தமிழில் கலந்த உருது மொழிச் சொற்கள்


தமிழர்கள் என்றும் அந்நிய மோகத்தில் அதிக இன்பம் அடைபவர்கள்.இலகுவாக அவர்களை மதமாற்றமோ மொழிமாற்றமோ செய்திட முடியும்.அதனாலேதான் அந்நிய ஆட்சிகாலங்களில் ,அந்நியர் வேறுநாடுகளிலும் கூட தமிழரைப் பெரும் பணிகளில் அமர்த்தியிருந்தனர்.அதேபோலவே தென்னிந்தியாவில் இசுலாமியர் ஆட்சியின் போது உருது மொழிச் சொற்கள் பல தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களாக இலகுவாகவே கலந்து மாறிவிட்டன. அப்படி தமிழில் கலந்திருக்கும் உருது மொழிச் சொற்கள் பல இருக்கின்றன. அந்தச் சொற்களில் கிடைத்தவைகள் பின்வருமாறு.
[மறை]தமிழில் கலந்த உருது மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும்

1      சுப்பிராசி-   வேலையாள்
2      சுபேதார்-     படையதிமான்
3      சுணாவணி-       வேண்டுகோள்
4      செலாவணி-       பொருள் மாற்று
5      சோராவரி- கொள்ளை
6      சுர்மா-  கண்மை
7      ஜூத்தா-       செருப்பு
8      சேந்தி-  கள்
9      சேர்பந்து-    சாட்டை
10    செண்டா-    கொடி
11    சேடை-  நீர்க்கட்டு
12    சேம்பா-        சளி நோய்
13    சோக்கு -பகட்டாரம்
14    சோல்னா-   தொங்குபை
15    டக்கர்-   குழப்பம்
16    டாணா-        காவலிடம்
17    தண்டோரா-       பறையறிவிப்பு
18    தமாம்-  முழுவதும்
19    தபால்-  அஞ்சல்
20    தமாஷ்- வேடிக்கை
21    தமுக்கு-        வார்ப் பறை
22    தயார்-  அணியம்
23    தர்ணா-        மறியல் போராட்டம்
24    தர்மா-   அற மன்றம்
25    தர்கா-   இறைநேசரின் அடக்கத்தலம்
26    தர்ஜுமா-     மொழிபெயர்ப்பு
27    தர்முஜ்தாஜர்-     உட்குத்தகைதாரன்
28    தரத்தூது-     முயற்சி
29    தரப்தார்-     கீழ்ப்பணிஞன்
30    தரப்பு-  பக்கம்
31    தரா-      வகை
32    தராசு-   துலாக்கோல்
33    தரி-        நன்செய்நிலம்
34    தரீப்பு-  தீர்மானம்
35    தரோகா-      பொய்
36    தலாய்த்து-  ஏவலன்
37    தலால்- தரகன்
38    தலாலி- தரகு
39    தஜ்வீஸ்-       தீர்ப்பு
40    தஸ்தகத்-     கையெழுத்து
41    தஸ்தாவேஜீ-      உரிமைச் சான்றாவணம்
42    தஸ்து-  தாண்டிய இருப்புத் தொகை
43    தஸ்தூர்-       வழக்கம்
44    தாக்கீது-      உத்தரவு
45    தாசில்- வட்டாட்சி
46    தாசில்தார்- வட்டாட்சியர்
47    தாத்து-  முறையீடு
48    தாதி-     முறையீட்டாளன்
49    தாதுபிராது-        அறிகுறி
50    தாபிதா-       பட்டாடை
51    தபேதார்-     சாரியன், பின்னடையன்
52    தாயத்து-      சுருள் தகடு
53    தாலுக்கா-   வட்டம்
54    தாவா-  வேண்டுகை
55    தாளா-  ஒப்பு
56    தாஜா-   புதியது
57    திண்டேல்-   கப்பல் கண்காணி
58    திம்மாக்கு-  வீண் பெருமை
59    திவால்-        பணகொடி
60    திவான்-       அரசிறை அதிகாரி
61    தினிசு- பொருள்வகை
62    தீன்-       மதம்
63    தீன்தார்-      அழிவு
64    துனியா-      நாடு
65    துபாரா-       இருமுறை
66    துபாஷ்-        இருமொழிவல்லான்
67    தும்பால்-     கொடை
68    துராய்- முத்துத் தலையணி
69    துரஸ்து-       தூய்மை
70    தேக்‌ஷா-      குடக்கலம்
71    நபர்-      தனியர், ஆள், ஒற்றையர்
72    நபர்ஜாமீன்-       ஆட்பிணை
73    நாசூக்கு-      அழகு, நயத்திறம்
74    நவாப்-  அரசப் பொறுப்பாண்மையன்
75    நிஜார்-  காற்சட்டை
76    பங்களா-      வளமனை
77    பட்டா-   உரிமை ஆவணம்
78    பட்டுவாடா- கணக்குத் தீர்ப்பு
79    படவா-  கூட்டுவன்
80    படா-      பெரிய, மிக
81    படுதா-  திரைச்சீலை
82    பதில்-   விடை, மாறு
83    பதிலி-   மாற்று
84    பந்தோபஸ்து-    காப்புப்படுத்தும் காவல்
85    பயில்வான்-        மல்லன், பொருநன்
86    பர்த்தி-  இணை, ஒப்பு
87    பர்பி-     தெங்கினிமை
88    பரவா(இல்லை)-        தாழ்வு(இல்லை)
89    பராரி-  நொடித்துப் போனவன்
90    பலே-     நன்று
91    பஜாரி-  பரத்தை
92    பாட்சா-        வல்லமை அரசன்
93    பாணா-        சிலம்பக்கழி
94    பாதுஷா-     இனிகம், அரசன்
95    பாயா-  ஆட்டுக்கால் சுடுசாறு
96    பாரா-   காவல்
97    பிச்சுவா-      கை ஈட்டி
98    பிசாத்து-      நொய்து, நொய்யம்
99    பிர்க்கா-       வட்டாரம்
100  பில்லாக்கு- மூக்கணி
101  பிராது- முறையீடு
102  பீடி-        இலைச் சுருட்டு
103  புகார்-   பெருங்கூச்சல், முறையீடு
104  புதினா-        ஈயெச்சக்கீரை
105  பூந்தி-    பொடிக்கோளி
106  பூரி-       மரப்பூதி, பூதி
107  பேக்கு-  மடையன்
108  பேசரி-  மூக்கொட்டி
109  பேட்டா  -படிப்பயணம்
110  பேட்டி-  நேருரை
111  பேடி-     விலங்கு
112  பேமானி-     மானமிலி
113  பேஜார்-        சோர்வு
114  பேஷ்-    மிக நன்று
115  பைசல்- தீர்வு
116  போணி -முதன்மாறு
117  போதை-       வெறிமயக்கம்
118  மகால்-  அரண்மனை
119  மசூதி-   பள்ளிவாயில்
120  மண்டி- பெருவிற்பகம்
121  மசோதா-     சட்ட முதல் முந்தாவணம்
122  மத்தாப்பு-    தீப்பூ
123  மாகாணம்- மாநிலம்
124  மார்வாரி-    வட்டியீட்டு
125  மாஜி-    முந்தின
126  மிராசுதார்- முகமையன்
127  முண்டா-      தோள்
128  மௌசு- கவர்ச்சி
129  ரகம்-     வகை
130  ருசு, ருஜூ-  மெய்ப்பிப்பு
131  ராத்தல்-       நாற்பது துலையம்
132  ரேக்ளா-        ஓரியனூர்தி
133  லத்தி-   குறுந்தடி
134  லாகு-    தாங்குதல்
135  லாடம்-  குளம்பணி
136  லோட்டா-     நீர்ச்செப்பு
137  லோலாக்கு- தொங்கணி
138  வகையறா- முதலியன, பிற
139  வசூல்-   தொகுத்தல், தண்டல்
140  வாபஸ்-        திரும்பப் பெறல்
141  வாய்தா-      தவணை
142  வாரிசு- மரபுரிமையர்
143  விலாவரி-    முழு விளக்கம்
144  ஜமீன்தார்-   நிலக்கிழார்
145  ஜரூர்-    விரைவு, கடிது
146  ஜல்தி-   விரைவு
147  ஜிம்கானா-  பொது விளையாட்டிடம்
148  ஜிகினா-       ஒண் தகடு
149  ஜீரா-      தீங்கூழ்
150  நமாஸ்- தொழுகை
151  மன்னிப்பு-   குற்றத்தைப் பொறுக்கை


[உதவி:முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள் நூல் பக்கம் 132-135].

0 comments:

Post a Comment