தமிழில் ஒரு எழுத்து வழங்கிய சொற்கள்தமிழில் 52 ஒற்றை எழுத்துச் சொற்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. உலகில் வேறு எந்த வரிவடிவ மொழியிலாவது இத்தனை ஒற்றை எழுத்துச் சொற்கள் இருக்குமா என்பது  சந்தேகமேசொல்வளம் (vocabulary) என்ற வகையில் பார்த்தால் தமிழின் பல சிறப்புகளுள் இதுவும் ஒன்று. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இந்தச் சொற்களின் முழுப் பட்டியல்லைப் பொருளுடன் காணலாம்.

- 'அந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
- மாடு.
- 'இந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
- ஒரு வகைப் பூச்சி, அழிவு.
- 'உந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
- ஊன், இறைச்சி.
- 'எந்த' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
- ஏவுதல், அம்பு.
- நுட்பம், அழகு.
- சென்று தங்குதல், மதகு நீர் தங்கும் பலகை.
- நெருப்பு.
கா - சோலை.
கு - பூமி.
கூ - கூப்பிடு.
கை - கரம்.
கோ - அரசன்.
கௌ - 'கௌவு' என்று ஏவுதல்.
சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல்.
சே - சிவப்பு.
சோ - மதில்.
தா - 'கொடு' என்று ஏவுதல்.
தீ - நெருப்பு.
து - உண் என்னும் ஏவல். துக் கொற்றா
தூ - தூய்மை.
தை - தையல் எனப்படும் பெண், 'தை' என்று ஏவுதல்.
- சிறப்பு.
நா - நாக்கு.
நீ - முன்னிலை ஒருமைப் பெயர்
நூ - எள்.
நே - நேசம்.
நை - நைதல்.
நொ - மென்மை.
நோ - வலி.
நௌ - மரக்கலம், கப்பல்.
பா - பாடல்.
பி - அழகு.
பீ - கழிவு.
பூ - மலர்.
பே - அச்சம்.
பை - பசுமை.
போ - 'செல்' என்று ஏவுதல்.
மா - ஒரு வகை மரம்.
மீ - மிகுதியானது.
மூ - மூன்று.
மே - மேன்மை.
மை - மசி (ink).
மோ - மொள்ளுதல்.
யா - 'யாவை' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
வா - 'வா' என்று அழைத்தல்.
வி - விசை.
வீ - பறவை.
வை - 'வை' என்று ஏவுதல்.
மேலே ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சில பொருள்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர அந்த ஒவ்வொரு ஓரெழுத்தொருமொழிக்கும் தமிழ் அகரமுதலிகள் கூறும் பொருள்கள் பல உள்ளன.

தொகுப்பு: செ . மனுவேந்தன்0 comments:

Post a Comment