21ம் நூற்றாண்டுக் காதலின் குணம்குறிகள்..!

நீங்க காதலிக்கிறீங்களா..


1. உங்க காதலிக்கு பக்கத்தில வரும் உங்க நண்பனும் எதிரியாய்த்  தெரிவான். (அவனே உங்க காதலியின்  மூஞ்சியை பார்த்து உள்ளுங்க ஓங்காளித்தாலும் நீங்க நம்ப மாட்டீங்க.)

2. உங்க காதலியைப்  பார்த்து உங்க முன்னாடியே.. இளிச்சுக்கிட்டு.. உரசிட்டு போறவனை.. கும்மு கும்முன்னு கும்மத் தோனும். (என்ன செய்யுறது உங்களால அது முடியாது. உள்ள வெந்துகிட்டே காதலி அவன் பின்னால ஓடிடப்படாது என்ற நல்ல நோக்கத்தில் கையைப் பிடிச்சிக்கிட்டு நடப்பீங்க.)

3.பேஸ் புக்கில உங்க காதலியின் கணக்கை அடிக்கடி கணக்குப் பண்ணுவீங்க.. அவ போனையும் அப்ஸ் இறக்கித்தாறன் சாட்டில நோட்டம் விடுவீங்க. எவன் எவன் எல்லாம் அவ போஸ்டுக்கு லைக் போடுறான்.. கடலை போடுறானுன்னு பார்க்க. (அவளுக்கு  உங்க சின்னப்புத்தி விளங்கினாலும் காட்டிக்காது. பின்னாடி உங்களை கட் பண்ண வேண்டி வருறப்போ..பேசப்போற வசனங்கள் அமைக்க உதுகள் உதவும்.)

4. உங்க காதலி.. அடுத்தவங்க கூட.. ஆவ் லைனில நின்று தான் கடலை போடும். (ஏன்னா.. காதலி கூட காதல் வாறப்பவே சந்தேகமும் வந்திடும்.. காதலிகளுக்கும் தான். நீங்க என்ன தான் சமாளிக்கப் பாடுபட்டாலும்.. அது காதல் போல இல்ல.. சொல்லாமல் கொள்ளாமலே வெளில வந்தே தான் தீரும். அதனால.. ஆன் லைனில நின்று.. நீங்க கண்ட கேள்வி கேட்டு குடைஞ்செடுத்துடுவீங்கலில்ல. காதலிக்கும் உங்க அதே டயலாக்கா கேட்டு கேட்டு அலுத்துப் போயிருக்குமில்ல. நாலு பசங்க கூட நாலு விதமா கடலை போடத்தானே காதலிகளுக்கும் பிடிக்கும்.)

5. மக்டொனால்ட்., கே.எவ்.சி. போனால்.. ஒரு ஒதுக்குப் புறமா ஒதுங்கிடுவீங்க. (அதுக்கு இரண்டு காரணம் இருக்கும் முடிஞ்சால் கண்டுபிடியுங்க. 1. உங்க சில்மிசத்துக்கு வசதியாக. 2.காதலிக்கு தன்னுடைய உறவினர்கள் தெரிஞ்சவர்கள் கண்டிடக்கூடாதென்று.)

6. அடிக்கடி உங்க காதலி  மூஞ்சியோட உங்க மூஞ்சிய உரச வைச்சுக் கொண்டு போட்டோ எடுத்து வைச்சுக்குவீங்க. அல்லது பேஸ் புக்கில இல்ல வேற போட்டோ போஸ்ரிங் அப்பில..போடுவீங்க.(பாசத்தில இல்ல.. காதலி எஸ் ஆகிடக் கூடாது என்பதற்கு ஆதாரமாக.)

7. காதலி கேட்காமலே.. கண்டதை எல்லாம் வாங்கித்தரவான்னு வழிவீங்க.(காதலிக்கு நீங்க அசடு வழியுறது அப்படியே தெரிஞ்சாலும் அது காட்டிக்காது. ஏன்னா வாற வரைக்கும் வரவுன்னு அது நினைச்சுக்கும்.)

8. காதலி நட என்னா.. நீங்க நாட்டியமே ஆடிடுவீங்க. (உங்களை காதலிக்கு முன்னால.. சூரியா.. லெவலில காட்டிக்கனுன்னு நீங்க நினைப்பீங்க. அது தப்பில்ல. ஆனா காதலிஉள்ளுக்க நினைக்கும்.. இந்த டம்மிப் பீஸை எப்படி கழட்டி விடுறதுன்னு.)

இந்த 8ம் நிச்சயம் நீங்கள் காதலிச்சா நடக்கும். நடக்கல்லைன்னு பொய் சொன்னா.. நீங்க ஆம்பிளையும் இல்ல.. நீங்க காதலிக்கிறது இக்காலப் பொண்ணும்  இல்ல..! இதை எல்லாம் சமாளிச்சு வென்றால் தான் அது 21ம் நூற்றாண்டுக் காதல் ஆகும்.


💌💌💌💌💌💌💌💌💌💌

0 comments:

Post a Comment