செந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]
தொலைப்பேசி - தொலைபேசி
தொலைபேசி என்பது சரிதொலைபேசி - தொலைக் கண் பேசுகருவினைக்கண் புகுவிழாஇவை போலும் ஏழாம் வேற்றுமைத் தொகையில் ருமொழி வினையாயவிடத்துஇயல்பாகும்.
அவைகள் - அவை

அவைகள் அவைகளை என்று எழுத வேண்டாம்அவை அவற்றை என்று எழுதுக. (அவை,அவற்றை என்று சொன்னாலே பன்மையைக் குறிக்கும்எல்லா மடல்களைக் கொண்டுவா என்பது பிழைஎல்லா மடல்களையும் கொண்டு வா என்பதே சரிஅனைத்துக்கடைகள் அடைக்கப்பட்டன என்பது பிழைஅனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டனஎன்பதே சரி.

ஏழ்மை - ஏழைமை

வறுமை என்ற பொருளில் ஏழ்மை என்பது பிழையாகும்ஏழைமை 
என்ப தே சரியாகும்.ஏழைமை - ஏழைத்தன்மையைக் குறிக்கும்.

நூலைக் கோர்த்து - நூலைக் கோத்து

ஊசியில் நூலைக் கோர்த்துக் கொடு என்பது பிழைஊசியில் நூலைக் கோத்துக் கொடுஎன்பதே சரிகோறுகிறேன் என்பது பிழைகோருகிறேன் என்பதே சரிஅதுவல்ல என்பதுபிழைஅதுவன்று என்பதே சரி.

தேனீர் - தேநீர்

தேன் 10 நீர் ஸ்ரீ தேனீர் என்று வரும்தேயிலையில் தயாரிக்கும் நீரைத் தேனீர் என்று எழுதவேண்டும்வயிறாற உண்டான்வாயாற வாழ்த்தினார் என்பன பிழைவயிறாரஉண்டான்வாயார வாழ்த்தினார் என்பனவே சரி.

ஒவ்வொரு பையன்களும் - ஒவ்வொரு பையனும்

ஒவ்வொரு பையன்களும் என்பது பிழைஒவ்வொரு பையனும் என்பதே சரிபாலோஅல்லது தேநீரோ குடிப்பேன் எனல் வேண்டாம்பாலோ தேநீரோ குடிப்பேன் என்றோபால்அல்லது தேநீர் குடிப்பேன் என்றோ கூறுக.

புகழ்தமிழ் - புகழ்த்தமிழ்

மேலுள்ள இரண்டு சொற்களும் சரியானவையேபுகழ்த்தமிழ் - புகழை உடைய தமிழ் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.)புகழ்தமிழ் வினைத்தொகையாகும். (வினைத்தொகையில் வல்லினம் மிகாது)

எல்லாரும் - எல்லோரும்

இவ்விரு சொற்களும் சரியானவையே. '' ஆகலும் செய்யுளில் உரித்தே'' என்னும்இலக்கணப்படிசெய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள '''' '''' மாறி நல்லோன்என வந்ததுசெய்யுள்மரபு உரைநடையிலும்பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுவிட்டதால்எல்லாரும் என்பது எல்லோரும் என மறுவடிவம் நிலைத்துவிட்டது.

அவரைத் தொடர்பு கொள் - அவரோடு தொடர்பு கொள்

அவரைத் தொடர்பு கொள் என்பது பிழைஅவரோடு தொடர்பு கொள் என்பதே சரிஇங்கேபழங்கள் கிடையாது என்பது பிழைஇங்கே பழங்கள் 
கிடையா என்பது சரிஇளநீர் கிடைக்கமாட்டேன் என்பது பிழைஇளநீர் கிடைக்கிறதில்லை என்பதே சரிவேலையை எடுத்துக்கொள் என்பது தமிழ் மரபன்றுவேலையை ஒப்புக் கொள் என்பதே தமிழ் மரபு.

கணவன் மற்றும் மனைவி - கணவன் மனைவியர்

கணவன் மற்றும் மனைவி எனபது தமிழ் மரபன்றுகணவன் மனைவியர்,  கணவனும்மனைவியும் என்பனவே தமிழ் மரபுதாய் தகப்பன்கள் என்பது பிழைதாய் தகப்பன்மார்என்பதே சரி.
 .

     -  நன்றி,கி.பாரதிதாசன்கவிஞா்                                                                                                                                   (அடுத்தவாரம் தொடரும்)


👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக...

Theebam.com: செந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 

Theebam.com: செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]

0 comments:

Post a Comment