"பூ பூக்கும் நேரம் இது""பூ பூக்கும் நேரம் இது

பூவையர் வரும் காலம் இது

பூரித்த மனதுடன் காளையர் வண்டாய்

பூந்தேனை மொய்க்கும் நேரம் இது!"

 

"புன்னகை பூ முகத்தில் தவழ

புரியாத மோகத்தில் விழிகள் தேட

புதுமை அனுபவம் ஊசல் ஆட

புருவம் பேசும் காலம் இது!"

 

"தரிசு நிலத்திலும் பூ பூக்கும்

தருணம் வந்தால் மழை பெய்யும்

தலைவி நெஞ்சிலும் இடம் கிடைக்கும்

தளிர் விட்டு காதல் மலரும்!"

 

"மல்லிகை வாசம் மனதை கவர

மகரத் தோடு அழகை தர

மஞ்சள் நிலா குளிர் பொழிய

மயக்கம் தரும் நேரம் இது!"

 

"காதோரம் கொஞ்சி கெஞ்சி பேசி

காரணம் இன்றி ஊடல் கொண்டு

காம பாணம் நெஞ்சை துளைக்க

காதல்பூ மீண்டும் பூக்கும் நேரமிது!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment