மகாவம்சத்தில் புதைந்துள்ள..... (பகுதி 42)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

மூன்று வகையான போதனைத் திரட்டுகளை உள்ளடக்கிய திரிபிடகம் [Tripitaka] கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல். இதுவும் மகாவம்சமும் பாளி மொழியில் எழுதப் பட்டவை. எனவே பாளி மொழியியை நன்கு தெரியாத சாதாரண பொதுமக்கள் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிய மாட்டார்கள். எனவே புத்த பிக்குகள் மகாவம்சத்தை போதிக்கும் பொழுது, பாமர மக்கள் எந்த கேள்வியும் எழுப்பாமல், அவை புத்தரின் உண்மை வாக்கியங்கள் என ஏற்றுக் கொள்கிறார்கள். உதாரணமாக, புத்தர் அல்ல, மகாநாம தேரர் தான் சொல்கிறார், புத்த மதம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலோங்கி இருக்கும், சிங்களவர்கள் மட்டுமே அதை "பாதுகாக்க" வேண்டும் [Mahanama said, (NOT the Buddha), that Buddhism will prevail, for five-thousand years, and the Sinhalese alone, must “protect” it.] என்று! 

 

ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, இலங்கையின் புத்த தேரர்கள், புத்த தத்துவத்தை சிங்கள இனத்தின் மதமாக மாற்றி, இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து, அதன் வரலாற்றை, உதாரணமாக மகாவம்சப்படி பிரச்சாரம் செய்தது. எனவே இந்த காலப் பகுதியில், பௌத்தர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு, புத்த தேரர்களால் பொய் பரப்புரை செய்யப் பட்டுள்ளார்கள். இவர்கள், தத்துவத்தை மதமாக ஆக்கி, புத்தரையும் கடவுளாக மாற்றி, தம்மை அவரின் மதிப்பிற்கும் வழிபாட்டிற்கும் உரிய தூதர்களாக மாற்றி, புத்தரின் உண்மையான போதனைகளை புறக்கணித்துள்ளார்கள். [By converting the philosophy into a religion, Buddhist monks, also converted the Buddha, into a ‘God’, and themselves, as his ‘Messengers’, who must be revered and worshiped; totally disregarding the Buddha’s words]. எனவே மகாவம்ச பௌத்தத்தில், உண்மையில் புத்தரின் அறநெறியான சகிப்புத்தன்மை மற்றும் இரக்கம் என்பனவற்றிற்கு இடமே இல்லை. [In Mahavamsa Buddhism, there is no place, for the Buddha’s Dhamma, of tolerance and compassion!]. அதை இன்று இலங்கையில் தமிழர்களுக்கு, தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் அரச இயந்திரங்களின் அல்லது புத்த குருமார்களின் செயல்களில் இருந்து அறியலாம்,

 

உதாரணமாகபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் ஏப்ரல் மாதம், 25 ஆம் திகதி 2023, செய்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் பேசும் இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,

 

தமிழ் பேசும் இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, தமிழரின் சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் தமிழர் தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், தமிழர் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுககளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும், அழித்தும், பௌத்த சின்னங்களை நிறுவியும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்த்தும்,

 

அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 25.04.2023 அன்று தமிழர் தாயகப் பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி வடக்கு – கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் ஏற்பாடு செய்து இருப்பதை கூறலாம். 

 

ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளை மட்டும் உள்ளடக்கிய மகாவம்சம் என்ற புராணக் கதைகளை [mythical narrations] அடிப்படையாக வரிந்து கட்டிக் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மகிழ்வாக அனுபவித்த பன்மொழி நடைமுறை, பன்முக கலாச்சாரம் மற்றும் சர்வதேச வரலாறுகள் [multilingual, multicultural and even international history] எல்லாவற்றையும் மூடி மறைக்கப் பட்டுள்ளது. எனவே நாம் சரியான வரலாற்றை விஞ்ஞான, தொல்பொருள், கல்வெட்டு மற்றும் பயண சான்றுகளுடன் எங்கள் வருங்கால சந்ததியினருக்கு, இளைஞர்களுக்கு வழங்க நேரம் வந்துவிட்டது. அப்படியானால் தான் தேசிய மட்டத்தில் விதைக்கப்படுள்ள வெறுப்புகளும் மற்றும் அடிமைப்படுத்தும் செயல்களும் [nationalistic hatred and enslavement] முடிவுக்கு கொண்டுவர முடியும்.

 

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு" என்ற இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட குறள் 423 யை மனதில் கொண்டும் , "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு" என்ற குறள் 424 வழியில், இந்த நூறாண்டு வங்காள பல்துறையறிஞர் இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore), எமக்கு இன்று தந்துள்ள தேவையான மெய்யறிவு இலங்கைக்கும் பொருந்தும். 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அவர் உண்மையில் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பை ஒரு சுதந்திர இந்தியா பற்றிய அவரது கனவுகளை கவிதைகளாக சாமர்ப்பித்தாலும், அது அனைத்துத் தரப்பிற்கும், ஏன் இன்று இலங்கைக்கும் கூட பொருந்தக் கூடியதாகவே உள்ளது. எல்லா இனங்கள் மற்றும் மத மக்களும் தங்களை தேசிய அடிமை என்ற  சங்கிலிகளிலிருந்து தங்களை விடுவிக்க [for people of all breeds and creeds, to free themselves from the chains of nationalistic enslavement] இப்ப தருணம் வந்து விட்டது என்று எண்ணுகிறேன்

 

"இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,

எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,

அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ,

குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்

வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே

உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,

வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின்

அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ,

விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி

பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ,

அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்

எங்கே பாழடைந்த பழக்கம் என்னும்

பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ,

நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்

இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,

அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்

எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!

 

"Where The Mind Is Without Fear"

"Where the mind is without fear and the head is held high

Where knowledge is free

Where the world has not been broken up into fragments

By narrow domestic walls

Where words come out from the depth of truth

Where tireless striving stretches its arms towards perfection

Where the clear stream of reason has not lost its way

Into the dreary desert sand of dead habit

Where the mind is led forward by thee

Into ever-widening thought and action

Into that heaven of freedom, my Father, let my country awake"

 

[இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்  வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;"  கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali) / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா]

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

முடிவுற்றது  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

👉ஆரம்பத்தில்  வாசிக்க அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

✋முடிவுற்றது 

 

1 comments:

  1. மிகவும் சிறப்பு பதிப்பாசிரியர் அவர்களுக்கு உங்களுடைய வரலாற்று ஆய்வு உண்மையிலேயே புத்தகமாக வெளிவர வேண்டியது மிகவும் முக்கியமானது காலத்தின் தேவையுமாகும் பல்கலைக்கழக ஆய்வுக்கான ஆரம்ப புள்ளியாக நிச்சயமாக இது நல்லதொரு வழிகாட்டி நூலாக அமையும் ,வாழ்த்துக்கள்

    ReplyDelete