"தமிழரின் உணவு பழக்கங்கள்" பகுதி : 09

 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது"  [தமிழிலும் ஆங்கிலத்திலும் ]


பண்டைய பதிவுகளில் இருந்தும் இன்றைய நடை முறைகளில் இருந்தும் ஒரு அறிவு பூர்வ ஊகத்தின் அடிப்படையில் உணவு வரலாற்றாளர்கள், எப்படி பாதுகாப்பான உணவு என்பதை முதலில் ஆதி மனிதன் கண்டுபிடித்தான் என்பதற்கு விடை தேடினர். ஆதி மனிதர்கள் மற்ற விலங்குகளை கவனித்தல் மூலம் உணவுகளை தேர்ந்து எடுத்தார்கள். உதாரணமாக, மற்ற விலங்குகள் எதை உட்கொள்கின்றன, எதை தவிர்க்கின்றன என்பதை கவனித்து பின்பற்றினார்கள். மேலும் ஒரு உணவு அது உட்கொண்ட பின் நோயை உண்டாக்கினால், அதை மற்றவர்களும் தவிர்த்தார்கள். இப்படியான சோதனை மற்றும் பிழை [trial and error] அடிப்படையிலும் பாதுகாப்பான உணவுகள் தேர்ந்து எடுக்கப்பட்டன என்கின்றனர். எனினும் தொழில் நுட்ப அறிவின் முன்னேற்றம் இறுதியாக - திரும்பவும்  சோதனை மற்றும் பிழை அடிப்படையில் - தீங்கு விளைவிக்கக் கூடிய உணவை நுகரக் கூடிய உணவாக மாற்ற உதவியது. உதாரணமாக,  இறைச்சி பதப்படுத்தப்பட்டது, கொட்டைகள் கொதிக்கவைக்கப்பட்டன, காய்கறிகள் உரிக்கப்பட்டன. மேலும் விலங்குகளை வீட்டு மிருகமாக மாற்ற முன்பு சாத்தியமான காய்கறிகளை விலங்குகளுக்கு முதலில் கொடுத்து பரிசோதனை செய்திருக்க அவர்களுக்கு வாய்ப்பு எதுவும் இருந்திருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


வீட்டு வளர்ப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட முன்னைய காட்டு தாவரங்களான கோதுமை, பார்லி, அரிசி, தினை, கம்பு, உருளைக்கிளங்கு போன்ற முதன்மையான தாவரங்கள், மனிதன் உட்கொள்ளும் முன் சமைத்தல் அவசியம் ஆகிறது. ஏனென்றால் அவை சமைக்கப்படாத நிலையில் நச்சுத் தன்மையை அல்லது சீரணிக்க முடியாத பொருள்களை அல்லது எதிர் - ஊட்டப் பொருள்களை [antinutrients] கொண்டிருப்பதாகும். ஆனால், சமைத்த பின் அவை செயலிழக்க செய்யப்படுகின்றன அல்லது மட்டுப் படுத்தப் படுகின்றன அல்லது குறைக்கப் படுகின்றன. ஆகவே நெருப்பை சமையலுக்கு பாவிக்கத் தொடங்கியது தான் இப்படியான தாவரங்களை வீட்டுப் பாவனைக்கு மாற்ற தூண்டியது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதுவே மனித பண்பாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணியாகும். அத்துடன் இது மேம்படுத்தப் பட்ட ஆரோக்கியத்தையும் கொடுத்தது. உணவு வரலாற்றாளர்கள் திறந்த வெளி நெருப்பில் உணவை வாட்டுதல் அல்லது சுடுதல் முதலில் தற்செயலாக ஏற்பட்டது என - நாம் முன்பு குறிப்பிட்டவாறு - கருதுகிறார்கள். என்றாலும் கொதித்தல் அப்படி தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மிகவும் கவனமாக இதற்காக வடிவமைக் கப்பட்ட  கருவிகள் மூலம் அடைந்த ஒரு செய்முறையாகும்.

 


மனிதகுலத்தின் நாகரீகத்தின் வரலாற்றுக்கு முந்தைய கட்டத்திலிருந்தே, ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல மனதைக் கட்டியெழுப்ப உணவின் இன்றியமையாத தன்மையை மனிதன் உணர்ந்தான். நன்கு உணவளிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும், வலிமையானவர்களாகவும் இருப்பதையும், உணவு இல்லாதவர்களை விட அவர்கள் அதிக வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக இருப்பதையும் அவனால்  கவனிக்க முடிந்தது . என்றாலும், கடந்த 150 ஆண்டுகளில் மட்டுமே நமது அன்றாட வாழ்க்கையில் உணவு வகிக்கும் முக்கிய பங்கை புறநிலையாகவும் அறிவியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள எம்மால் முடிந்தது. மனித உடலின் வளர்ச்சியிலும், உடலை ஆற்றலுடன் வைத்திருப்பதிலும்  உணவின் பங்கை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்த சமீபத்திய அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே.

 


உண்மையில் மனிதர்கள் உட்பட எல்லா உயிர் இனங்களின் உணவுத் தேவையை இயற்கை நன்கு கவனித்துக் கொண்டது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற தாவரங்களை வளர்க்கக்கூடிய விவசாய நிலத்தை அது  எங்களுக்கு வழங்கியுள்ளது. அது கடலை மீன்களாலும், நிலங்களை இறைச்சி, பால் மற்றும் பிற உணவுப் பொருட்களையும் தரக்கூடிய விலங்குகளாலும் நிரப்பினது. உணவுப் பொருட்களைப் பயிரிடுவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் வழிகளைக் கண்டறியும் திறனை அது மனிதனுக்கு வழங்கியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிகால மனிதன், காலப்போக்கில், வேட்டையாடுவதில் இருந்து விவசாயத்திற்கு மாறினான், இது நாகரீக வாழ்க்கையின் தொடக்க புள்ளியாக அமைந்தது. ஒருவகையில் மனிதன் ஆறாவது அறிவைப் பெற்றுள்ளான்.

 


அனைத்து உணவுப் பொருட்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவை. ஆடையில்லாமல் மனிதன் பாதி என்று தமிழ்ப் பழமொழி உண்டு; உணவு இல்லாமல் மனிதன் உயிரற்றவன் என்று சொல்லலாம். ஓராண்டு அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பருவமழை பொய்த்தால், விவசாய விளைபொருட்கள் கிடைக்காமல், கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்தின் ஒழுக்கத்தைக் கெடுக்கும். அனுதாபம், அன்பு, பரோபகாரம் போன்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் விலகும். சமூகம் தன் கலாச்சாரத்தை இழந்து, வாழ்க்கை தரம் சீரழியும். சமுதாயத்தின் இந்த முழு அமைப்பும் உணவை மையமாகக் கொண்டது. மனிதன் உணவுக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனவே நம் தமிழர்கள் பசியை ஒரு நோய் என்று வர்ணித்தனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். உடை, உறைவிடம் இல்லாமல் கூட சமூகம் இருக்க முடியும் ஆனால் உணவு இல்லாமல் இருக்க முடியாது. ஆதி மனிதனின் பல போராட்டங்கள் உணவை மையப்படுத்தியே இருந்தன.

 

"ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்

 ஒரு நாளும்

என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!

உன்னோடு வாழ்தல் அரிது."

இது வயிறுக்கு மனம் சொல்லுகிற செய்யுள்!!! துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே, கிடையாதபோது, ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்;  கிடைத்தபோது இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; ஆதலினால் உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது என்கிறார் ஔவையார். இனி உலகிற்கு முதல் முதல் நாகரிகம் தந்த பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் பற்றிப்  பார்ப்போம்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

பகுதி : 10 தொடரும்


👉அடுத்த பகுதியினை வாசிக்க ... அழுத்துக

Theebam.com: தமிழரின் உணவு பழக்கங்கள்"- பகுதி: 10:    

ஆரம்பத்திலிருந்து வாசிக்க...

 👉Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:

 

FOOD HABITS OF TAMILS / PART 09 "

FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING"

 


How did the first peoples know which foods were "safe" to eat? Food historians make educated guesses based on ancient records and modern practices. Based on this evidence, they presume foods were selected or rejected based on observation (they were avoided by the other animals in the area) in conjunction with basic trial and error (if it made the taster sick, it was unlikely others partook). Advances in technology eventually resulted in the ability (again, probably a matter of trial and error) to modify potentially harmful foods into consumable staples. Meat was preserved; nuts were boiled, vegetables were peeled. Before the domestication of animals, it is unlikely that potential vegetable food would have been given to any other animal species first, to see what effect these would have (perhaps one of the earliest functions of the dog, besides scavenging, was an 'experimental' animal to test 'new' foods -- a procedure known to have been practiced in some recent African communities).

 


All of the major domesticated plant foods, such as wheat, barley, rice, millet, rye, and potatoes, require cooking before they are suitable for human consumption. In fact, in a raw state, many plants contain toxic or indigestible substances or antinutrients. But after cooking, many of these undesirable substances are deactivated, neutralized, reduced, or released; Thus, the use of fire to cook plant foods doubtless encouraged the domestication of these foods and, thus, was a vitally important factor in human cultural advancement. Also Improved health must certainly have been one result of the discovery of cooking, Food historians generally agree the first cooking method was roasting over an open fire. Discovery is attributed to happy accident as explained earlier .Boiling was no accident. It was a carefully considered process achieved with tools crafted specifically for the purpose.

 

From the very prehistoric stage of the civilization of mankind man has realized the indispensability of food for the building up of healthy body and sound mind. He is able to notice that people who are well fed live longer and are stronger and they are able to do more work than those who do not have enough to eat. Yet it is only during the last 150 years that we are able to understand objectively and scientifically the important role that food plays in our daily life. Thanks to the recent scientific investigations that we are able to know clearly, the place of food in the growth of human body, as well as in ending the body with energy.

 

Nature has taken good care of food needs. She has given us farm land where vegetables, fruits, grains and other plants can be grown. She has filled the ocean with fish and the lands with animals that supply meat, milk and other food products. She has blessed us with the ability to find ways to cultivate and produce food products. Primitive man, in course of time, turned from hunting to farming and this marked the starting point of civilized life. In a way man is endowed with sixth knowledge.

 

All the food products are necessary for human life. There is a Tamil saying that man is half without dress; we may say man is lifeless without food. If the monsoon fails for just one year or two three years, then there will be no agricultural products and consequently people will suffer by severe drought. This will spoil the morality of the society. All the high qualities like sympathy, love and philanthropy will be dislocated. The society will lose its culture and standard of life will be degraded. This whole structure of the society centered on food. Man is ready to give anything for the sake of food. So our Tamils described hunger as a disease. The food, dress and shelter are the basic requirements for man. Society can exist even without dress and shelter but never without food. Many of the struggles of the primitive man were centered on food.

 

"If I ask you to give up a day's food, You won't

If I ask you to eat two day's food, You won't

Never will you understand my torment,

It's hard to live with you, my dreaded appetite"

[Avvaiyar's Good conduct (Nalvazhi)]

 

O my stomach, You will not know my sorrow even for a day; So living with you is very difficult for me says poet Auvaiyar. Which actually point out the importance of food & its habits. Now let's look at the food habits of the ancient Sumerians who gave the first civilization to the world

 

Thanks:

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

PART : 10 WILL FOLLOW..


0 comments:

Post a Comment