உலகத்தைத் தெரிந்து கொள்வது எப்படி? [-புத்தனின் வழியில்..]புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்..

அப்போது அங்கு வந்த புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தன் புத்தரிடம், “குருவே, நான் இந்த உலகத்தைத்தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.. எப்படி?” என்று கேட்டார்.
புத்தர் அவரிடம், “இந்த மரத்தில் ஏறி தழைகளைப் பறித்து வா!” என்றார்..
ஆனந்தன் அந்த மரத்தின் மேல் ஏறித் தன் கைகொள்ளும் அளவுக்குத் தழைகளைப் பறித்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்.
புத்தர் அவரைப் பார்த்து, “ஆனந்தா, இப்போது உன் கையில் என்ன உள்ளது?” என்று கேட்டார்.
தழைகள் குருவே” என்றார்..
அப்படியானால்.. மரத்தில்...?”என்று திருப்பிக் கேட்டார் புத்தர்..
மரத்தில் நிறைய தழைகள் இருக்கின்றன” என்றார் ஆனந்தன்..
உடனே புத்தர், “ஆனந்தா, இந்த உலகத்தைத்தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே...அது இதுதான்..நான் உனக்குப் போதித்தது உன் கையிலுள்ள அளவுதான். நான் உனக்குப் போதிக்காதது மரத்திலுள்ள தழைகளின் அளவு. அவ்வளவையும் என்னால் போதிக்க முடியாது. நீ இந்த உலகத்தை உன் அனுபவத்தால்தான் அதிகம் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.
🔔      🔔     🔔      🔔     🔔
குருவும் ஆசிரியரும் எமக்குக் கற்றுத் தந்தது வாழ்வெனும் புத்தகத்தின் ஒரு சில வரிகள். அவ்வரிகள் வாழ்வின் அத்திவாரங்களே. மீதியினை அறிந்துகொள்வது எமது வாழ்க்கை முறைகளிலேயே உள்ளது.
உதாரணமாக ,விளையாட்டுப்போட்டிகளில் கலந்து தோல்விகளைச் சந்திக்கும்  சிறுவர் -வளர்ந்தபின் வாழ்வின் தோல்விகளை சந்திக்கக்கூடிய- மனவலிமையினைப் பெறுகிறான்.
இந்த அனுபவக் கல்வியை  ஒரு ஆசிரியானால் வகுப்பறையில் வார்த்தைகளினால்  புரியவைத்துவிட  முடியாது.
இன்று புலம் பெயர் தேசங்களிலும்கூட ,வந்த காலத்தில் கடன்சுமை, பெற்றோர், சகோதரிகளுக்காக  உழைத்தவர்கள், பின்னர் பிள்ளைகளின் கல்விக்காக உழைத்தவர்கள் ,இன்று கல்வியை முடித்து தொழில் புரியும்  பிள்ளைகள்  வாக்கிய வீட்டுக் கடனுக்காக உழைத்துக்கொண்டு  பிள்ளைகளை சோம்பேறிகளாக்கி, அவர்களிடம் பொறுப்பு எனும் வாழ்க்கைக்குரிய அனுபவத்தினை சேர விடாது, அவ் உலகத்தினை அறியவிடாது  தாமும் வாழாது, இறக்கும்வரை உழைத்துக் கொண்டிருப்பது தொடர்பாக அண்மையில் ஒரு வானொலியில்  கருத்து எனைக்  கவர்ந்தது.
கடன் சுமையுடன் வந்திறங்கிய நாங்களே இவ்வளவு கடன்களையும் ,கடமைகளையும் நிறைவேற்றிச் சாதிக்க முடிந்ததெனில் ,இங்கு படித்து நல்ல தொழில் கிடைத்த பிள்ளைகளால் எவ்வளவோ சாதிக்கமுடியும் எனும் நம்பிக்கையினை/வாழ்வின் அனுபவத்தினைப்   பிள்ளைகளுக்கு மேற்படி பெற்றோர்கள் வழங்க தவறியது ஏன் என்று புரியவில்லை! 
பாடசாலைக் கல்வி, உழைப்பு என்பது வாழ்க்கையின் சில பக்கங்களே. எனவே உலகினை அறிந்து சிறப்புடன் வாழ்ந்திட அனுபவங்களில் கற்றிடுவோம். கற்றிட அனுமதிப்போம்.

தொகுப்பு: செ .மனுவேந்தன்


5 comments:

 1. அவ்வையார் சொன்னதை எல்லோ கொப்பி அடித்திருக்கிறார் புத்தர்!

  ReplyDelete
 2. இதைத்தான் அவ்வையாரும் சொன்னாரே!

  ReplyDelete
  Replies
  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Tuesday, April 16, 2013

   ஆம் “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு ” அந்த அறிவின் மூதாட்டி குறிப்பிட்டது போல்

   Delete
 3. கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
  நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

  ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

  இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

  தவம் செய்ய வேண்டும்!!!

  தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

  தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

  நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

  இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

  திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

  உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
  இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

  அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

  லிங்க்ஐ படியுங்க.

  http://tamil.vallalyaar.com/?page_id=80


  blogs

  sagakalvi.blogspot.com
  kanmanimaalai.blogspot.in

  ReplyDelete
 4. எனக்குத்தான் எல்லாமே தெரியும் என மமதை கொண்டு அலையும் மனிதருக்கு இது ஒரு நல்ல சிந்தனை. நாம்
  எல்லோரும் இறப்பு வரை கற்றுக்கொள்ள வேண்டியவைகள் ஏராளம் உண்டென்பதை
  அழகாக இரண்டே வரிகளில் சொல்லிச் சென்றார் நம் ஔவைக்கிழவி.
  சிறப்பான பதிவு.
  தொடரட்டும் நற் பதிவுகள்.

  ReplyDelete