இந்த அறிகுறிகள் இருந்தால்....


இந்த  அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவ பரிசோதிக்க எடுக்க வேண்டும்!
நமது உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் நாம் அதனை பெரும்பாலும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
உடலில் ஏற்படுகின்ற சாதாரண காய்ச்சல் முதல் மிக மோசமான வயிற்று வலி வரை எல்லாமே ஏராளமான நோய்களுக்கான வழிகளை ஏற்படுத்தும். ஆதலால், உடலில் எந்த ஒரு அறிகுறி புதுமையாக தென்பட்டாலும் உடனடியாக அதை மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லது. இந்த பதிவில் எந்தெந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை சாதாரணமாக விட்டு விட கூடாது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
வியர்த்து கொட்டுதல்

அளவுக்கு அதிகமாக உடலில் வியர்த்து கொட்டினால் அதை மிக சாதாரண விஷயமாக எடுத்து கொள்ளாதீர்கள். அதிக அளவில் வியர்த்து கொட்டினால் அவை இதய கோளாறுகள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவற்றை குறிக்கும் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆதலால், இது போன்று இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பசியின்னை 
எந்த ஒரு காரணமும் இல்லாமல் பசியே எடுக்காமல் இருந்தால் அது நீங்கள் நினைப்பது போல சாதாரண விஷயம் இல்லை. ஏதேனும் தொற்றுகளினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இது போன்ற ஆபத்துகள் உண்டாக கூடும். அவசியம் இதை பற்றி பரிசோதிக்க வேண்டும்.
தட்பவெப்பம்
 உங்களது உடலின் தட்பவெப்பம் அதிகமாக இருந்தால் அவையும் மோசமான உடல் நல குறைபாட்டை கொண்டுள்ளது என அர்த்தமாம். தொடர்ந்து தும்பலோ, இரும்பலோ, தலைவலியோ இருந்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அவற்றை உடனடியாக பரிசோதித்து கொள்ளுங்கள்

            ⇚⇚⇚⇚⇚⇚⇚⇚⇚⇚தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛           


0 comments:

Post a Comment