தேன் பானை எறும்பு


தேன் பானை எறும்பு (Honey Pot Ant) எனப்படும் இவ்வகை எறும்புகள், எறும்புகளின் காலனிக்கு தேவையான தேனை தனது உடலிலேயே சேமித்து வைக்கும் உயிருள்ள சேமிப்பு பாத்திரம் போல் செயல் படுகிறது.தேனீக்கள் தேனை சேமித்து வைக்க தனது கூட்டை பயன்படுத்துவது போல் இவ்வெறும்பு தனது உடம்பின் வயிற்றுப் பகுதியினை  சேமிப்பு பாத்திரமாக  பயன்படுத்துகிறதுதேவைப்படும்போது, பிறவகை  எறும்புகள் தங்களுடைய கொம்புகளால் குத்தி அத்திரவத்தை வெளிக்கொணர்கின்றன. பிற காலணி எறும்புகள் இவற்றை கடத்திச்செல்லவும் முயற்ச்சிக்குமாம்! அதனுடைய வயிறு ஏறக்குறைய திராட்க்ஷை பழம் அளவுக்கு பெருத்திருப்பதால் அதனால் அதிகம் நடமாட இயலாது. எனவே இவற்றை வெளியில் பெரும்பாலும் பார்க்க இயலாது. இது புற்றின் மிக ஆழமான பகுதிகளில் இருக்கும்.ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் இந்த எறும்புகளை ஒரு இனிமையான உணவாக கருதுகின்றனர்.
துரதிஷ்டம் , எங்கள் நாட்டில் இவ்வகை  எறும்புகள் இருந்திருந்தால் நாங்களும் கடத்தியிருக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 

0 comments:

Post a Comment