அரசியல்வாதிகளின் அதிகார பலமும், சுரண்டும் சிந்தனையும்



உலகின் பல நாடுகளில் பஞ்சமும் பட்டினியும் ஏற்பட்டு அந்த நாடுகளின் மக்கள் எலும்பும் தோலுமாக வீதிகளில் அலைந்து உண்ண உணவின்றி விழுந்து மடியும் காட்சிகளை புகைப்படங்களிலும், காணொளிகளிலும்  பார்த்து அதிர்ந்து போய் போய் இருந்தோம். ஆனால் அதற்கெல்லாம் காரணம் இயற்கையின் செயற்பாடுகளும், அதன் விளைவுகளும் என்று தான் எண்ணியிருந்தோம். ஆனால் நாளடைவில் நாம் அறிந்து கொண்ட விடயங்கள் எமக்கு அதிர்ச்சியை கொடுத்தன. அந்த வறுமையும் பட்டினியும் சூழ்ந்து கொண்ட நாடுகளின் அந்த நிலைக்கு காரணம் மக்களோ ,  இயற்கையோ அல்ல. அந்தந்த நாடுகளின் அரசியல் அதிகாரங்களில் காலாதிகாலமாக அரசியல்வாதிகள் தான் இந்த நிலைக்கு காரணம்.

 ஆனால் இலங்கையிலும் இந்த இக்கட்டான நிலை வரும் என்று நாம்  எண்ணியிருக்கவில்லை. ஆமாம் இலங்கையின் பரம்பரை பரம்பரையாகவும், குடும்பம் குடும்பமாகவும் ஆட்சி செய்தவர்கள் தங்கள் அரசியல் பலத்தாலும், அதிகார பலத்தாலும் நாட்டை சூறையாடி உள்ளனர் என்பது தற்போது புலனாகி உள்ளது.

 அரசியல்வாதிகளின் அதிகார பலமும் சிந்தனையும் நாட்டு மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருகின்றனர் என்ற உண்மையை தத்துவவாதிகனான மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் போன்றவர்கள் பல இடங்களில் எழுதியும், பேசியும் இருந்தாலும் அதனை புறக்கணிக்க வேண்டும் என கண்டிப்பாக இருந்த அந்த வகையான மக்கள் விரோத அரசியல்வாதிகளே இலங்கை மட்டுமல்ல பல நாடுகளையும் அழிவு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் என்பது புலனாகின்றது. ஆனால் ஏற்கனவே சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கும் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல் கொள்ளையர்கள் தற்போது இலங்கையில் இவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எவ்வித அழுத்தங்களும் அடிபணியாமல், அவசியமான நபர்கள் அடங்கிய அமைச்சரவை ஒன்றை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இவ்வளவு அனுபவித்த சுகத்தை விட விரும்பாததே இந்த மரபுகளுக்கு காரணம் என்பது தற்போது மக்களுக்கு புரிந்த ஒன்றாகிவிட்டது.  புதிய அமைச்சரவை நியமித்து அரசாங்கத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன இடத்திலிருந்து தொடர வேண்டுமென ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய புதிய அமைச்சரவை நியமனம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் மக்கள் இவர்களை நம்புவதற்கு தயாராக இல்லை. தொடர்ந்து கோத்தபாயவை வீட்டுக்கு அனுப்பும் தங்கள் தொடர் போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர். அவர்கள் போராட்டம் வெற்றியடைய இலங்கையர் அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம்  உழைக்க வேண்டும்.

நன்றி:கனடா/உதயன் /நா.லோகேந்திரலிங்கம்

0 comments:

Post a Comment