"தமிழரின் உணவு பழக்கங்கள்" பகுதி: 11

"FOOD HABITS OF TAMILS" PART-11  "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது"" / "Food Habits Of Ancient Sumer continuing""  [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil]

 


உலகெங்கிலும் உள்ள பண்டைய விவசாயிகளின் பிரதான பயிர் எப்போதும் தானியமாக இருந்தது. மெசொப்பொத்தேமியாவில், முக்கிய பயிர் பார்லி. ஆனால்  அரிசி மற்றும் சோளம் ஆகியவை அங்கு அறியப்படவில்லை, காரணம் மெசொப்பொத்தேமியாவில் உள்ளதை விட குறைந்த உப்புத்தன்மை கொண்ட மண்ணில் தான் கோதுமை செழித்து வளர்க்க கூடியது. இதனால் பார்லியும் அதன் மாவிலிருந்து சுடப்படும் ரொட்டியும் வாழ்வின் தூண்களாக அங்கு இருந்தன. மெசொப்பொத்தேமியா மற்றும் பல பழங்கால கலாச்சாரங்களில் ரொட்டியை புளிக்க ஈஸ்ட் பயன்படுத்தியதற்கான வெளிப்படையான ஆதாரங்கள் இல்லாததால், இந்த கலாச்சாரங்களில் உள்ள அனைத்து ரொட்டிகளும் தட்டையானதாகவும் அடர்த்தியானதாகவும் இருந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது. எனவே, மெசொப்பொத்தேமியரின் ரொட்டி பொதுவாக கரடு முரடாக, தட்டையாக. புளிப்பில்லாததாக இருந்தன. ஆனால், அவர்களின் செல்வந்தர்களுக்கான, தரமும் விலையும் உயர்ந்த ரொட்டி, அதிகமாக மென்மையான மாவால்,  இனிப்பும் வாசனையும் உள்ள மெதுவான ரொட்டியாக, சுடப்பட்டு இருக்கலாம் என நம்பப் படுகிறது. அப்படியான ரொட்டி துண்டு, ஊர் நகர அரசி ஷுபாத்தினது [Queen Shubad's / Puabi's] கல்லறையில் காணப்பட்டது, இதை  மேலும் உறுதிப் படுத்துகிறது. இது அவளின் மறுமை வாழ்விற்காக அங்கு வைக்கப் பட்டதாக கருதப்படுகிறது. மேலும் ரொட்டி விலங்கு, காய்கறி கொழுப்புகளினாலும், பால், வெண்ணெய், பால் கட்டி [சீஸ்], பழம், பழச்சாறு, எள்விதைகளாலும் செறிவூட்டப்பட்டன. அனைத்து சமையல் குறிப்புகளிலும் - பூண்டு, வெங்காயம், வெந்தயம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள், வாசனைக்காக கடுகு, சீரகம், மல்லி, புதினா (Mentha spicata / ஒரு மருத்துவ மூலிகை], சைப்ரஸ் [cypress] காய்கள் சேர்த்திருக்கின்றனர். கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்கு மாவுப் பொருள்கள், அரைத்த பார்லி, மெதுவான தன்மைக்கு நீர் சேர்ப்பது என்ற அனைத்து வகை கலைகளிலும் கை தேர்ந்தவர்களாக சுமேரியர் இருந்தனர். சில சமயம், உணவு மெதுவாக, மென்மையாக இருக்க பால், பியர் மற்றும் இரத்தம் போன்ற வற்றையும் அவர்கள் சேர்த்தனர். ஈராக், மெசபடோமியாவில் உள்ள களிமண் மாத்திரைகள், 3100-3000 BCE காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது. அது இப்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரொட்டி உணவுகள் தலையின் முன் ஒரு கிண்ணத்தை (ஒரு முக்கோணப் பொருளை) இணைத்து எழுதப்பட்டுள்ளது (புகைப்படம் - 05). இந்த தலை, கிண்ணம் இணைப்பு, பிற்கால சுமேரிய நூல்களில், "சாப்பிட" என்று பொருள்படுகிறது. இப்படியான முக்கோணப் பொருள் ரொட்டியின் வழக்கமான பிரதிநிதித்துவமும் ஆகும்.

பேரீச்சை மரம் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் முக்கிய உணவு பயிராக இருந்தது. இதுவும் பார்லி மாதிரி உப்பு மண்ணில் விளையக் கூடியது. இது, சர்க்கரை மற்றும் இரும்பு சத்து கொண்டதுடன் இலகுவாக பேணக்கூடியதும், விவசாயிகள் முதலில் வீட்டு வளர்ப்பாக்கிய காட்டுத் தாவரங்களில் இதுவும் ஒன்று ஆகும். ஆனால், இன்று மத்திய தரைக் கடல் பகுதியில் முக்கிய உணவாக காணப்படும் ஆலிவ் [olive], மற்றும் திராட்சை போன்றவை மெசொப்பொத்தேமியா உணவில் அன்று அருமையாகவே காணப் பட்டன. பொதுவாக இறைச்சி வறுத்தும் கொதித்தும், வாட்டியும் அல்லது சுட்டும் சமைக்கப்பட்ட துடன், அவை காயவைத்து, புகையிட்டு அல்லது உப்பு தடவி பேணப்பட்டன.

சுமேரியர்களின் பெரும்பான்மையான உணவுகள் நீரில் அல்லது திரவத்தில் சமைக்கப்பட்டன. நீரில் கொதிக்க வைத்து சமைப்பது என்பது, சமையல் அறிவியலில் புதுமை கலந்த ஓர் முக்கியமான மைல் கல்லாகும். அதுவரை மக்கள், நேரடியாய் நெருப்பில் போட்டு சமைத்தனர்; பின் சுட்டனர்; பிறகு பாத்திரத்தில் போட்டு வதக்கினர்; பாத்திரத்தில் போட்டு வறுத்தனர். நெருப்பு தணலில், தீயில் வாட்டினர்; லேசாக புரட்டி புரட்டி வாட்டினர். இதெல்லாம் போக நீரில் போட்டு சமைப்பது, சுவையான, வசதியான சமையலாகும். நீரில் போடுவதன் மூலம், உணவின் சுவை கூடுகிறது. மேலும் அதன் மணத்தை அதிகரிப்பதும், சமையலை வளமாக்குவதும், பல வகை உணவுகள் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கின்றது. இந்த சுவையை வறுத்தல் சுடுதல், புரட்டுதல் மூலம் செய்ய முடியாது. தண்ணீரில் உணவுக்கான பொருட்களை போட்டு, வேக வைத்து உண்பது என்பது நவீன புதிய முறை. இந்த திரவத்தில் சமைக்கும் நவீன புதிய முறை, மெசொப்பொத்தேமியாவில் உள்ள மாறுபட்ட எல்லா இன குழுக்களிடமும் முழுமையாக பரவியதுடன் இந்த இனக்குழுக்கள் பல, உணவு பழக்கங்களை தமக்குள்ள பொதுவாக பகிர்ந்தனர். அத்துடன் சமையல் பாத்திரமும் பரிணாமம் பெற்று பல புது நவீன சமையலுக்கு வழிவகுத்தன. இப்படி மெசொப்பொத்தேமியாவில் முதல் முதல் தொடங்கப்பட்டு, பின் அங்கு வழமையில் இருந்த பல சமையலின் குறிப்புகளை, சுமேரியர்களை வென்ற பாபிலோனியர்கள் வெகு புத்திசாலித் தனத்துடன் சுட்ட களிமண் பலகையில் பதிவும் செய்துள்ளனர்.


சுமேரியர்கள் கியூனிபார்ம் எழுத்தை கி மு 3100 ஆண்டளவில் கண்டுபிடித்தார்கள். இந்த எழுத்து மெசொப்பொத்தேமியாவின் பிற பகுதிகளுக்கும் பரவி, மற்ற குழுக்கள் தமது மொழியை எழுத அதை பாவித்தனர். கி மு 1900 ஆண்டளவில் பொதுவான கியூனிபார்ம் எழுத்தை பாவித்து சுமேரியன் மற்றும்  அக்காடியன் மொழியில் 800 இக்கு மேற்பட்ட  உணவு மற்றும் குடிவகை சொற்களை பாபிலோனியரால் தொகுக்கப்பட்டன. சுமேரியர்கள் தமது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே, ரொட்டிகள் சுடுவதற்கு ஏற்ற கல் அடுப்புகள் உருவாக்கினார்கள். அதை தொடர்ந்து கி மு 2500 ஆண்டு அளவில் தீச்செங்கல் அடுப்பு பாவனைக்கு வந்தன. அத்துடன் சில அடுப்புகள் தட்டையான மேற்பரப்புடன் வடிவமைக்கப்பட்டன. அவை "களி" மண்ணாலோ அல்லது வெண்கலத்தாலோ செய்த மெதுவாக வேகவைகிற சட்டியை அல்லது வறுக்குஞ்சட்டியை [வாணலி] தாங்கக் கூடியதாக இருந்தன. அங்கு சமையல் ஒரு கலையாகவே கருதப்பட்டது. அக்காடியன்கள் ஒரு சமையலறையின் பொறுப்பாளருக்கு 'முபன்னு' அல்லது 'அலங்காரக்காரர்' ['Mubannu' or 'embellisher] என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 12 தொடரும்


👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க...

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:

 

"FOOD HABITS OF TAMILS" PART: 11 "Food Habits Of Ancient Sumer continuing"

 


The staple crop of ancient farmers around the world was always grain. In Mesopotamia, the chief crop was barley, Rice and corn were were unknown and Wheat flourished on a soil less saline than exists in most of Mesopotamia. Thus barley and the bread baked from its flour become the staff of life. Because we are lacking explicit evidence for the use of yeast to leaven bread in Mesopotamia and many other ancient cultures,  the cuisines of these cultures have assumed that all of the bread in these cultures was flat and dense like hardtack. So,  Mesopotamian bread was not exceptional, usually coarse, flat, and unleavened, but a more expensive bread could be baked from finer flour as Pieces of just such a bread were found in the tomb of Queen Puabi of Ur, stored there to provide her spirit with sustenance in the afterlife. Bread could also be enriched with animal and vegetable fat; milk, butter, and cheese; fruit and fruit juice; and sesame seeds. The gardens of Mesopotamia watered by irrigation canals , were lush with fruits & vegetables, Among the fruits were date - palm thrived on relatively saline soil and was one of the first plant farmers domesticated. As for vegetables, the onion was king along with its cousin garlic. Other vegetables included lettuce, cabbage and cucumber, carrots ? and radishes, beets and turnips and a variety of legumes, including beans, peas and chickpeas. It is found from the clay tablets in  Mesopotamia, Iraq, belongs to  Late Uruk Period, 3100-3000 BCE, now available at the British Museum, London, that the Bread Rations was written by combining a human head a bowl (a triangular object in front of the head / Photo - 05). This combination, in later Sumerian texts, means "to eat". The triangular object was the regular representation of bread. The most important food crop especially in southern Mesopotamia was the date palm. Rich in sugar and iron, dates were easily preserved. Like barley, the date - palm thrived on relatively saline soil and was one of the first plants farmers domesticated. Curiously, two mainstays of the present Mediterranean diet -- olives and grapes. were seldom found in Mesopotamian cuisine. Meats were cooked by roasting, boiling, barbecuing or broiling and preserved by drying, smoking or salting.

Although Mesopotamia was a hodgepodge of ethnic groups, the written evidence indicate that the different people shared many food habits. The Sumerian invented cuneiform writing around 3100 BC. The writing system spread to Mesopotamia's other groups to record their language and by about 1900 BC, the Babylonians compiled a concordance with more than 800 food & drink terms in Sumerian & Akkadian [The language spoken by the Babylonians] using the common cuneiform script. One of the largest categories was for foods cooked in liquid. These are simply names without gastronomic detail, but the large number of culinary terms suggests that sophisticated cooking had spread throughout Mesopotamia's different ethnic groups.

Cooking equipment also evolved to allow more sophisticated cookery. The Sumerians in their prehistory developed stone ovens capable of baking loaves of bread, Fire brick ovens followed by about 2500 BC, Some designed with flat areas that could hold stewing or frying pans, made from either clay or bronze, allowing the efficient use of fuel. Cooking was considered an art. Akkadians honoured the person in charge of a kitchen with the title 'Mubannu' or 'embellisher'

Thanks-

[Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]

PART : 12 WILL FOLLOW

அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்" பகுதி: 12:     

ஆரம்பத்திலிருந்து வாசிக்க...

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:

 👦👧👨👩👪

 

0 comments:

Post a Comment