வாழ்க்கையில் வெற்றி எப்போது?எப்படி?எது?

வாழ்வினில் வெற்றியென்பது இன்று மனிதர்கள் பணத்தினை அடிப்படையாக வைத்து தவறாகவே சிந்திக்கிறார்கள். அதனால் சாகும்வரை உழைப்பு ,உழைப்பு என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் வெற்றி என்பது.....
*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
*8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
*12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
*18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
*22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
*25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
*30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
*35 வயதில்*, போதுமான அளவு சம்பாதிக்க முடியுமானால், அது வெற்றி !
*45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
*50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
*55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
*60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
*65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
*80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

தோற்று போனால்வெற்றி கிடைக்குமா ..............................?
*அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*
*அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
*துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
*பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
*சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
*நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
*ஆகவே தோற்று போ,*தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
🙏 *”வாழ்க வளமுடன்*
-தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன் 

0 comments:

Post a comment