இந்தியா செய்திகள் 📺 19,june,2019

India news

கள்ளக்காதல்- மகனை தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய்
வேலூர் மாவட்டம், வாலாஜா பாக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் காவியா (வயது 32) திருமணமாகி 5 வருடத்தில் கணவனுடன் வாழமுடியாமையினால் 4வயது மகனுடன் தாய் வீட்டில் வந்து வாழ்ந்து வரும் காலத்தில் ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரைசேர்ந்த தியாகராஜன் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை அறிந்த தியாகராஜனின் தாயார், இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் வாலாஜாவில் உள்ள பெல்லியப்பா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். மகன் தருணையும் கள்ளக்காதலன் வீட்டில் வைத்து காவியா வளர்த்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் தருணை பிடிக்காமல் அவனை தியாகராஜன் கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி மகன் என்றும் பாராமல் தருணை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து காவியா முடிவு செய்தார். அதன்படி சிறுவன் தருணை கடந்த 13-ந் தேதி காவியாவும், தியாகராஜனும் சேர்ந்து தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் அமுக்கி கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஆற்காடு அருகே பாலாற்றில் உள்ள டெல்லி கேட் பகுதியில் யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை புதைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக காவியாவிடம் வாலாஜா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.தலைமறைவான தியாகராஜனை போலீசார் தேடிவருகிறார்கள்.

பெண் கழுத்தை அறுத்துக்கொலை; கணவர் தற்கொலை முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் மருதையா மகன் மாரியப்பன் (வயது 28), கூலி தொழிலாளி. இவருக்கும், கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் மகள் சண்முகபிரியாவுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்வதில்லை. மேலும் அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய அக்காள் காளியம்மாள் வீட்டுக்கு சென்று பகல் வேளைகளில் சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் மட்டும் வீட்டுக்கு வருவார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவிலும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சண்முகபிரியாவின் கழுத்தை அறுத்ததுடன் கைகளில் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.
உடனே போலீசார் தன்னை பிடித்து விடுவார்களோ என பயந்து போன மாரியப்பன் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சண்முகபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சத்தால் ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல்
சென்னையின் பிரதான ஆஸ்பத்திரியாக ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு பெற்ற ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் தற்போதைய தண்ணீர் பஞ்சத்தால், ஏராளமான கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதை பார்க்க முடிந்தது. இந்த ஆஸ்பத்திரிக்கு சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டபோதிலும், ஆஸ்பத்திரியின் தண்ணீர் தேவையை முழுமையாக நிறைவேற்றியதாக தெரியவில்லை.
இந்த 2 அடுக்குமாடி கட்டிடங்களின் தரைத்தளத்தில் உள்ள கழிப்பறைகளில் பல கழிப்பறைகள் நேற்று மூடப்பட்டு கிடந்தன. இவ்வாறு தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்று கூறினால் அது மிகையல்ல.

விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர்அமைச்சர் நேரில் ஆய்வு
சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரைப்பாக்கம், மாகரல், கீழானூர் உள்பட சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதாவது தினம்தோறும் விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீரை தவிர்த்து மீதமுள்ள தண்ணீரை சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.
இதற்காக விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்கி வருகிறது. இதுபோன்று தினமும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு அருகில் உள்ள மாகரல் நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

வழமையாக  அழுகிய முட்டை வழங்கும் சத்துணவு சட்டம்
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே திருத்துறையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1,150 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இதில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கலந்துகொண்டு உணவில் கலப்படம் கண்டறிதல், கலப்படத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
முகாம் முடிந்ததும் பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு சமையலறைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு சமைத்து வைத்திருந்த உணவுகளை ருசித்து பார்த்தார். 10-ம் வகுப்பு வரை பயிலும் 850 மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக ஒரு பாத்திரத்தில் முட்டைகள் வேக வைத்து வைக்கப்பட்டிருந்தன.
அதில் பெரும்பாலான முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன. அனைத்து முட்டைகளும் நிறம் மாறி இருந்தன. துர்நாற்றமும் வீசியது. இதை கண்டு உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்று கூறினார். இதேபோல் அங்கு மற்ற நாட்களில் வழங்குவதற்காக முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதை பார்த்த உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், இதனை தண்ணீரில் போட்டு ஆய்வு செய்து தரமான முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதையடுத்து 850 முட்டைகளில் 150 முட்டைகள் மட்டுமே தரமான முட்டைகள் என்று கண்டறியப்பட்டன. அந்த முட்டைகள் மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியை போன்று ஒறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பலாப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மனம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சத்துணவில் வழங்குவதற்காக அழுகிய முட்டைகள் வந்துள்ளன. பலாப்பட்டிற்கு முதல் நாள் வந்த முட்டைகளில் பெரும்பாலானவை அழுகிப்போய் இருந்தன. இதனால் அந்த முட்டைகள் அனைத்தும் அங்குள்ள ஏரியில் கொட்டப்பட்டன.
சத்துணவில் கெட்டு போன முட்டைகளை வழங்க யார் காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரி ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 - மக்கள் வேதனை
சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகங்களின் சார்பாக ஒருசில இடங்களில் மட்டும் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தனியார் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீர் ஒரு குடம் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் லாரிகளில் வரும் தண்ணீரை பிடிக்க வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாலும் சிரமமடைகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை போக்கி முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள்
சிப்பிப்பாறையை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஏழாயிரம்பண்ணையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் மதுபோதையில் குட்கா கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெட்டிக்கடைக்காரரின் புகாரையடுத்து ராணுவ வீரர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர்.

வாகனம் மோதி குரங்கு பலி
ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை
உதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலி வியூ பகுதியில் உலா வரும் சிறுத்தை ஆடு, உள்ளிட்வைகளை வேட்டையாடி வருகிறது. மேலும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்துள்ளது. எனவே சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 📺🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽.18,june,2019
குடிநீருக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி பலி
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் ஊராட்சியில்பொதுமக்கள் குடிநீர் குழாய் அருகே பெரிய குழியை தோண்டி அதில் கிடைக்கும் சிறிதளவு தண்ணீரை பிடித்து வடிகட்டி பயன்படுத்தி வந்தனர்.
 பாட்டிவீடு சென்ற அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரின் மகள் பவதாரணி (வயது 3)  மீண்டும் வீடு திரும்பநிலையில் பவதாரணியின் உறவினர்கள், அவளை பல இடங்களில் தேடியவேளை சந்திரசேகரின் வீட்டின் அருகே குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி பார்த்தபோது, பவதாரணி குழிக்குள் மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனே, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு பவதாரணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குடிநீருக்காக தோண்டிய குழியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி மோதல்:பெட்ரோல்குண்டுகள் வீச்சு; 4 போலீசார் காயம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் ஒரு தரப்பினர் மயானத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக அந்த பகுதியை சுத்தப்படுத்தி முள்வேலி அமைத்திருந்தனர். இந்தநிலையில் மர்மநபர்கள் முள்வேலியை அகற்றி, அங்கிருந்த ஒரு கல்லறையை சேதப்படுத்தி உள்ளனர்.
இதையொட்டி இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. ஒருவரையொருவர் உருட்டுக்கட்டை, கல், பாட்டில் போன்றவற்றால் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.. சுந்தரத்தின் தம்பி சுப்பையா, அவரது மகன் ஹரி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. சுப்பையா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து இருதரப்பை சேர்ந்தவர்களும் மறுபடியும் நேற்று முன்தினம் இரவில் பயங்கரமான ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையொட்டி கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் வீடுகளுக்குள் இருந்து போலீசார் மீது கற்களை வீசப்பட்டன.. மேலும் 2 பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இந்த சம்பவத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் உள்பட 4 போலீசாரும் காயம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையாக தடியடி நடத்தி அனனவரையும் கலைத்தனர். மேலும் வீடுகளில் மறைந்திருந்து கற்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதில் ஒரு தரப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவர் உள்பட 30 பேரையும், மற்றொரு தரப்பில் சீனி என்பவர் உள்பட 28 பேரையும் கைது செய்தனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேம்பாலத்தில் தூக்குப்போட்டு சினிமா கலைஞர் தற்கொலை
தேனி மாவட்டம் போடி ரெங்கநாதபுரம் அம்பேத்கர்தெருவை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவர், சென்னையில் சினிமா நடிகர்களுக்கு ஒப்பனை செய்யும் கலைஞராக பணியாற்றியவராவார்.
விசாரணையில், கணேசனின் மகன் விஜய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெதிலிருந்து அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு போடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். மனஉளைச்சலில் இருந்த அவர், தனது சட்டையை கழற்றி மேம்பால கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தேசத்துரோக வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு வைகோ பதில்
சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு வைகோ-‘’ நான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினேன்.
இலங்கையில் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இலங்கை அரசு தான் பொறுப்பாளி. ராஜபக்சே சர்வதேச குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்.
நான், இந்திய அரசு மீது வெறுப்புணர்வையோ, காழ்ப்புணர்வையோ, பகை உணர்வையோ ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசவில்லை. இந்திய அரசு தனது கொள்கையை, அணுகுமுறையை முற்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தான் பேசினேன்.
2002-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதை சுட்டிக்காட்டி பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றம் ஆகாது என்று தீர்ப்பு அளித்தனர்.

எம்.பி. உடலில் வைத்த டெஸ்டரில் விளக்கு எரிந்ததால் பரபரப்பு
ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உயர்மின் கோபுரங்கள் அருகே சென்றாலோ, அதன்கீழ் விவசாய பணிகளில் ஈடுபட்டாலோ மின்காந்த புலன் பாய்ந்து பாதிப்புகள் ஏற்படும் என்றும் மின்கசிவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறி வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி நேற்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று ஆய்வு செய்தார். தன்னுடைய உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தார். உடனே டெஸ்டரில் இருந்த விளக்கு ஒளிர்ந்து மின்சாரம் பாய்கிறது என்பதை காட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உயர்கோபுரம் அருகே சென்றாலே உடலில் மின்சாரம் பாய்ந்து டெஸ்டர் விளக்கு எரிந்ததை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, இதை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை நாடாளுமன்றத்தில் காட்டி பேசுவேன். மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி, மின்சாரத்துறை மந்திரியிடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன்என்றார்.
 📺⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸⇸ 17,june,2019
📞பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில், பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன் படுத்தினால் இன்று முதல் அபராதம் விதிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்தது ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

📞வீட்டில் ரூ.1 கோடி கஞ்சா -3 பேருக்கு வலைவீச்சு
போலீசார் நடத்திய விசாரணையில் நாகை வெளிப்பாளையம் தர்ம கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மூக்கையா மனைவி ராணி, அவருடைய மகன் ஆனந்த், ஆனந்த் மனைவி மீனாட்சி ஆகிய 3 பேரும் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.
தலைமறைவாக உள்ள அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை சவுக்கு பிளாட் பகுதியில் 150 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை பதுக்கி வைத்தவர்கள் யார்? இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📞60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாசாரம் 1 ஆசிரியர் 60 மாணவர்கள் என 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு அறிவித்திருப்பது மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும். தற்போது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை மாணவர்களுக்கு எடுத்து செல்வதில் ஆசிரியர்களுக்கு மிகுந்த சிரமம் ஒருபுறம் இருந்தாலும் கற்கும் மாணவர்களுக்கு வகுப்பறைச்சூழல் கூட்டத்தில் பங்கேற்பது போன்று தோன்றும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

📞ரெயில்வே- போலி கணக்கு தொடங்கி டிக்கெட் முறைகேடு
ரெயில்வே இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி தஞ்சையில் ரெயில்வே முன்பதிவு டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட தஞ்சையில் பிரவுசிங் சென்டர் நடத்தி வரும் காத்திக்குமார் (வயது 27) மற்றும் திருவையாறை சேர்ந்த லாரன்ஸ் (36) ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

📞கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்
வலசைப்பட்டிகிராமத்தில்  அண்ணி[மணிமேகலை]யுடன் ஏற்படட கள்ளக் காதலுக்காக   முருகையா என அழைக்கப்படும் அண்ணனையே தம்பியார் பிச்சைமணி    தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த அண்ணனின் கழுத்தை நெரித்து பிச்சுமணி கொன்று , பின்னர் அவரது உடலை 2 பேரும் சேர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிவந்து, ரோட்டோரம் உள்ள ஒரு பாலத்திற்கு அடியில் போட்டுச் சென்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அவரையும், அவருடைய அண்ணியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📞பரமக்குடியில் பரபரப்பு:ராமேசுவரம் ரெயிலில் திடீர் புகை
ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவரத்துக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பரமக்குடி ரெயில் நிலையத்தை மதியம் 12.50 மணி அளவில் வந்தடைந்தபோது பெட்டியின் கீழ் பகுதியில்  கரும்புகை வந்தது அவதானிக்கப்பட்டு  ரெயில் நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று ரெயிலில் இருந்து வந்த கரும்புகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு  அந்த கோளாறு சரி செய்யப்பட்டது.

📞ராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலி; 2 பேர் மாயம்
மண்டைக்காடு அருகே கடலில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற சச்சின் எனப்படும் சிறுவன் ராட்சத அலையில் சிக்கி பலியானான். சகாய ரெஜினை, ரகீத் என்ற இரு சிறுவர்கள்  அலையில் மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

📞சென்னையில் நாளை மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர். 
இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நாளை உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

  📺 16,june,2019
சேத்துப்பட்டு சம்பவம்; தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்
எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் தேன்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது,
``நான் கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போதுதான் சுரேந்தரைச் சந்தித்தேன். அவர் வேறு ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். பஸ்சில் எனக்கு அறிமுகமான சுரேந்தர் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நானும் அவரைக் காதலித்தேன்.
கல்லூரி படிப்பு முடிந்ததும் அரசு தேர்வு எழுதினேன். அவர், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு வேலை கிடைத்தது. இதனால் ஈரோட்டிலிருந்து சென்னை வந்தேன். இந்த சமயத்தில் என்னை திருமணம் செய்வதற்காக பெண் கேட்டு என் வீட்டுக்கு சுரேந்தர் வந்தார். என்னுடைய பெற்றோரிடம் அவர் பேசினார்.
பெற்றோர் சத்தியம் வாங்கினர்
அப்போது என் பெற்றோர் சில காரணங்களுக்காக என்னை சுரேந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க முன் வரவில்லை.  இந்தச் சம்பவத்துக்குப் பிறகு என்னை சுரேந்தருடன் பேசக் கூடாது எனப் பெற்றோர் சத்தியம் வாங்கிக் கொண்டனர். இதனால் சுரேந்தருடன் பேசுவதை தவிர்த்து வந்தேன். இருப்பினும் சுரேந்தர் என்னுடன் பேச பலதடவை முயற்சி செய்தார்.
இந்தச் சமயத்தில்தான் கடந்த 13-ம் தேதி ஈரோட்டிலிருந்து சுரேந்தர் போன் செய்தார். அப்போது அவர், உன்னை நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நான், வேண்டாம் என்று கூறினேன். இருப்பினும் 14-ம் தேதி சென்னையில் இருப்பேன் என்று சுரேந்தர் கூறிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். வழக்கம் போல வேலை முடிந்து நான் விடுதிக்குச் செல்ல சேத்துப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தேன். என்னைப்பின்தொடர்ந்து சுரேந்தர் அங்கு வந்தார். ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது என் நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறினேன். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் எனச் சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது நான், என் பெற்றோரின் எதிர்ப்பை மீறி என்னால் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன்.
இந்தச்சமயத்தில்தான் அரிவாளை திடீரென எடுத்த சுரேந்தர், எனக்கு கிடைக்காத நீ, உயிரோடு இருக்கக் கூடாது என்று ஆவேசமாகக் கூறியபடி என்னை வெட்டினார். நான் சுதாரிப்பதற்குள் அரிவாள் வெட்டு விழுந்தது. என்னுடைய இடது புற தாடையில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது.  அடுத்து அவர், அரிவாளால் வெட்டியபோது அதைக் கையால் தடுத்தேன். இதனால் கையிலும் வெட்டு விழுந்தது. சுரேந்தர் இப்படி செய்வாருன்னு என் கனவில்கூட நினைக்கவில்லை. என் சத்தம் கேட்டு சிலர் அங்கு ஓடிவந்தனர்.  அதற்குள் நான் கீழே சரிந்தேன்.  அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியாது"
இவ்வாறு தேன்மொழி  கூறியுள்ளார்.

சென்னையில் குடிநீர் விநியோகம்
சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.

நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நீட் தேர்வில் தோல்வியடைந்து, மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் விரக்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  போலீசில் புகார் அளிக்காமல், உடலை அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடன்குடி அருகே பெண் கொலை: போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் ஜோதிநகர் அமைந்துள்ளது. அந்த ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் மர்மநபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கொலை செய்யப்பட்ட பெண் உடன்குடி பகுதியை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் உடல் கிடந்த இடம் அருகே கார் வந்து சென்றதற்கான டயர்களின் தடமும் பதிவாகி இருந்தது.
எனவே மர்மநபர்கள் யாரேனும் அந்த பெண்ணை காரில் உல்லாசத்துக்கு அழைத்து வந்தனரா? அல்லது காரில் கடத்தி வந்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோதாவரி - காவிரி இணைப்பு - முதலமைச்சர் பழனிசாமி
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

ஐ.எஸ்:2 நாட்கள் விசாரணைக்கு பிறகு போலீசார் நடவடிக்கை
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்...) கடந்த 12-ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 2 பேரை அவர்கள் கைது செய்தனர். 3 பேருக்கு சம்மன் அனுப்பி கொச்சிக்கு வரவழைத்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத .எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்..சி.) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
அதன்பேரில் கடந்த 13-ந் தேதி கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான்(வயது 25), கோவை வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன்(25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வருவது தெரிய வந்தது. போலீசாரின் சோதனையில் 3 பேரின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவர்கள் 3 பேரையும் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து கடந்த 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, 3 பேரின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் .எஸ். ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது. இதைத்தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று காலை 8 மணியளவில் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் வருகிற 28-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவு (உபா) 18, 38, 39-ன் கீழ் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து கோவை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட 3 பேரும் .எஸ். அமைப்பின் பலத்தை கோவையில் காட்டவும் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் .எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் இவர்களை காவலில் எடுத்து விசாரிப்போம். இதற்கான மனுக்கள் 15 நாட்களில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கு எதிர்காலத்தில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்...) மாற்றப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கான பயிற்சி
ரெயில்வே குரூப்-டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.


ஜெயமோகனை அடித்தவர் திமுகவை சேர்ந்தவரா?
பிரபல தமிழ் எழுத்தாளர், பல விருதுகளை வென்றவர், கோடிக்கணக்கான வாசகர்களை பெற்றவர் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், சாதாரண ஒரு புளித்த மாவு விஷயத்திற்காக பிரச்சனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவை விற்றவர் ஜெயமோகனை தாக்கியதால் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு அடித்தவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது
மேலும் இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த ஜெயமோகன், 'அந்த கடைக்காரர் குடிகாரர் என்றும் தன்னிடம் பிரச்சனை செய்தது போல் பலரிடம் பிரச்சனை செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர் திமுக நிர்வாகி என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயமோகனை அடித்தவர் பெயர் செல்வம் என்றும், அவர் திமுக 17வது வட்டப் பிரதிநிதியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் செல்வத்தை போலீசார் விசாரணை செய்தபோது போலீஸ் நிலையத்திற்கு திமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் குவிந்துவிட்டதாகவும், திமுக நகரச் செயலாளர் ஒருவர் ஜெயமோகனிடம் சமாதானம் பேசியதாகவும், ஆனால் ஜெயமோகன் திரையுலக பிரபலம் என்பதாலும் இந்த விஷயம் மீடியாவில் வந்துவிட்டதால் திமுகவினர் பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றது போன்ற பல சம்பவங்களில் திமுகவின் பெயர் கெட்டுப்போயுள்ளதால் இந்த விஷயத்தில் கட்சி தலையிடாது என்றே கருதப்படுகிறது
  
𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢𐠢