[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

விட்டுக்கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று.அவைகளின் போதனைகள்,சிந்தனைகள் மாறுபட்டவையாக இருந்தன. அது மட்டும் அல்ல,தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள்,நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். இதனால் இவை இலகுவில் விட்டுக்கொடுப்புடன் மாற்றக்கூடியவை அல்ல. ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது.இது,மதங்களுக்கு இடையேயான மோதலையும் சிலவேளை உள்- மத உட்பூசல்களையும் ஏற்படுத்தின. உதாரணமாக,யாழ்ப்பாணத்தை
போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர்,உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல,இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை.-பைபிளுடன் தொடங்கு,அது வெற்றி தரவில்லை என்றால்,வாளை பாவி என்பதாகும்-அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரானபயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைக
ளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது.இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள்.விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை.முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது.எது எப்படியிருப்பினும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை [செழிப்பை] அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.ஆகவே அவர்கள் தமது கவனத்தை பெரிய பெண் தெய்வம் ஒன்றை வழிபடுவதில் முதலில் கவனம் செலுத்தினர்.பின்னர் கருவுறுதலில் ஆணின் பங்கை உணர்ந்தது ஆண் தெய்வங்களும் தோன்ற வழிசமைத்தது. இந்த ஆண் தெய்வங்களுக்கு,பின்னர் மத குருமார்களால் படிப்படியாக அதிகரித்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.இந்த நவீன் உலகத்தில் சமயம் பெரும்பாலும் மனித பயத்திற்கும்,இந்த பாதுகாப்பற்ற உலகில்-இயற்கையின் அனர்த்தங்களால் அல்லது மனித வெறுப்புகளால் அல்லது சகிப்புத் தன்மை இன்மையால் எந்த நேரமும் ஏற்படும் காயங்கள்,உயிர்
உணவை தேடி சேகரிப்பதை விட,எப்படி உணவு உற்பத்தியை
தாமே செய்யலாம் என்பதை மனிதன் அறிந்தது,அதாவது,விவசாயம் அறிமுகமாகியது,மனித வரலாற்றில் ஒரு
பெரிய திருப்பம் என பரவலாக கருதப்படுகிறது.இந்த மாற்றம் உலகின்
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கால கட்டங்களில் நடை
பெற்றது.எப்படியாயினும்,அதி நவீன மேம்பட்ட
விவசாய தொழில் நுட்பம் கொண்ட இன்றும்,அப்படியான
எந்த வசதியும் அற்ற 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றும்,நல்ல அறுவடையை கொடுக்க,பிரகாசித்த சூரியனும் மழை வீழ்ச்சியும் எமக்கு
தேவைப் படுகிறது.ஆகவே,பண்டைய மனிதன்
தமக்கும் இயற்கைக்கும் இடையில் ஒரு உறவை ஏற்படுத்தியது
புதுமையல்ல.எனவே அவன் இயற்கை
கடவுளை மழை,வெயில் வேண்டி
கெஞ்சினான் அல்லது பிராத்தனை செய்தான்.என்றாலும் காலம் செல்ல,வேலை
நாட்களை தவிர்த்து,அதற்கென கிழமையில் ஒரு நாளை பிரத்தியேகமாக
ஒதுக்கினான்.அப்படி ஒரு வழிபாடு
செய்ய தனிப்பட்ட இடமும்,அந்த வழிபாட்டை
நிர்வாகம் செய்ய,திறமைவாய்ந்த தனி நபரும் தேவைப்பட்டனர். இந்த வகையில் தான்,பெரும்பாலும் வழிபாடு செய்ய சிறப்பு தினம்
அல்லது புனித நாளும்[ஓய்வு
நாள்],அந்த வழிபாடு செய்ய
ஒரு தனிப்பட்ட இடம் அல்லது ஆலயமும்,அந்த வழிபாட்டை முன்னின்று
நடத்த ஒரு பூசாரி அல்லது
மத குருவும் தோன்றியிருக்கலாம்?இவற்றிற்கான பல பண்டைய கால
தடையங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் வரலாற்றுக்கு
முற்பட்ட,மேற் பழைய கற்காலக்
குகை ஓவியம் அல்லது பாறை
ஓவியத்தை,உதாரணமாக,27,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரான்ஸ் கர்காஸ் குகைகள்[Gargas caves] போன்றவற்றை நாம் காண்கிறோம்.இந்த
ஓவியங்களுக்கு மதத்தின் தாக்கம் இருப்பதை காண்கிறோம். இப்படியான,இந்த குகைகளே மனித
இனத்தின் முதல் ஆலயமாக இருந்திருக்கும்
என கருதப்படுகிறது.இது மதத்தின் வரலாற்றை
30,000 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுசெல்கிறது.மேலும்,பழநி அருகே மேற்குத்
தொடர்ச்சி மலையில் பிரான்ஸ்,தென்னாப்பிரிக்கா,சிம்பாப்வே,இந்தோனேஷியா[ South
Africa,zimbabwe,France and Indonesia ] ஆகிய
நாடுகளில் இருப்பதைப் போன்ற 4
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இரத்த சிவப்பு நிறத்தில்
வரையப்பட்ட இந்த ஓவியங்களில்,ஒரு
ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின்
இருபுறமும் சூலம் வரையப்பட்டுள்ளது.இந்த
ஓவியம் மிக முக்கியமானது.சூலம்
என்பது சைவ வழிபாடு தொடர்பான
சின்னமாகும்.இவ்வகை சூல ஓவியங்கள்
மேலும் இரத்த சிவப்பு நிறத்தில்
உள்ளன . தற்போதுவரை ஊரின் எல்லையில் சூலக்கல்
நடும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது.இந்த ஓவியம்
பழங்குடி மக்களின் பாதுகாப்பு சடங்கை குறிப்பிடுவதற்காக வரையப்பட்டுள்ளது
போல் தெரிகிறது.இன்னொரு ஓவியத்தில் ஒரு மனிதன் வலது
கையில் ஒரு கைக்கோடாரியை ஏந்திய
நிலையில் உள்ளான்.இந்த மனிதனின் காலடியில்
ஒரு மனிதன் வீழ்ந்து கிடப்பதைப்போல
ஓவியம் வரையப்பட்டுள்ளது. மற்றொரு ஓவியம் ஒரு மனிதனின்
கை ஓவியமாகும்.இது,செங்காவி குழம்பில்
கையைத் தோய்த்து அதை பாறையில் அச்சு
பதிக்கும்விதமாக அழுத்தி எடுக்கப் பட்டுள்ளது.இந்த கை ஓவியங்களை
தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே,பிரான்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணலாம்.அது மட்டும் அல்ல,ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்பட்ட
பண்டைய கல்லறைகளில் இருந்து,50,000 ஆண்டுகளுக்கு முன்பே,தமது இறந்த
உறவினரை அடக்கம் செய்த முதல் மனித
இனம் ''நியண்டர்தால்'[நியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24,
000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.]
என அறிகிறோம்.சில கல்லறைகளில் இறந்தவரின்
உடலுடன் மாமிச விலங்குகளின் எலும்புகளும்
சேர்ந்து காணப்படுகின்றன. வேறு சில கல்லறைகளில்,
மலர்களும், சிலவேளை,மனிதனுக்கு பயன்படும் கருவிகளும் காணப்படுகின்றன.இது சில ''நியண்டர்தால் [Neanderthals]'' மனித குழுவிடம் ஒரு வித மறுமையில்
நம்பிக்கை இருந்ததை காட்டுகிறது. இது அவர்கள்,இன்று
உள்ள பல மத குழுக்கள்
போல்,இறப்பு மனிதனின் முடிவு
அல்ல,அடுத்த பிறப்பின் ஆரம்பம்
என நம்பியதை எடுத்து காட்டுகிறது.ஆகவே,நியண்டர்தால் மனிதன்
கடவுள்,மதம்,மறுமை போன்றவற்றை
அறிந்திருந்தான் என நாம் இலகுவாக
ஊகிக்கலாம்.
பகுதி
03 தொடரும்............... .
ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்
ReplyDeleteமனித இனத்தின் ஆரம்ப பேச்சு மொழி தமிழ் ! புவியின் மய்யப்பகுதியில் இருந்த கோண்டுவானா பெருங்கண்டத்தை சேர்ந்த ஆதிக்குடி தமிழர்கள் தான் பயிர் தொழில் செய்து உழைத்து விளைத்து வாழ்ந்த மனிதர்கள் என்பது புவியியல் ஆய்வாளர்களின் ஒருமித கருத்து !!!
ReplyDelete