எந்த ஊர் போனாலும் தமிழர் ஊர் [திருவள்ளூர் ]போலாகுமா?.

திருவள்ளூர் (Thiruvallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இவ்வூரின் சிறப்பு  
இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.
விஷ்ணு கோவிலில் பாம்பில் தூங்கும் நாராயணன் 

உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் எனச் சிதைந்து வழங்குகின்றது.
மக்கள் வகைப்பாடு
மாசி மாத தெப்ப திருவிழா 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,517 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவள்ளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவள்ளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

0 comments:

Post a Comment