூரியக் கதிரைக் கவரும் 'லென்ஸ்'


சூரியக் கதிர்கள் எந்தக் கோணத்திலிருந்து வந்தாலும் அவற்றை, சூரிய ஒளி செல்கள் மீது குவிக்கும் லென்சை, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதனால், சூரியன் உதித்தது முதல் மறையும் வரை இத்தகைய லென்ஸ் உள்ள பலகைகளால் மின்சாரத்தை அதிகமாக தயாரிக்க முடியும். கவிழ்த்தப்பட்ட பிரமிடு வடிவில் உள்ள இந்த லென்சிற்கு, 'அஜைல்' லென்ஸ் என்று பெயர். இதில் பல அடுக்கு கண்ணாடிகள் உள்ளன. மேல் அடுக்கு கண்ணாடி, சிதறலான, மங்கலான ஒளியை கீழ் அடுக்கை நோக்கி அனுப்புகிறது.அடுத்தடுத்துள்ள அடுக்குகள், உள் வரும் ஒளிக் கதிரை சிறிது சிறிதாக 'வளைத்து' கடைசியில், அக்கதிரை சக்திவாய்ந்ததாக மாற்றி குவியப்படுத்துகிறது.அப்படி குவிந்த ஒளி, மின்சாரம் தயாரிக்கும் சூரிய செல்கள் மீது படுகிறது. இதனால், அதிக மின்சாரத்தை செல்களால் உற்பத்தி செய்ய முடியும்.

                                                              ↭↭↭

கறாரான களைக் கொல்லிகள்!


அறிவியல், விவசாயிகளுக்கு அளித்த பரிசு களைக்கொல்லிகள். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக புதிய களைக்கொல்லிகள் வரவே இல்லை. இதனால், களைகள், களைக்கொல்லி மருந்துகளை எதிர்த்து வளரும் தன்மையைப் பெற்றுள்ளன. கடந்த 1980களில் 38 களைகளே விவசாயிகளின் எதிரிகளாக இருந்தன. ஆனால், 2022ல், அழிக்க முடியாத களைகளின் எண்ணிக்கை 513 ஆகியுள்ளது.

இந்நிலையில், புதிய களைக்கொல்லிகளை விரைவில் உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, பிரிட்டனிலுள்ள எம்.ஓ.ஏ., நிறுவனம். ஒரு களைக்கொல்லி எப்படி களையின் செல்களை பாதித்து, அதன் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதை, எம்.ஓ.ஏ.,வின் விஞ்ஞானிகள் கண்டறிகின்றனர். ஒரு வேதிப்பொருளுக்கு களைகளைக் கொல்லுமா என்பதை, களைகளின் செல்கள் வரை ஆராய்ந்து கண்டறிகிறது எம்.ஓ.ஏ.,வின் குழு. இதன் மூலம் புதிய களைக்கொல்லிகளை வேகமாக உருவாக்க முடியும். களைகளுக்கு முடிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது.

                                                              ↭↭↭

கட்டடம் கட்ட காயும், கனியும்!


வீணாகும் பழங்கள், காய்கறிகளை வைத்து, சிமென்ட் தயாரிப்பதில் ஜப்பானிய விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதற்கு, மரத்துாளை வெப்ப அழுத்தத்தின் மூலம் கட்டுமானப் பொருட்களாக ஆக்கும் அதே தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூசணித் தோல், ஆரஞ்சுத் தோல், வாழைப் பழத் தோல், வெங்காயச் சருகு, கடற் பாசி என்று வீணாகும் உணவுப் பொருட்களை உலர்த்தி, பொடியாக்கினர்.ஒட்டும் தன்மைக்காக, வீணாகும் உணவுப் பொருட்களை சேர்த்தனர். இந்தப் கலவைக்கு, வெப்ப அழுத்தம் கொடுத்தபோது, 'சிமென்ட்' போன்ற பொருள் கிடைத்தது. இந்த இயற்கை சிமென்ட் சந்தைக்கு வந்தால், சுற்றுச்சூழலுக்கு நல்லது.
                                                             ↭↭↭
தொகுப்பு:மனுவேந்தன்