சிரிக்க...சில நகைச்சுவைகள்.

கணவன் ; சாமி கிட்ட என்னமா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்கநீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்
..................................
Man1: என்ன சார் சுவிட்ச் போர்டை தண்ணி உத்தி கழுவுரிங்க. ஷாக் அடிசிடும்ல?
Man2: தம்பி நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா?
...................................
நீ சிரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் உன் பின்னால்
நான் இருப்பேன்.
ஏனென்னாறால் அந்தக் கொடுமையை என்னால் பார்க்க
முடியாது..!
...................................
ஒருவன்: டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
மற்றவன்:நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
...................................
ஒருவன்:""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''
மற்றவன்:""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''
...................................
ஆசிரியர்: ""நேற்று ஸ்கூலுக்கு லேட்டா வந்ததுக்கு உங்க அப்பாவை கூட்டிட்டு வரச் சொன்னேனே, ஏன் கூட்டிட்டு வரலே?''
மாணவன்:""சாரி சார், எங்கப்பா ஆபீஸýக்கு லேட்டாப் போனதால அவர் அவங்க அப்பாவை கூட்டிட்டு போயிருக்காரு''
..................................
கணவன்: நான் நாயா கத்திட்டு இருக்கேன், எங்கடி போன?
மனைவி: நாய் பிஸ்கெட் வாங்கப் போனேங்க...!
..................................
ஒருவர்: ""ஆபிஸ் வேலைய வீட்டிலேயும் பார்ப்பியாமே, என்ன அது?''
மற்றவர்:""தூங்குறதுதான்''
..................................
நோயாளி ""டாக்டர் 100 வயது வரை வாழறதுக்கு என்ன பண்ணனும்?''
டாக்டர்:""இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்''
..................................
ஒருவன்:""என்னடா! டிராபிஃக் போலீஸ் ஆயிட்டே போலிருக்கு!''
மற்றவன்:""எங்க வாத்தியார் வாக்கு பலிச்சிடுச்சு! நீ நடு ரோட்ல தான்டா நிப்பே'ன்னாரு''
..................................
ஒருத்தி: ""அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்?''
மற்றவள்:""நெய் மைசூர்பான்னா உயிரை விட்டுடுவேன்னு அவங்க தான் சொன்னாங்க!''
..................................
ஒருவன்: ""உன் மனைவிக்கும் அம்மாவுக்கு சண்டை வந்தா நீ யார் பக்கம்?''
மற்றவன்:""பீரோவுக்கு பின்பக்கம்!''
...................................
ஒருத்தி: ""உன் மாமியார் பாத்ரூம்ல வழுக்கி விழுந்தப்போ நீ தூக்கவேயில்லையாமே''
மற்றவள்:""டாக்டர், நான் வெயிட்டையே தூக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு''


0 comments:

Post a Comment