ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா?
பல கலாசாரங்களில் ஆண்கள்  நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், பெண்கள்  உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
 ஆனால் இது குறித்து பல சுகாதார அதிகாரிகள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நமது சிறுநீர் சிறுநீரகத்தில் உருவாகிறது. அதுதான் நமது ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுகிறது.
அதன்பின் சிறுநீரானது, சீறுநீர் பையில் சேகரித்து வைக்கப்படும்.
சிறுநீர் பையின் கொள்ளளவு 300 மில்லிட்டர் முதல் 600 மில்லி லிட்டர் வரை இருந்தபோதும், அது மூன்றில் இரண்டு பங்கு நிரம்பியவுடன் நாம் சிறுநீர் கழித்துவிடுவோம்.
நாம் எப்போது கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று சிறுநீர் பை எச்சரிக்கை விடுக்கும்.
நாம் ஒரு வசதியான கோணத்தில் உட்கார்ந்தால், சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் வெளியேற அது உதவும் தசைகளையும் தளர்வாக்கும்.
அதன்பின் சிறுநீர் பை சுருங்கி, அது யுரித்ராவில் (சிறுநீர் பையையும் ஆண்குறியையும் இணைக்கும் பகுதி) வழியாக உடம்பிலிருந்து வெளியேறும்.
ஒரு ஆரோக்கியமான மனிதர், சிரமப்பட்டு சிறுநீர் கழிக்க கூடாது.
விரைவீக்கம் உள்ளவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் அது பயன் தரும்.
உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும்போது யுரித்ரா பகுதியில் அழுத்தம் இலகுவாகி சிறுநீர் கழிப்பது இலகுவாகிறது.
பிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியாக   அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அது சரி என்பதை நிரூபிக்கும் ஆய்வு எதுவும் இல்லை.
2012ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல்வாதி ஒருவர் பொது கழிப்பிடங்களில் ஆண்கள் உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற விவாதத்தை முன் வைத்தார். அதிலிருந்து பல ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
கழிவறைகளில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற பச்சை நிற குறியீடும், நின்று சிறுநீர் கழிக்க கூடாது என சிவப்பு நிற குறியீடும் அங்கே வைக்கப்பட்டுள்ளது.
 நின்று கழிக்கும்போது பக்கங்களில்/உடைகளில்  சிறுநீர் சிந்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் இருந்து கழிப்பது எல்லாவற்றிற்கும் சிறந்தது எனக் கொள்ளலாம்.

🕵 🕵 🕵 🕵 🕵 🕵 🕵 🕵 🕵 🕵 🕵


0 comments:

Post a Comment