பழமொழிகள் வெறும் கிழ மொழிகளல்ல -உங்களுக்குதெரியுமா?


ஆயி பார்த்த கல்யாணம் போயி பார்த்தால் தெரியும்
ஆயி என்றாள் குடும்பத்தில் மூத்தவர் என்று பொருள். அப்படிபட்டவர்கள் தான் நடத்த இருக்கும் கல்யாணத்தை சிறப்பாக எடுத்து கூறுவார்கள். அப்படி அவர்கள் சொன்னாலும் அதை நாம் நேரில் போய் பார்த்தால் தான் அது உண்மையா என்பது புரியும்.
எதையும் நாம் மற்றவர் கூறினால் நம்பக் கூடாது எதையும் நாம் ஆராய்ந்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
சாணி சட்டியும் சருவச் சட்டியும் ஒன்றா?
மாடு போடும் சாணியையும் சட்டியில் தான் எடுத்து வைக்கிறோம் அதுபோல சீர் வரிசை களையும் சட்டியில் தான் எடுத்து வைக்கிறோம். இதனால் இரண்டும் ஒன்றாகாது,மிக பழமயான பழமொழி இது அந்த காலத்தில் மண்பாட்டம் தான் பயன் படுத்தப்பட்டது.

மனிதர்கள் எல்லோரும் ஒன்றாகி விடமுடியாது.சாதாரண  மனிதனுக்கும் கல்வி ,கலைகள் கற்று தேரியவருக்கும் வித்தியாசம் உண்டு. இருவரும் மனிதர்கள்தான் என்ணத்தால் ,செய்கையால்,தேர்ந்த அறிவால் வித்தியாசப் படுகின்றனர்.என்பதை விளக்கும் பழமொழி இது
ஆடிப்பட்டம் தேடி விதை
ஆடியில் விதைத்தால் தான் தைமாதம் அறுவடை செய்யலாம். ஆடியில் மாமியார் வீட்டுக்கு சென்று விருந்து உண்டு விட்டு வயலை தரிசாய் போட்டு விட்டு தைமாதம் வயலுக்கு வந்தால் வயலில் என்ன இருக்கும்?இதை விளக்கும் பழமொழி இது.
சும்மா இருந்த சிட்டுக்குருவியின் முதுகில் குத்துவானேன் அது கொண்டையை கொண்டையை லாத்திக்கிட்டு கொத்த வருவானேன்?
இதுவும் கூட செய்யக் கூடாதவற்றை செய்வது தவறு என விளக்கும் பழமொழி
அரைப்படி அரிசி அன்னதானம் விடிய விடிய மோள தாளம்
சிலர் சிறிய உதவி செய்து விட்டு பெரிய விளம்பரம் தேடிக் கொள்வார்கள் ‘’ட்யுப்லைட்’’டை கோவிலுக்கு தந்து விட்டு அதன் வெளிச்சம் வெளியில் தெரியாத அளவுக்கு தன் பெயரை அதில் எழுதிவைப்பார்கள்.

இன்றைய அரசியல் வாதிகள் நடத்தும் சில உதவிகளுக்காக நடத்தப்படும் கூட்டத்திற்கு செய்யும் செலவுகளை விட விழாச் சிலவுகள் அதிகம் செய்வார்கள். கோவில் அன்ன தானத்திற்கு அரை படி அரிசி தந்து விட்டு கோவில் விழாவில் விடிய விடிய மேளக்கச்சேரி வைப்பது எப்படி?
நாய்க்கு வேலையில்லையாம், ஆனால் நிற்பதற்கு நேரமில்லையாம்
பொதுவாக நாயின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் பல உண்மைகள் புரியும். நாய் எந்த கம்பெனிக்கும் அலுவகத்திற்கோ சென்று வேலை செய்து பிழைப்பு நடத்தப் போவதில்லை. ஆனால் நாம் அந்த நாயை ‘’இங்கே வா’’ என்று அழைத்தோமானால் அது மிக அவசரமாக தெருமுனை வரை ஓடிச்சென்று பார்த்து விட்டு சிறிது நேரம் கழித்து நம்மிடம் வரும்.
அதுபோல வேலைக்குச் செல்லாமல்எந்த தொழிலும் புரியாமல், விட்டில் வீணாக பொழுதைக் கழிப்பவரை அவசர வேலையாக கடைக்கோ அல்லது முக்கியமான நபரை பார்ப்பதிற்க்கோ அனுப்பி வைத்தோமானில்முதலில் அவர் அங்கே போகமாட்டார். பிறகு தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாகச் சொல்வார். ஆக வெட்டியாய் வீணாகப் பொழுதைக் கழிப்பது தவறு என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி இதுவாகும்.
கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
இந்த பழமொழி உருமாறியிருக்கிறது. கைபுண் அல்லகைப்பூண்’. அணியக்கூடிய ஆபரணம்அதாவது கழுத்தில் அணியும் ஆபரணத்தைப் பார்க்க கண்ணாடி அவசியம்ஆனால் கையில் அணியும் ஆபரணத்தைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை. நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள மூன்றாவது மனிதனை  கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் உட்கருத்து.
இருட்டு வீட்டுக்குப் போனாலும் திருட்டு கை கேட்காது
மனிதன் தன் செயலைமாற்றிக் கொள்வது கடினம்இயல்பாய் அமைந்து விட்ட சுபாவம் எளிதில் மாறாது, மறையாதுஇதனால் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்று ஒரு பழமொழி வந்தது.திருடியே பழக்கப்பட்டவன் திருட்டை விடுவது கடினம். பொய் பேசிப்  பழக்கப்பட்டவன் பொய்யே பேசுவான்இந்தகருத்தை சொல்லும் பழமொழி இது. இருட்டு-வறுமையான வீடு என்பதை குறிக்கும்
கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.
ஈகை ஒரு மனிதனுக்கு சிறப்பைத் தரும். ஒருவன் தனது வருவாயில் ஒரு சிறு பகுதியைசேமிப்பது எப்படி நல்லதோ,அதுபோலவே ஒரு பகுதியை தர்மம்செய்வதும் நல்லதுஅதுவும் நம்முடைய சுய வருவாயில் செய்யப்பட்ட வேண்டும். அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாதுஇந்த கருத்தை தான் இப்பழமொழி உணர்த்துகிறது.
பூனை இல்லாத வீட்டில் எலி (துள்ளி விளையாடுது.) க்கு கொண்டாட்டம்
பூனை……பூ + நெய் = தேன்
எலி = பிணி (பிணி தான் பின்பு எலியாக மருவியிருக்க வேண்டும்.)

தேன் இல்லாத வீட்டில் (உடல்) பிணி துள்ளி விளையாடுமாம். அந்தக் காலத்தில் ஒளடதங்களில் (மருந்து) தேனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது.
              

1 comments:

  1. அறியாத பழமொழிகளையும் அறிந்தோம் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete