எறும்புகளின் விசித்திரமான செயல்கள்

எறும்புகள் உலகில் 22,000 இனங்கள் காணப்படுகின்றன. அவைகளின்  செயல்கள் நமக்கு தெரிந்ததைவிட அதிகம். அவற்றில் சிலவற்றினை தொகுத்து தருவதுடன் ஊரில் நான் கண்ட காட்சியையும் இறுதியில் வழங்குவது என் எண்ணம்.
காட்டுக்குள் தங்கள் ராணியையும் உணவையும்  வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எறும்பினங்கள் எவ்வாறு தண்ணீரில் படகு அமைத்து  பாதுகாப்பாக சென்றடைகிறது பாருங்கள்:⏬  

⟿⟿⟿⟿⟿⟿⟿⟿⟿⟿⟿⟿⟿⟿
 தங்கள் பயணங்களைத் தொடர்வதற்காக பாலம் அமைக்கும் 
எறும்புகள்:⏬

' 
ஆபிரிக்கா- நமீபியா நாட்டின் மேற்கில்  நமீபி பாலைவனம் +70c டிகிரி வெப்ப நிலையிலும்  வாழும் எறும்புகள்:⏬



அடுத்து,ஊரில் நான் கிட்டத்தட்ட  40 வருடத்திற்குமுன் கண்ட காட்சி:

இப்படி ஒரு அரைச்சுவரின் மேல்தளத்தில்  மீனின் நடுமுள்ளினை எறும்புகள் காவிச்சென்று கொண்ருந்தன.அதேவேளை  அவை  போகும் திசையில் முன்னே ஒரு வரிசையில்10,12எறும்புகள் அணிவகுத்துச்  சென்றுகொண்டிருந்தன .  ஒவ்வொரு முதலாவது முன் எறும்பு , வரிசையிலிருந்து விலகி பின்னே வந்து தூக்கி வரும் முன் பகுதி எறும்பினை சந்தித்தது [தகவல் வழங்கியது போல் உணர்ந்தேன்],  மறுபடியும் அந்த அணிவகுப்பின் கடைசி எறும்பாக இணைந்து போய்க்கொண்டிருக்க ,அப்படியே மாறி,மாறி முதலாவது எறும்பு வருவதும் ,சந்திப்பதும் ,வரிசையின்  இறுதியில்   இணைவதுமாக கண்ட எனக்கு ஆச்சரியமாக இருந்ததால் அதனை சோதிக்க விரும்பி  ,அவர்கள் செல்லும் பாதையின் முன் சற்றுத் தள்ளி குறுக்கே ஒரு குச்சியினை எடுத்து வைத்துவிட்டேன்.
அணிவகுப்பின் முதல் எறும்பு ,குச்சியினைச் சந்தித்ததும் ,பின்னால் வந்து தூக்கும் எறும்புகளைச் சென்று  சந்திக்க அப்படியே அணிவகுப்பிலிருந்த எறும்புகளும் ,குச்சியினைச் சுமக்கும் எறும்புகளைச்  சென்று சந்தித்ததும் தூக்குவோரினை சந்திக்க , தூக்கிய எறும்புகள் , மீன் முள்ளினைக் கீழே வைத்துவிட்டு , முன் மூன்று பக்கமும் பரபரப்பாக எதையோ தேடின. அவ்வமயம் ஒருவரை ஒருவர் சந்திப்புகளையும் தொடர்ந்து-[பாதையினை கண்டு பிடித்திருக்க வேண்டும்]- மீண்டும் அவை வந்து முள்ளினைத் தூக்கிச்செல்ல, சில எறும்புகள் முன் பக்கமாக அலைந்து தகவல்களைப் பரிமாறியிருக்க வேண்டும். தூக்கி வந்த முள்ளினை ,குச்சியின் அருகில் வந்ததும்  சுவரின் நிலைக்குத்து தளத்தின் வழியில் மிகவும் சிரமப்பட்டு இறங்கி  U வடிவில் வளைந்து குச்சியினை விலத்தி வந்து மீண்டும் சுவரின் கிடையான  மேற்பாகத்தில் ஏறி அவை பயணத்தினை தொடர்ந்தன.
எறும்புகளின் ஒற்றுமையினையும், அன்றய செயல் திறனையும் என்னால் மறக்கமுடியவில்லை. இப்படி  பல உயிரினங்களின் திறமைகள் இன்னும் நாம் அறியாதவை பல உலகில் உண்டு.

🐜🐜🐜🐜🐜தொகுப்பு:செ .மனுவேந்தன் 🐜🐜🐜🐜🐜








0 comments:

Post a Comment